Blog Archive

Monday, November 25, 2019

படங்களுடன் வில்லிபுத்தூர்சென்றவழி . 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

படங்களுடன்  வில்லிபுத்தூர்  கோவில்கள்.

மதுரை பழங்காநத்தத்திலிருந்து  அடுத்த நாள் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கிளம்பும் பொழுது , ஊருக்குள் செல்லும் சாலையைச் சென்று பார்த்தோம். ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை.
அந்த அழகான காலனி எங்கு சென்றது?

அதைச் சுற்றி  இருந்த  வயல்கள் எங்கே சென்றன. 
பயிர்கள் இல்லாத காலத்தில்  வந்த சினிமாக் கொட்டகை எங்கே.

எப்படி சென்ற காலத்தைத் திருப்ப முடியாதோ அது போல நிகழ்ச்சிகளை  மட்டும்  நினைத்துப் பார்த்துக் கொண்டே ன் 

மகன் என் முகத்தைப் பார்த்து ஆறுதல் சொன்னான். ஏம்மா சிவாஜி பாடுவது  போல,,
 பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாடிப் பார்த்துக்கோ.
நம் சென்னையே எவ்வளவு மாறிவிட்டது .
அந்தக் கால ஒட்டு வீடுகள் இன்னுமா இருக்கும்.

நிலத்தின் விலை பல லட்சங்கள் ஆகிறதாம்.

எந்த எந்த மக்கள் எந்த ஊருக்குச் சென்றார்களோ.
நாமே மாறி விட்டோம்.ஒரு சின்ன கிராமமா 
அப்படியே இருக்கும் என்று சொல்லும்போதே அந்த ஆஞ்சநேயர் கோவில் கண்களில்  பட்டது.

பக்கம் செல்ல முடியாதபடி  பள்ளம் வெட்டி இருந்தார்கள். ஆண்டவன் அழியாதவன். அவன் கோபுரம் கண்டோமே 
என்ற நிம்மதியோடு கிளம்பினோம்.


Image result for KOVALAN POTTAL ,MADURAI
Add caption
Image result for KOVALAN POTTAL ,MADURAI

Image result for PALANGANATHAM,MADURAI

சென்றவழி 

15 comments:

நெல்லைத்தமிழன் said...

வாழ்ந்த, பழைய இடங்களுக்கு மீண்டும் சென்றால் மனதில் வெறுமைதான் மிஞ்சுமோ?

KILLERGEE Devakottai said...

பழைய நினைவுகள் பசுமையானவையே...

Geetha Sambasivam said...

நம் நினைவுகள், கனவுகள் அழிக்கப்படும்போது மனம் துயரத்தில் ஆழ்ந்து தான் போகிறது. பழங்காநத்தம் என்றால் எனக்கு இன்னமும் எங்கள் உறவினர் இருந்த வீடும் அந்தத் தெருவும் தான் நினைவில் வரும். இப்போது அவை எல்லாம் இல்லாமல் போயிருக்கும்.

ஸ்ரீராம். said...

நெல்லைத்தமிழனின் கேள்வி மனதில் சுற்றுகிறது.

கோமதி அரசு said...

// ஊருக்குள் செல்லும் சாலையைச் சென்று பார்த்தோம். ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை.
அந்த அழகான காலனி எங்கு சென்றது?//

அங்கு இப்போது கடைகள் வந்து விட்டதா? வீடுகளே இல்லையே ! சரவணாஸ்டோர் பக்கம்

//பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாடிப் பார்த்துக்கோ.//

மகன் சொன்னது போல் பாடி பார்த்தீர்களா? நல்ல பாடல்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளி மா. ஒரு இடம் 50 வருடங்கள் மாறாமல் இருக்குமா.
புது இடத்தைப் பார்ப்பது போல, எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நான் கற்ற
பாடம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அன்பு தேவகோட்டை ஜி.
நினைவுகளுடன் வாழ்வதே உத்தமம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.

பழகின இடங்கள் ஒன்றும் எனக்குத் தென் படவில்லை.
பழங்கானத்தம் என்ற பெயரே மிச்சம்.

ஐம்பது வருடங்கள் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லைம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், கடந்த காலம் கடந்தகாலமாகத் தான் இருக்கும்.
நாம் அதை உணரத்தான் வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
சரவணா ஸ்டோர்ஸ் பார்த்தேன்.
அதுதான் ஊரா. நானும் போய் வந்த பிறகு கூகிளில் தேடினேன்
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது.

துரை செல்வராஜூ said...

நினைவில் வைத்திருப்பதே நிம்மதி...

பழசெல்லாம் நினைவுக்கு வந்தாலே
நெஞ்சு கனக்கிறது....

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
அதுதான் இதற்கு விடை. நினைவே நிம்மதி.
மிக மிக நன்றி ராஜா.
நல்ல நினைவுகள் போதும்.

Anuprem said...

மாற்றங்கள் தானே மா மாறாதது...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அனு,
அது ஒன்று தான் நிஜம். நன்றி மா.

மாதேவி said...

பசுமை நினைவுகள் என்றும் நினைவில்...