Blog Archive

Sunday, February 22, 2009

மழையில் ஒரு நாள்----1






மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம் மீறி மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரெ ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.
அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)
வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.
ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.
இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம்.
நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி
செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி'
என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.
இரன்டு மூன்று வருடப் பழக்கம்.
அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் பம்பாயிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் செர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.
அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,
பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப
அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
(தொடரும்)




9 comments:

சந்தனமுல்லை said...

:-) ஹ்ம்ம்..அப்புறம் என்னா ஆச்சு??

கோபிநாத் said...

ஆகா..கதையா!! நாங்க ரெடிம்மா ;)))

மழையில் நனைந்து விட்டோம் அடுத்து வெயிலுக்கு வெயிட்டிங் ;)

வல்லிசிம்ஹன் said...

மீதியை வெள்ளைத்திரையில் காணவும்.
நன்றி சந்தனமுல்லை.

இது ஒரு சிறு முயற்சி எழுத வருமான்னு பார்க்க.P:)

வல்லிசிம்ஹன் said...

கோபி

உண்மையா சொல்லணும். கதை சுமார்...a

நல்லா இருக்கு...b

ஐயோ ஏம்ம்மா கதையெல்லாம் எழுதறீங்க:)c

நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

அழகு நடையில் ஆரம்பித்திருக்கு கதை அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தருகிறது.

KarthigaVasudevan said...

இப்படி பாதில நிறுத்திட்டா எப்படி? மீதிக் கதையை சீக்கிரம் தொடருங்கள் வல்லிம்மா.நல்ல ஆரம்பம் ...ஆகட்டும் சீக்கிரம் தொடருங்கள் ...வெயிட் பண்றோமே ?!

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா...புது முயற்சி அருமை....தொடருங்கள் படிக்க காத்திருக்கிறேன். :-)

வல்லிசிம்ஹன் said...

மீதிக்கதையும் போட்டாச்சும்மா
கயல்பரணி.

நேஎத்திக்கே போட்டுட்டேன். நீங்க எல்லாம் இதைக் கதைன்னு ஒத்துண்டதுல எனக்குத் தருமி மாதிரி சந்தோஷம்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி சார்:)

தொடர்ந்து முடிச்சுட்டேன்.