இரவும் பகலும் இவை எல்லாம் நலமே.
இந்தக் கதையின் ஆதாரமாக இன்னோரு கதை உண்டு.
1976இல் என் தாய்க்கு 60 பூர்த்தியானது. இந்த நிகழ்வுக்கு
ஒருவாரம் முன்னால் தான் நாங்கள் சேலத்திலிருந்து
சென்னைக்கு மாற்றலாகி வந்தோம்.
திருமணமாகி உடனே புதுக்கோட்டை சேலம் என்று சென்று விட்டோம்.
அதனால் குடும்ப நிலவரம் எல்லாம் கொஞ்சம் தடுமாற்றம் தான்.
பாட்டி வேறு வெகு கண்டிப்பாக இருப்பார்.
என் சகோதரிகள் அடிக்கடி வந்து போவார்கள்.
ஜானகிக்கு ஓயாத உழைப்புதான்.
அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு சகோதரிகள்
புடவைகள் வாங்கி வந்து இனிப்புகள் செய்து
கொடுத்து மகிழ்ந்தபோது தான், பாட்டி ஒரு சொல்லம்பு தொடுத்தார்.
''ஏன் ஜானா உன் பெற்றோர் வந்திருக்கலாமே. இங்கே மஹாபலிபுரத்திலிருந்து
சென்னை வந்து சம்பந்தியை வாழ்த்துவதில்
என்ன சிரமம் இருக்கு ?'' என்று கேட்க
ஜானகி, ''பாட்டி ...அவர்களுக்கு அம்மா பிறந்த நாள் பற்றித் தெரியாது.
அப்பாவுக்கும் இப்போ உடல் நலம் சரியில்லை.
அடுத்தவாரம் பரிசோதனை செய்து கொள்ள வருவார்கள்.
ஜானுவின் அப்பாவுக்கு அல்சர் பிரச்சினை இருந்ததால்
அவர் அந்த வருடம் ரிட்டயராக நினைத்திருந்தார்.
வார நடுவில் லீவு எடுக்க முடியாது.
அப்பாவை நினைத்தால் ஜானுவின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும்.
மாமியாரின் உறவுகள் வந்து போனபிறகு, வீட்டுக்கு அருகில் உள்ள தொலைபேசி பூத்துக்குச் சென்று அப்பாவுக்கு
டிரன்க் கால் பேசினாள். ''அப்பா எங்க மாமியாருக்கு
இன்னிக்கு அறுபது நிறைகிறது. நீயும் அம்மாவும், போனில்
வாழ்த்துகள் சொல்லுங்கள்'' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு, மறக்காமல் அதிகப்படி பாக்கெட் பாலையும்
வாங்கி வந்தாள். அடுத்த சாய் (டீ)செஷன் ஆரம்பிக்கணுமே!!
அடுத்த நாள் வெள்ளியன்று காலை 10 மணிக்கு திரு நாராயணனும் ஜெயலக்ஷ்மியும் தட்டு நிறைய மல்லிகை, திரட்டிப்பால்,என் தாயாருக்கு அப்போது பிரபலமாக இருந்த தேவேந்திரா புடவை ஒன்று. உமாராணி என்று அப்போது
அதற்குப் பெயர் எங்கள் வீட்டுக்கு ஆஜரானார்கள்.
''எனக்கு உங்களுக்கு 60 நிறைவது தெரியாது..தாமதாக வருகிறோம்'' என்று மன்னிப்புக் கேட்டபடி பாட்டி
பாதங்களிலும் என் அம்மா பாதங்களிலும்
விழுந்து வணங்கினார்கள்.
இந்த சம்பவம் 1976இல்.
இப்போது நினைத்தாலும் மனம் சங்கடப் படுகிறது.
மீண்டும் பார்க்கலாம்.
ஜானகி ராகவன் கதை என் வாழ்க்கையிலும், தம்பிகள்
வாழ்க்கையிலும் கலந்து கட்டி எழுதப் படுகிறது.
தம்பியின் பெயர் ராகவன். அவன் பெயரில் அவதாரம் எடுப்பவர் எங்கள் சிம்மம் ஆகிய நரசிம்ஹன்.
எனக்கும் என் அம்மாவுக்கும் என் மனைவிக்கும்
இருந்த பந்தம் வினோதமானது:)



6 comments:
சொல்வது யார். யாரை என்பது சற்று குழப்பமாக இருக்கிறது அம்மா. கடைசி வரி என் மனைவி என்று வேறு வந்திருக்கிறது!
வாழ்த்துச் சொல்ல வராததும் தாமதமாக வருவதும் குற்றமாக பார்க்கப் பட்டதா? ஆனால் மனதில் தோன்றும்தயான். என் மாமியார் 18 நாட்கள் மருத்துவமனையில் போராடி நேற்றிரவு டிஸ்சார்ஜ் ஆனார். இன்னமும் படுக்கைதான். என் அண்ணன் வீட்டினர் அருகேயே இருந்தும் கூட பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை என்பதை பார்த்து ஆச்சர்யப்பபட்டேன்.
அன்பின் ஶ்ரீராம். எப்பவும் நலமாக இருக்க பிரார்த்தனைகள். என் மனைவி ரேவதி. ராகவன் என்பது நரசிம்மன். 16 வருடங்களுக்கு முன் என் நிஜப் பெயரைச் சொல்ல பயம். இப்போது அந்தக் கதையை வேறு போக்கில் திருப்பி இருக்கிறேன். நன்றிமா.
அன்பு ஶ்ரீராம், இவர்கள் வீட்டு சம்ப்ரதாயங்கள் எங்க வீட்டுக்குப் புதுசு. என் பெற்றோர் மிகப் பயந்த சுபாவம்.
பாட்டியின் சொற்களின் வீர்யம் எனக்குப் பழகிவிட்டது. அவர்களுக்குத் தெரியாது.
உங்கள் மாமியார் உடல் நலம் இல்லாமல் இருந்தார்களா .. கேட்கக் கஷ்டமாயிருக்கிறது.
காலம் நிறையத்தான் மாறிவிட்டது நீங்கள் எவ்வளவு பொறுப்பாகப் பார்த்துக் கொண்டீர்கள் என்று எனக்குத் தெரியும். பக்கத்தில் இருப்பவர்கள் விசாரிப்பது இயல்பான செயல் இல்லியோ:( கவலை வேண்டாம். செயல்களும் சொற்களும் நம்மை நோக்கி மீண்டு திரும்பும்.
கதை படிக்க நன்றாக இருக்கிறது. அனுபவம் கேட்டது என்று கலந்து கட்டித்தான் எழுத முடியும். தேங்காயை உடைத்த மாதிரி தன் வரலாறு எப்படி எழுத இயலும்?
இருந்தாலும் புரிந்துகொள்வதில் கொஞ்சம் சிரம்ம் இருக்கிறது, சொல்வது யார் என்ற குழப்பத்தினால்
அன்பின் முரளிமா, நன்றி மா. எழுத ஆரம்பித்தவுடன் பல சிரமங்கள். பழையதை நினைத்து வருத்தம் வேற:)
குழப்பத்தை அதிகரிக்க இந்த நேபால் வெள்ளம் இன்னும் கவலை. தெளிந்த பிறகு எழுதுகிறேன் மா.
Post a Comment