எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
டிசம்பர்12 இல்
சௌகார் ஜானகி 90.!!!!!
அருமையாக இருக்கிறது கேட்க.
இனிய கம்பீர வாழ்வு வாழும் ஒரு அருமைப் பெண்ணிற்கு
அனேக வந்தனங்களும் வாழ்த்துகளும்.
என்றும் அழியாத இளமையும், வளமான முக பாவங்களும்,
சிறப்பான நடிப்பையும் நமக்குத் தந்து கொண்டிருக்கும் இந்த
இளைஞிக்கு நமஸ்காரங்கள்.
பாண்டி பசார் கடைகளில் இவரைப் பார்த்திருக்கேன்.
சகஜமாகப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்.
இவர் உயர்ந்த (உயரமான) பெண் என்ற கற்பனை:)
பார்த்தால் ஒரு சாதாரண குர்த்தா ,சல்வாரில்
கழுத்தோடு நின்று விட்ட முடியோடு,
கன்னம் குழிந்த சிரிப்போடு,
ஒரு சின்னம் சிறு அம்மாவைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம்.
அவரது படங்களிலிருந்து சில பாடல்களையும் காட்சிகளையும்
பகிர்வதில் எனக்குப் பெருமை.
என்றும் வாழ்க வளமுடன்.
உயர்ந்த மனிதன்
https://youtu.be/BjzO0hhE8FU
இப்பொழுதும் நடிகர் சந்தானத்துடன் ஒரு படம் நடித்திருக்கிறாராம். படம் பெயர் பிஸ்கோத்:)
18 comments:
ஆச்சர்யம். மனதில் இளமையும் உற்சாகமும் இருக்கும்வரை உடம்பின் தளர்வுகள் தெரியாது போல.. தில்லுமுல்லுவில் இவர் நடித்த போர்ஷன்கள் ரசனையானவை - தேங்காய் சீனிவாசன் பாத்திரம் போலவே. இப்போதும் ஒரு படத்திலா? சூப்பர்.
இவர் அளவு இவர் மகள் வைஷ்ணவி பேசப்படவில்லை.
திரிசூலம் படத்தில் சிவாஜி ஏதோ ஒரு வசனத்தில் 'அந்த ஜானகி' என்று பேசத்தொடங்க, அம்மா 'எந்த ஜானகி' என்று கேட்பார்.. சிவாஜி, "உம்... சௌகார் ஜானகி" என்பார். அது நினைவுக்கு வருகிறது. எதிர் நீச்சல் படத்திலும் கவனிக்கத்தக்க நடிப்பு.
அதிகம் சோகமான கதாபாத்திரங்களிலேயே நடித்திருப்பதாலோ என்னமோ எப்போதுமே இவரைப் பார்த்தால் என் மனதிலும் ஒரு சோகம் தாக்கும். அது தில்லுமுல்லுவையும், எதிர் நீச்சலையும் பார்த்த பின்னால் ஆச்சரியமானது. நல்லதொரு நடிகை. என்றென்றும் ஆரோக்கியத்துடன் வாழட்டும். இங்கே நீங்கள் போட்டிருக்கும் படங்கள் எல்லாமும் பார்த்து ரசித்தவை. பகிர்வுக்கு நன்றி.
நல்ல கனமான நடிப்புக்கு சொந்தக்காரர். அவரை அழுமூஞ்சி கதாநாயகி என்று பட்டம் கட்டி ஸ்டீரியோ டைப் ரோல்களே கொடுத்தது தமிழ் திரையுலகம். பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகிகளளில் ஒருவர்.
@Sriram: வைஷ்ணவி இவருடைய மகள் அல்ல, பேத்தி.
இந்த வயதிலும் உற்சாகம் ஆச்சரியம் !
சௌகார் ஜானகி - தில்லு முல்லு செமையா இருக்கும். ரசித்திருக்கிறேன். அட இப்போதும் படத்தில் நடித்திருக்கிறாரா? நடிகர் சந்தானத்துடன்? புதிய தகவல் அம்மா..
கீதா
சௌகார் ஜானகி இங்கு வொய்ட் ஃபீல்டில்தான் இருக்கிறார் இல்லையா? வயது 90 லும் ஆக்டிவ் என்றால் மனம் உற்சாகமாக தெம்போடு பாசிட்டிவாக இருக்கிறது!!
கீதா
அவ்ரது பேட்டி வாசித்த நினைவு. இளம் பிராயத்திலேயே ரேடியோவில் எல்லாம் ப்ரோக்ராம் செய்திருக்கிறார். படித்த கதாநாயகி. ஆங்கிலம் எல்லாம் சர்வசாதாரணமாகப் பேசுவார் அப்போதே என்பதும் தெரிந்தது. நல்ல ஆழமான நடிப்பை வெளிப்படுத்துவார். பல இடங்களில். ஒரு சில இடங்களில் அவர் குரல் ரொம்ப அதிகமாக இருப்பது போல் தோன்றும் என்றாலும் கண்கள் நன்றாக எக்ஸ்பெர்ஷன்ஸ் சொல்லும். தில்லுமுல்லு தவிர பார்த்த படங்கள் வெகு வெகு குறைவு. அவ்வளவாக நினைவும் இல்லை ஆனால் அவர் நடிப்புத் திறன் மட்டும் மனதில் இருக்கிறது.
நாகேஷ் மாதுவாக வருவாரே ஒரு படம் பாலச்சந்தர் படம்....எதிர்நீச்சல்? நன்றாக நடித்திருப்பார். இப்போதும் ஆக்டிவாக இருப்பது ஆச்சரியம். பாபா டிவோட்டி.
கீதா
மிகவும் ஆச்சரியமான விஷயம். நானும் சமீபத்தில் அவரது பேட்டி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. குரல் கூட வயதானதற்கான வித்தியாசங்கள் அவ்வளவு இருக்கவில்லை என்பதைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு சிலருக்கு இப்படி அமையும் போல இறைவன் சித்தம். நீங்கள் கொடுத்திருக்கும் படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். மிக்க நன்றி வல்லிம்மா
துளசிதரன்
"திரிசூலம் படத்தில் சிவாஜி ஏதோ ஒரு வசனத்தில் 'அந்த ஜானகி' என்று பேசத்தொடங்க, அம்மா 'எந்த ஜானகி' என்று கேட்பார்.. சிவாஜி, "உம்... சௌகார் ஜானகி" என்பார். ""
:)))))
நிஜமாகவா ஸ்ரீராம்!!!
நான் அந்தப் படம் பார்க்கவில்லை. சிவாஜியும் விஜயாவும் அழுவார்களே
அதுதானே.?
ஆமாம் சௌக்கார் ஜானகி இப்போது
முதியோர் இல்லத்தில் இருப்பதாகச் சொன்னது தெரியும்.
நடிகர் சந்தானம் படத்தில் நடித்திருப்பது சின்னவன் சொல்லித்தான் தெரியும்.
யூடியூபில் இருக்கிறது.
நீங்களும் ரசித்ததுதான் எனக்கு மகிழ்ச்சி .நன்றி மா.
அன்பின் கீதாமா,
உண்மைதான். தம்பி கூட அழுமூஞ்சி கதானாயகி என்றே
சொல்வான். நல்ல வேளை எதிர்னீச்சல் அதை மாற்றியது.
இன்னும் படங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த சில
காட்சிகளைப் பதிந்தேன் மா.
மிக நன்றி.
நல்ல கனமான நடிப்புக்கு சொந்தக்காரர். அவரை அழுமூஞ்சி கதாநாயகி என்று பட்டம் கட்டி ஸ்டீரியோ டைப் ரோல்களே கொடுத்தது""
அன்பின் பானுமா,
உண்மையான சொல். தங்கையாக
ஒரு படத்தில் வந்தால் தங்கையாகவே இருந்துவிடுவார்கள். நண்பனாக வந்தாலும் அதே கதிதான்.
தப்பியவர்கள் சிலரே.
வந்து படித்து கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.
அன்பின் மாதேவி
நலமாப்பா. ஆமாம் மனசுக்கு மிக நெகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
நன்றி மா.
@ Geetha Rengan
சௌகார் ஜானகி - தில்லு முல்லு செமையா இருக்கும். ரசித்திருக்கிறேன்."
மிக ரசித்த படம் கீதாமா.
எல்லோருமே சிறப்பாகச் செய்திருப்பார்கள்.
ரஜினி உட்பட.தேங்காய் பிரமாதம்.
சின்ன மகன் சொல்லித்தான் இந்த விவரம் எல்லாம்
தெரியும் மா.
@ Geetha Rengan
Blogger Thulasidharan V Thillaiakathu said...
சௌகார் ஜானகி இங்கு வொய்ட் ஃபீல்டில்தான் இருக்கிறார் இல்லையா? வயது 90 லும் ஆக்டிவ் என்றால் மனம் உற்சாகமாக தெம்போடு பாசிட்டிவாக இருக்கிறது!!""""
ஆமாம் பா. நமக்கெல்லாம் உற்சாகம் தருகிறார்.
@Thulasitharan Thillaiyakaththu.அன்பின் துளசிமா,
உண்மைதான். மனம் தளராவிட்டால் உடலும் நன்றக இருக்கும் என்பதற்கு அவரே சாட்சி.
நலமாக இருக்கட்டும் நன்றி மா.
Post a Comment