குறுங்குடி வல்லி
அமெரிக்காவை வீட்டுக் கிளம்பி சுவி ட்சர்லாந்த் வந்து ஒரு வாரம் தங்கி , சென்னை கிளம்பினோம்.
வீட்டில் தண்ணீர் இல்லை. சென்னை அவ்வளவு வறட்சி காணாவிட்டால் எங்கள் மைலாப்பூரில்
நிறைய வீடுகளில் இந்தப் பிரச்சினை இருந்தது.
வீட்டைச் சுத்தம் செய்யவாவது தண்ணீர் இருந்தது மகிழ்ச்சியே.படுக்கைகளில் பூச்சிகள் வந்து விட்டன.
நல்ல ஆட்களை அழைத்து சுத்தம் செய்து , விருப்பப்பட்டவர்களை எடுத்துக் கொள்ளச் சொன்னோம்.
மீண்டும் சுத்தம் செய்து வெய்யிலில் காய வைதிக பிறகு உபயோகப் படுத்த சொல்லி
எச்சரிக்கை கொடுத்தபிறகு எஜமானர் வருகைக்கு அகத்தைச் சுத்தப் படுத்தினோம்.
அவருக்குப் பிடித்த தங்கைகள், தம்பிகளை
அழைத்து எட்டாம் தேதி அவர் வருகையை சிறப்பாக நடத்தி முடித்தோம்.
அடுத்த கட்டமாக எங்கள் நெடு நாளைய ஆவலாக வேர்களைத் தேடிய பயணம் ஆரம்பித்தது.
|
19 comments:
அன்பின் வணக்கம்...
எல்லாம் நலமாக வேண்டுகிறேன்...
நன்று வாழ்த்துகள் அம்மா.
நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து நம் வீட்டைப் பார்க்கையில் தொண்டை அடைத்துக்கொள்ளும். சமாளித்திருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் பயண விபரங்களுக்குக் காத்திருக்கேன்.படங்கள் அட்டகாசம். கண்ணாடி அறை ஆண்டாள் அற்புதக் காட்சி.
மதுரை வந்து இருந்த உங்களை பார்க்க முடியாமல் போய் விட்டது வருத்தமே!
நீங்கள் இருக்கும் நாள் பழைய வீட்டில் வேலைகள், அண்ணன் வீட்டில் காவிரி அம்மன் பூஜை என்று போய் விட்டதால் பார்க்க முடியவில்லை.
நல்ல சந்தர்ப்பம் நழுவி போய் விட்டது.
படங்கள் எல்லாம் அழகு.
சாரின் வருகை விழா சிறப்பாக நடைபெற்றதும், உங்கள் நெடு நாள் ஆசையான் கோவில்கள் , அம்மா வாழ்ந்த ஊர் பயணம் எல்லாம் சிறப்பாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
சுருக்கமான ஆரம்பம்! தொடர்கிறேன் அம்மா.
சந்திக்க வாய்ப்பு அமையலயே...
எங்க ஊருக்கெல்லாம் விசிட் பண்ணினதைப் படிக்க ஆசை.
ஆரம்பமே ரொம்பச் சுருக்கமாக இருக்கு. விரிவாக, முடிந்த அளவு எழுதுங்க வல்லிம்மா.
அன்பின் துரை.நலமாப்பா.
இன்னும் களைப்பு தீரவில்லை.சுருக்கமாக எழுதிவிட்டேன்.
நீங்களும் குடும்பமும் சிறக்க வாழ்த்துகள்.நன்றி மா.
அன்பின் தேவகோட்டைஜி. நீங்களும் குடும்பத்தின் புது வரவு பேத்தி,
மற்றவர்கள் எல்லோரும் நலம் என்று நம்புகிறேன்.
உடம்பு கொஞ்சம் ஓய்வு கேட்கிறது. மீண்டும் எழுதுகிறேன். வருகைக்கு நன்றி மா.
அன்பு கீதாமா,
உண்மைதான் மா. பல இடங்களில் வர்ணம் பெயர ஆரம்பித்திருக்கிறது.
அதில் ஆரம்பித்து பல பிரச்சினைகள். அங்கேயே இருந்து நிவர்த்தி
செய்ய வேண்டும். பையர்களுக்கு முடிந்ததை செய்தார்கள்.
பயணங்களும் நிறைவாக இருந்தன. நன்றி மா.
அன்பு கோமதி மா.
மதுரையில் ஒரு இரவுதான் தங்கினோம். மிச்ச 3 இரவுகள்
நெல்லையில் தான்..
அதனால் கவலை வேண்டாம். பழங்கானத்தம் பழைய படி இல்லை. மிக மாறிவிட்டது.
மனித நேயம் அப்படியே இருந்ததுதான் மகிழ்ச்சி.
வில்லிபுத்தூர் மண்ணை மிதித்ததும் ஒரு புண்ணியம்.
இனி ஒரு பயணம் வாய்த்தால் பார்க்கலாம் மா.
நலமுடன் இருங்கள்.
முக்கிய நிகழ்ச்சியான சாரின் காரியம் உறவினர்களுடன் சிறப்பாக நடந்ததும் கடவுள் அருள்,
நன்றி கோமதி மா.
அன்பு ஸ்ரீராம்,
நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நானும் இருக்கிறேன் என்று காட்ட முதல்படி:)
நன்றி மா.
அன்பு முரளிமா,
வாரத்தில் இரு நாட்கள் இங்கே இணையம் படுத்தும் என்று மருமகள் சொன்னார்.
தாமதமாகி விட்டது.
கீழனத்தம் இனிமையான அனுபவம்.
நாம் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே,.
அலைபேசி இயக்க முடியாமல் மிக சங்கடம்.
எல்லாம் ஒரு பாடம் தான். நாமே நடத்துகிறோம் என்ற எண்ணம்
வந்து விடாமல் இருக்க பகவான் வகுக்கும் வழி.
அவன் மனது வைக்கும்போது நாம் சந்திக்கலாம். நன்றி மா.
ஊர் திரும்பியாச்சா?.. உங்கள் மன விருப்பப்படியும் திருப்தி ஏற்படும் அளவில் எல்லாம் நிறைவேறியது குறித்து மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்..
பெரிய மகன் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.ஜீவிசார்...அசட்டுக்கு அறுபது நாழி வேலை என்பார்கள். அது போல ஆச்சு.:(
அசடா!.. இன்றைய எங்கள் பிளாக் பதிவில் உங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறேன், பாருங்கள். (அங்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலாய்)
உங்கள் பயணம் குறித்து மிக மகிழ்ச்சி மா ..தொடர்ந்து உங்கள் அனுபவங்கள் பற்றி படிக்க மிக ஆவல் மா..
மகிழ்ச்சியும், வாழ்த்தும்.
தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.
பலநாட்கள் வரமுடியவில்லை.இந்திய பயணத்தில் தொடர்கிறேன்.
Post a Comment