Blog Archive

Wednesday, October 30, 2019

சிகாகோ/பாசல் தமிழ்நாடு.பயணம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

சிகாகோ/பாசல் .பயணம் 

இங்கும் அங்கும்  என்று  ஒரு பாடல் .
அது மனத்துக்குத் தான். இங்கு வந்தால் அந்த ஊர் நினைப்பு. அங்கு போனால் இந்த ஊர் நினைப்பு.
நம் ஊருக்குப்   போனால் வேறெந்த நினைவும் வராது.
அதுவே நிறைவாக. 
இருக்கும் 13 நாட்களில்  பார்த்தே ஆக வேண்டிய சில பேர்.
பார்த்துப் பேச விரும்பும் அருமை நண்பர்கள்.

நடுவில்   நிறைவேற்றிய வேண்டிய பித்ரு கார்யம். அடுத்த நாள் ஒரு திருமணம்.
அடுத்த நாள்  திருக்குறுங்குடிப் பயணம்.

மூ ன்று நாட்களில் திரும்பினால்  மீண்டும் பயணம்.
குழந்தைகளுக்கு வேண்டும் என்கிற  பரிசுகள்.
வாங்கிக்கொண்டு ஜகார்த்தா பயணம்.

எல்லா இடத்திலும் இறைவன் நின்று காக்க வேண்டும்.
 மிகமிக பிஸியான  மானேஜர்கள்  இப்படி ஓரிடம் நில்லாமல் தமிழ்நாடு  
பறப்பதை பார்த்திருக்கிறேன்.

வேலையே இல்லாமல்  ,சொந்த இடத்தை விட்டு நகராதவர்களும் 

வடதுருவம் தென் துருவம் என்று அலை கிறோம்.
வேடிக்கைதான்.











13 comments:

ஜீவி said...

தாய் மண்ணே வணக்கம்.

வருக! வருக! வாழ்க வளமுடன்!..

கரந்தை ஜெயக்குமார் said...

பயணங்கள் சிறக்கட்டும்

நெல்லைத்தமிழன் said...

பயணம் சிறக்கட்டும். நினைத்த மாதிரி (as per plan) எல்லாம் நடக்கட்டும்.

தமிழகத்தில் காணவேண்டிய கோவில்களைத் தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிட்டட்டும்.

பாடல் அருமையானது.

ஸ்ரீராம். said...

இந்தியா- தமிழ்நாடு- சென்னை உங்களை வரவேற்கிறது!

Geetha Sambasivam said...

பயணம் நல்லபடி முடியட்டும். உங்கள் உடல் நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு எடுத்துக்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருங்கள். ஜகார்த்தாவில் இருந்து நீங்கள் ஷிகாகோ திரும்புகையில் நான் இந்தியா திரும்புவேன். :)))))))))

Geetha Sambasivam said...

கந்தர் சஷ்டிக்கான சிறப்புப் பாடல் அருமை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!

கோமதி அரசு said...

இறைவன் அருளால் பயண திட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற வாழ்த்துக்கள்.

பாடல் பகிர்வு அருமை.
சஷ்டிக்கு ஏற்ற பாடல்.
கேட்டு மகிழ்ந்தேன்.

நன்றி அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

பயணம் சிறக்க வாழ்த்துகள் மா...

மாதேவி said...

பயணம் இனிதாக அமையட்டும்.

இங்கும் அங்கும் வாழ்கையே வேடிக்கைதான். மகிழ்ந்திருப்போம்.

KILLERGEE Devakottai said...

தேவகோட்டையும் தங்களை வரவேற்கிறது அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி. நேர நெருக்கடி. பொருந்தி உட்கார முடியவில்லை.

எது முடிகிறதோ அதைச் செய்யப் போகிறேன்.
கந்தன் கருணை தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

என்னைத் தீர்மானம் செய்யச் சொன்னால்
திருச்சி, புதுக்கோட்டை,கண்டனூர்,தேவகோட்டை,காரைக்குடி,திண்டுக்கல்,திருமங்கலம்
,மதுரை எல்லா இடங்களிலும் தங்கி

எல்லோரையும் பார்த்துப் பேசிக் கிளம்புவேன்.
நன்றி அன்பு தேவகோட்டை ஜி.

அப்படியும் ஒரு காலம் வரலாம். அழைத்ததற்கு மிக மிக நன்றி மா.

Bhanumathy Venkateswaran said...

குறுகிய காலம், நிறைய பயணங்கள். உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணங்கள் திட்டமிட்டபடி சௌகரியமாக நடக்க பிரார்த்திக்கிறேன்.