Saturday, September 05, 2026

முதுமையின் இரவும் பகலும் 4


வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான்.
அனைவருக்கும்


கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள்
தீரும்
கண்ணன் பிறந்து சிறப்பித்த நாள் இன்று.
கண்ணன் இருக்கக் கவலை ஏன்...
ஆவணி ரோகிணி அஷ்டமி சிறக்க வந்த எம்பிரான்
அனைவரையும்  சிறப்புறக் காப்பான்.

பழைய பதிவொன்றைத் தூசி தட்டி இன்னும் சுவை
கூட்டிப் பதிவிடுகிறேன். முன்கதை சுருக்கம், 
அறுபதை எட்டிய மனைவியை  அலுப்பிலிருந்து
மீட்கக் கணவன் மேற்கொள்ளும் அன்பு முயற்சி.

கலங்கியவளை எப்படி மீட்பது என்று யோசித்த
ராகவனுக்குத் தோன்றியது புது எண்ணம்.
வண்டியை ஒரு லாங் டிரைவ்க்கு உபயோகப்படுத்தினால்
என்ன ?மனசு தெளிவாகும் . புதுக் காற்று  
அனுபவிக்க ஜானகியும் தெளிவடைவாள்.

தனக்கே உற்சாகம் பிறப்பதை உணர்ந்தான். இந்த 
66 வயதில் நமக்காக  என்ன செய்திருக்கிறோம்?
எப்போது பார்த்தாலும் பயணம், அலுவலகம், அன்னியர்களுடன் 
பேச்சு, மீட்டிங், விராலி மலை  பாக்டரி   ஸ்ஸ்ஸ்ஸப்பா. போதும் இந்த அலைச்சல்.

மனம் பரபரக்க அடுத்த நிமிடம் கரங்கள் செயல்பட தன்
உதவியாளரை அழைத்து அன்றைய
ஏற்பாடுகளை ரத்து செய்தான்.

இன்னும்  ஒரு மாதத்துக்குத் தான் விடுமுறையில் இருப்பதாகவும்
குடும்பத்தில்  ஒரு எமெர்ஜென்சி,,, உடனே கவனிக்க வேண்டும்
என்று  அவரிடம் சொல்ல
அவர் திகைத்தாலும்  தன் ''பாஸ்'' சொல்வதைச் செய்ய ஆரம்பித்தார்.

ராகவனின் திட்டம் பெரிதாக இருந்தது.
கீழே அந்த லிஸ்ட்.
1  மதுரைக்கு தனக்கும் மனைவிக்குமான விமான பயணம்.
2, அங்கே  டி வி எஸ் விருந்தினர் மாளிகையில்
ஒரு மாதம் தங்கி சுற்றி இருக்கும் தலங்களுக்கும்
கொடைக்கானலுக்கும் சென்று வர நல்லதொரு
வண்டி  +ஓட்டுனர் மாயாண்டி.
3,அழகர் மலை
திண்டுக்கல்,வைகை அணைக்கட்டு
கோடைக்கானல் விடுதி.
4,சமையலுக்கு ஆள், தூய்மைப்படுத்த ஒருவர்.

திகைத்தார் உதவியாளர் சீனு.
அத்துடன் நிற்கவில்லை ராகவன். 
''உனக்கும் விடுமுறை தேவை. நீயும் உன்
பிறந்த ஊர் கும்பகோனத்துக்கு சென்று

நிம்மதியாக இருந்து  வா.''
நம் கம்பெனி எங்கயும் போகாது. சரியான
ஆளை நியமித்துவிட்டு நீயும் கிளம்பு என்றார்.








No comments:

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...