Blog Archive

Monday, October 28, 2019

சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   நலமாக வாழ வேண்டும்.

சப்த ஸ்வரங்கள்  மாறினாலும் இசை ஒன்றுதான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வித விதமான தீபாவளி அனுபவங்கள்.
வித விதமான வாழ்த்துக்கள்.
அன்பு சொன்னவர்கள், மறந்தவர்கள் 
எல்லா வருடங்களிலும்  நடப்பதுதான்.

ஜீரண அஜீரணங்கள் தொடராமல் மருந்தும் சாப்பிட்டால் 
பொங்கல் வரை சுகமாக  நடைபோடலாம்.:}
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நிகிதா,தன்யா மானசி ,பரணி இவர்களுடன் சாரிக்காவும் ,அவள் 
பாட்டியும்,
எமிரேட்ஸ்  விமானத்தில் வந்திறங்கினார்கள் .
அவர்களுக்கு ஏற்கனவே ஏர் பி அண்ட் பியில் மைலாப்பூரில் இரண்டு முன்று   வீடுகளில்  ஏற்பாடாகி இருந்தது.
தங்குவது அங்கே ,சாப்பிடுவது  பிடித்த இடத்தில்.

அவரவரது  ஷெட்யூல்  நகரத்தின்  வாணி மகால், ஆர் ஆர் சபா,
கிரிஃபித் ரோட்,பொட்டி ஸ்ரீராமுலு ஹால் 

என்று தி.நகரைச் சுற்றியே இருந்தன,.

இறங்கினதும் அவர்கள் விரைந்தது  மஹி வீட்டுக்குத்தான்.

கார்த்திக்கும் அங்கே இருந்தான். 
அவனுக்கு இவர்கள் எல்லோரின் உத்சாகமும் மிகப் பிடித்திருந்தது.




நிகிதா ,ஒரு சந்தோஷச்  செய்தி சொன்னாள் 

ரகு நந்தனும் . மாநசியும்   வரும்  ஜூன் மாதம் 
திருமணம்  செய்வதாகத் தீர்மானித்திருக்கிறார்கள் 
என்று.
இன்னொரு அலை அங்கே பொங்கியது. மகிழ்ச்சி  எல்லோர் இதயத்திலும் பரவ  பரணி, தன்யா வை  நோக்கினார்கள். உங்கள் கதை எப்படி எப்படி என்ற கேள்வி  அவர்கள் கண்களில்.


இருக்கு இருக்கு என்ற பரணி, தன்யா  தனக்கேற்ற 
இளைஞனைக் கண்டு பிடித்துவிட்டாள்.

இன்று மாலை  அவர்கள் நடனம்  பார்த்தசாரதி சபாவில் என்று செய்தியை அவிழ்த்தான்.

தன்யா  சும்மா இல்லை,  பரணியும்,தனக்கு ஒத்து ஊதும் பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டான் .
இதோ வராங்க என்று உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாரிக்காவைக் 
  கை  காண்பித்தாள்..

பாருடா. இந்த  ஜோடியை. ஒண்ணுமே தெரியாதது போல முகம் வைத்துக் கொண்டு.
எப்படி எப்படி என்று சூழ்ந்தனர் அவர்களை.

எனக்குப் பக்க பலமாக அவள் இருப்பாள் என்று உறுதி தோன்றியதும் பாட்டியிடம் கேட்டுவிட்டேன்  என்று சிரித்தான் .


ஹரனும் வருகிறான்.இது  நிகிதா வின்  பங்களிப்பு.
அமெரிக்காவில் குடியேறுவது இப்போது கடினமாயிற்றே 
எப்படி சமாளிப்பீர்கள்  ,இது அடுத்த கேள்வி.

அவன் அங்கே வரவில்லை என்றால் நான் இங்கே வந்துவிடுகிறேன்,சிம்பிள். என்றாள்  நிகிதா.

Image result for mUSIC SEASON  DECEMBER  CHENNAI

ஹரனும் வந்து சேர்ந்தான். முகத்தில் பழைய பொலிவு குறைந்திருந்தது.
சிநேகிதர்களைக் கண்டதும் மனம் மலர்ந்தது

நிகிதா அவன் அருகில் வந்து கைகளைக் கோர்த்துக் கொண்டாள் .
   மாலை  தன்யாவின்  லக்ஷ்மன்  ஆடிய  நடனத்தை அனைவரும் சென்று பார்த்தனர்.

கலாக்ஷேத்ராவின்  மாணவனை  இரண்டு மூன்று வருடங்களாகவே அறி வாள் தன்யா.
நடனம் அறிந்த ஒருவர்  
தனக்கு  வாழ்க்கைத் துணையாக வருவதையே அவள் விரும்பினாள்.

திருமணத்துக்கு அவர்கள் அவசரப்  படவில்லை.
வாழ்க்கையில் ஸ்திரம்  வந்ததும் அந்த வாழ்க்கையைப் பற்றி  யோசிப்பதையே  ஆரம்பிக்கலாம் என்பதே அவர்கள் முடிவு.



மஹி கார்த்திக்,

ஹரன் நிகிதா,

மாநஸி ,ரகு நந்தன் ,

பரணி சாரிகா,

தன்யா  லக்ஷ்மன்.


இவர்களது எதிர்காலம்   வளமாக  இருப்பது அவர்கள் கைகளில் தான் இருக்கிறது.

இசை ஒன்று சேர்த்த  அவர்கள்   வாழ்வு சுருதி விலகாமல் 
பக்குவமாகப் பாதுகாப்பதற்கான வயதில் இருப்பவர்கள் தான்.

நிதானமாக யோசிக்கும் இளைய சமுதாயம் 

இனி எடுத்து வைக்கும் அடிகளிலும் 

ஒருவரை ஒருவர்  ஆதரித்து,அனுசரித்து வாழ நம் வாழ்த்துக்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பல நண்பர்களையும் குழப்பி ஒரு கதை எழுதினேனோ என்று 
முதலில் கவலைப் பட்டேன்.

இந்தக் கதையின் பாத்திரங்கள் நான் சந்தித்தவர்கள் தான். சாரிக்காவைத் தவிர.

மஹி  கார்த்திக்  நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்துவிடும்,

அடுத்து ரகு நந்தன் ,மானசி  மனமும் உறுதி.

ஹரன்  பெற்றோர்களிடம் நிகிதாவை அறிமுகப் படுத்தியாச்சு.

அதுவும் நடந்துவிடும்.

இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கும் பரணி,சாரிக்காவின் காதலும் பாட்டியின் துணையுடன்  திருமணத்தில்  முடிவது  உறுதி.

தன்யா  லக்ஷ்மண்   அடுத்த வருடங்களில் தங்கள் வாழ்க்கையைத் 
தீர்மானிக்கலாம் .

மகிழ்ச்சி மட்டுமே இந்த இளம்தம்பதிகளைச் சேர நம் வாழ்த்துக்கள்.


















17 comments:

டிபிஆர்.ஜோசப் said...

நிறைவு செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அழகாக தூங்கி அழகாக நடந்து அழகாக முடிந்துவிட்டது. கதை போலவே இல்லாமல் நமக்குத் தெரிந்த சிலருடைய வாழ்க்கை நிகழ்வுகளில் பங்கு பெற்றது போல் இருந்தது. வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

எல்லோரும் நலம் வாழ வாழ்த்துவோம் அம்மா சுபமான முடிவு.

ஸ்ரீராம். said...

எல்லா ஜோடிகளும் இணைந்தது குறித்து மகிழ்ச்சி.  வளமாக வாழட்டும்.

தங்கரதம் வந்தது-  என்ன ஒரு பாடல்...

Geetha Sambasivam said...

தன்யா, லக்ஷ்மணன் இருவரும் சாந்தா, தனஞ்சயன் ஆகியோர் இருவரையும் நினைவூட்டினார்கள். எல்லோருடைய வாழ்க்கையும் நல்லபடியாக அமைதியாக ஒத்திசைவுடன் செல்ல வாழ்த்துகள்.

டிபிஆர்.ஜோசப் said...

தூங்கி அல்ல தொடங்கி..:))

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோசஃப் சார்.

ஆமாம். சுபம் போட்டிருக்கிறேனே.
எல்லாம் மங்களமாக முடிகிறது.
மனதுக்குப் பிடித்த மணாளனையும்
மங்கையையும் கைப்பிடிக்க இனிதே
பூர்த்தியானது. பொறுமையாகப் படித்ததற்கு
மிகவும் நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு தேவகோட்டைஜி,

உண்மையே. பெரியவர்களையும் மதித்து அவர்கள்
வாழ்வு மணக்க வேண்டும். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலைவணக்கம் ஸ்ரீராம்.
ஜோசஃப் சார் சொன்னது போலத் தூங்கி
எழுந்து நடந்து விட்டது:) பொறுமையாகப் படித்துப்
பின்னூட்டங்களும் இட்டதற்கு
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் கீதா மா..
உண்மையே.
மணம் முடித்தால் மட்டும் போதாது.
மனங்களும் மாறாமல் வாழ்க்கை தொடர வேண்டும்.
இந்தப் பிரார்த்தனைகளுடன் தான் கதையை எழுதத் தொடங்கி
பூர்த்தி செய்திருக்கிறேன். மறக்காமல் தொடர்ந்து
பின்னூட்டமும் இட்டதற்கு மிகவும் நன்றி மா.

TBR. JOSPEH said...

ஜோசஃப் சார் சொன்னது போலத் தூங்கி
எழுந்து நடந்து விட்ட//

உண்மையில் அது ஒரு எழுத்துப்பிழை. இப்போதெல்லாம் நான் செல்பேசியில் குரல்வழியில்தான் கருத்துரை இடுகிறேன். அதில் நான் ’துவங்கி’ என்று கூற அது உருமாறி ’தூங்கி’ என்றாகிவிட்டது.... ‘நடந்து’ என்பதை விட ‘வளர்ந்து’ என்றும் கூறியிருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒரு அழகான நாட்குற்ப்பை படித்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் தொடர். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜோசஃப் சார் குரல் வழியாகப் பதிவிடுகிறீர்களா. சுலபமாக இருக்கிறதா. நல்ல பின்னூட்டம் தானே. கொடுத்திருக்கிறீர்கள். மொபைலின் செயல்பாடுகள் சிலசமயம் தொந்தரவாகத் தான் முடிகின்றன. மிக நன்றி சார்.

கோமதி அரசு said...

பாட்டுக்கள் தேர்வு அழகான கதையை அருமையாக கொண்டு சென்றது.

மனம் ஒத்த ஜோடிகள் ஒன்றாக பல்லாண்டு வாழ வேண்டும்.
கதையின் முடிவு மனதுக்கு நிறைவு.

நெல்லைத்தமிழன் said...

ஏகப்பட்ட ஜோடிகள். இருந்தும் கதை நன்கு பயணித்து சுபமாக முடித்துவிட்டீர்கள்.

வாழ்க்கை இப்படி ஆற்றொழுக்குபோல இருக்கிறதா? ஆச்சர்யம்தான்.

வாழ்க இளஞ்சோடிகள் அனைவரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

பாராட்டுகள் வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, ஆமாம் மா. பாடல்களைத் தேடுவது ஒரு இன்பமான

அனுபவமாக இருந்தது. எழுதி வைத்திருந்த எண்ணங்களுக்கு
ஆதாரமாகவும் இருந்தது..
அவற்றை எல்லாம் நீங்களும் ரசித்ததும் என்னை மிகவும்
ஊக்குவித்தன.மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா.
ஆற்றொழுக்கு போல வாழ்வு அமைவது
அதிசயம் தான். கதையில் அமைப்பது மிக சுலபம்.

என்னால் இவர்கள் எல்லோரின் வாழ்வு நிகழ்ச்சிகளையும்
ஒருங்கிணைக்க நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.

நான் பார்த்த சில இசை ஜோடிகள் பிரிந்து வசித்தாலும்
அன்பு குறையாமல் இருக்கிறார்கள்.
இனியும் நன்றாக வாழ வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... எல்லாம் நல்லவிதமாகவே முடிந்திருக்கிறது. மகிழ்ச்சி.

சிறப்பாகச் சென்ற கதை. மொத்தமாக படிக்க முடிந்ததும் ஒரு வசதி தான். :)

பதிவுகள் தொடரட்டும். நானும் தொடர்கிறேன் மா.

மாதேவி said...

ஜோடிகள் இணைந்தது மகிழ்சி. அவர்கள் பொழுதுகள் இன்பமாக இருக்கட்டும்.