எல்லா அன்பு இதயங்களையும் மகிழ்விக்கட்டும்.
காதலுக்குக் கணவன் மனைவிக்கும் தனி தினம் வேண்டாம்தான். ஆனால்
ஒரு உற்சாகம்,
எளிய பூ,நாமே
உருவாக்கின அன்பைப் பதிந்த அட்டை
எல்லாமே ஆனந்தத்தைத்தான் கொடுக்கின்றன.
வேலைக்குச் செல்லும் இரு தம்பதியினரும் ஒருவருக்கொருவர் சில மணித்துளிகளாவது தங்கள் மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
தினமாக இந்த நாளைப் பயன்படுத்தினால் பயன்கள் அதிகம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.
குழந்தைகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் அவர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியைகளுக்கும் வாலண்டைன் கார்டுகள் பரிமாறிக் கொள்ளும்போது இந்தத் தினத்துக்கு இன்னும் சிறப்பு கூடுகிறது.
காதலிப்பவர்களுக்கும், காதலித்து மணந்தவர்களுக்கு, அன்புக் குழந்தைகளும்
இந்த அன்பு தின வாழ்த்துகள்.
13 comments:
//ஒருவருக்கொருவர் சில மணித்துளிகளாவது தங்கள் மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க//
பார்த்தேன் வல்லிம்மா கண்ணுக்கெட்ட்ய தூரம் வரை சிவப்பு ரோஜாவா கொட்டி கிடக்கு துபாய் டூ மாயவரம்:-))
பதிலுக்கு அங்கிருந்தும் பார்வை வந்தது "இந்த மாசம் இன்னும் ஏன்ப்பா கிரடிட் ஆகலை?":-))
ஆஹா அபி அப்பா. இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!!!!!!!!!!!!
கிருஷ்ணாவுக்கு என் கோடி முத்தங்களை, என் சார்பில் நீங்களும் குழந்தைகளும் கொடுங்கள்.
வல்லிம்மா! ச்சும்மா டமாஷுக்கு:-))
எல்லோரூக்கும் வாழ்த்துக்கள்!
//ஆஹா அபி அப்பா. இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!!!!!!!!!!!!
கிருஷ்ணாவுக்கு என் கோடி முத்தங்களை, என் சார்பில் நீங்களும் குழந்தைகளும் கொடுங்கள்.
//
கண்டிப்பாக வல்லிம்மா! கோடியிலே ஒன்னு ரெண்டு குறைந்தாலும் ஓரளவு முயற்சிக்கிறேன்!
நன்றி வல்லிம்மா!
இதையே தினப்படி வழக்கமாகக் கொள்ளப் போவதாக மயீலைவட்டாரங்கள் சொல்ல்கின்றான. மயிலை(மாயவரம்):)
அனைவருக்கும் அன்பு தின வாழ்த்துகள் ;)
உங்களுக்கும் தான் கோபிநாத்:)
நன்றி ஹை, நாங்களும் வாழ்த்துக்கள் சொல்லிகிட்டோம் வெப் காமில! :))
நல்லாச் சொல்லிருக்கீங்க...வாழ்த்துகள்.
அட, அதுக்குள்ள வெப்காம் காதலாயிடுத்தா:)
இரூந்தாலும் வாழ்த்துகள் வாழ்த்துகள் தான்:)
வாங்கப்பா பாசமலர்.
நன்றிம்மா. உன்ங்க்க குடும்பத்துக்கும் எப்பவுமே பாசம் மேலோங்க வாழ்த்துகள்.
நன்றி திரு விஜி .அப்படியே செய்கிறேன்.
Post a Comment