இரட்டைத் திருப்பதிகளில் குளம்.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்த போது காலை பத்து ஆகிவிட்டது. எங்களை வழிகாட்டி அழைத்து செல்பவருக்கு காத்திருந்து அலுத்து விட்டது போல.
தொலைபேசியில்
அழைத்ததும் வந்து விட்டார் ஈஸ்வர மூர்த்தி.
முதலில் அழைத்துச் சென்றது ஆண்டாள் நாச்சியார் சந்நிதிக்குத்தான்.
திருமஞ்சனத்துக்கே வருவீர்கள் என்று நினைத்தேன்.
நேரமாகிவிட்டது விரைந்து வாருங்கள் என்று
சொன்னார்.
மகன்கள் நடைக்கு என் மனம் விரைந்தாலும் கால்கள் ஓடவில்லை.
இங்குதான் தூண்களை சுற்றினோம். இந்தக் கடைகளில் தானே ஸ்நானபொடி டி வாங்கினோம். ,பால்கோவா சுவைத்தோம் என்று
நிலத்தை உணர்ந்த மனம் சொல்லியது.
யானைக் கொட்டாரம் என்று மனம் அரற்றினாலும்
தாயாருக்கு அப்புறம் தான் எல்லாம் என்ற படி படிகள் ஏறி மண்டபத்தைக்
கடந்து அவள் சந்நிதானத்துக்கே வந்து விட்டோம்.
பளீரென்ற வெளிச்சத்தில் எப்போதோ கண்ட தாய் அப்படியே
படிக்கு அந்தப் பக்கம் கைத்தளத்தில் கிளியுடன்,
அபயம் கொடுக்கும் பார்வையுடன், தினம் தோறும் மாலையிட்டு மகிழ்ந்த
நாயகனுடன்
அவனை விரைவில் தன் மேல் ஏற்றி க் கொண்டு வந்த கருடாழ்வாருடன்
மணக்கோலத்துடன்
அருள் பொழிந்தாள் அன்னை.
பார்த்துப் பூரிக்க முடியாமல் கண்ணை மறைத்த நீர்.
நன்றாகச் சேவித்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிடும் பட்டாச்சாரியார்.
என் தம்பி மேலிருந்த அன்பில் என் கைகளில் இரு கிளிகளைக் கொடுத்து விட்டார்.
அப்படியே இரு பையன்களின் கைகளிலும் கொடுத்து விட்டேன்.
ஆண்டாளுக்காக ஸ்ரீரங்கனிடம் தூது சென்ற கிளி . இதோ இந்த வீட்டில் அரிசிப் பாத்திரத்தில் இரு கால்களையும் ஊன்றி என்னைப் பார்க்கிறது.
கிளி வாடவே நாட்களாகும். வாடினாலும் பழுதில்லையாம் !!!!!!
தெய்வக கிளியல்லவா
தாயின் கிளி.
தம்பி முரளிக்கு அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழக்கம்
இருந்தது. அங்கு நன்மைகள் சிலவும் செய்திருக்கிறான்.
அதை மறக்கவில்லை அந்த அர்ச்சகர். கூடவே வந்து
சக்கரத்தாழ்வார் சந்நிதி , வடபத்ர சாயி கோவில் இரண்டுக்கும் அழைத்துச் சென்றார்.
துளசிவனம், ஆண்டாள் அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு .
வட பத்ர சாயியின் உருவமோ பிரம்மாண்டம். பச்சை வர்ண முக மண்டலம் .
தம்பதிகளுடன் கருடாழ்வாரும் இருக்கிறாரே என்ற செய்தி தெரிந்திருந்தாலும் அர்ச்சகர் சொன்ன விவரம் சுவாரஸ்யமாய் இருந்தது. பாரதப் போரின் பொது
கண்ணன் கீதை உரைத்ததை அனுமன் அர்ஜுனனின்
தேர்க்கொடியில்
இருந்து கேட்டதும் கருடனுக்குப் பொறுக்க வில்லையாம்.
உடனே அர்ஜுனனின் தேர்க் குதிரைகளில் தான் ஒன்றாகி விட்டாராம்.
கீதை உரைகளை மனதில் இருத்தி உலகத்தாருக்கு உரைக்கவே
பெரியாழ்வாராக அவதாரம் எடுக்க,
பூமா தேவியும் துளசி வனத்தில் குழந்தையாக
வந்துதிக்க இருவரும் பாசுரங்களில்
கீதையை அருளிச் செய்தனராம்.அதற்குத்தான் இருவருடன் கருடாழ்வாரும் ஒரே இடத்தில் உத்சவராக எழுந்தருளுகிறார் என்று சொன்ன உரை என்னை வியப்பிலாழ்த்தியது.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சரித்திரம் ஸ்ரீ ஆண்டாளுடையது.
தொடரும் புனிதம் .
|
14 comments:
மாமாவின் அன்பும் தூது சென்ற கிளிமூலம் இருமகன்களுக்கும் கிடைத்து இருக்கும். மகிழ்ச்சியான தருணம்.
மனம் போல் தரிசனம் கிடைத்து இருக்கிறது.
படங்கள் நன்றாக இருக்கிறது.
பட்டாசாரியார் சொன்ன கருட புராணம் இது வரை கேட்டிராத ஒன்று. உங்கள் படங்களும் விபரங்களும் மறுபடி மறுபடி ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் ஆவலை உண்டாக்குகிறது. அழகான கிளி, கொஞ்சுகிறது உண்மையிலேயே! யானைக்கொட்டாரம் போனீங்களா இல்லையா? :)))))
அருமை
தொடர்கிறேன் அம்மா.
படங்கள் துல்லியம். விவரம் சிறப்பு.
எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன -
ஆண்டாளின் சந்நிதிக்குச் சென்று...
ஆனாலும் அவள் அன்பு கொண்டிருக்கிறாள்
என் மீது!....
ஸ்ரீ வில்லிபுத்தூர் திருக்கோயிலுக்குள் படமெடுக்க அனுமதிக்கின்றார்களா!....
அங்கே ஸ்ரீ சக்ரத்தாழ்வார் வரப்ரசாதி....
அழகழகாகப் படங்கள்.. மகிழ்ச்சியம்மா...
அன்பு கோமதி மா.ஆமாம். நல்லவர்கள் நம்முடன் பிறப்பதால் இறைவியின் கருணையும் நம்மை வந்து சேருகிறது. நன்றி மா.
அன்பு கீதாம்மா. கோவில்களில் நேரம் ஆகி விட்டது.திருநெல்வேலி பொழுதொடு போய் சேரனும் என்கிற நிர்ப்பந்தம். உடல் ஒத்துழையாமை எல்லாம் காரணம். ஆதங்கத்துடன் தான் கிளம்பினேன். அனை தரிசனம் கிடைக்கவில்லை மா.
நன்றி ஜெயக்குமார் மா.
நன்றி ஸ்ரீராம்.
அன்பு பாணுமா.எல்லாம் அவள் அருள்.
அன்பு துரை. அன்னைக்கு.எது கணக்கு.என்னை 60 வருடங்கள்.சென்று.அழைத்தாள். உங்களையும் அமைத்து அழைப்பாள்.
இனிய தரிசனம் நாங்களும் பெற்றோம்.
Post a Comment