Blog Archive

Saturday, October 26, 2019

சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .  அனைவருக்கும்  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.




மஹிக்குப் புரியாதது  பாட்டியின்  அவசரம் ஓன்றுதான் .

அமெரிக்காய் பயணம் முடிவதற்கு 
முன்  காத்திருக்க முடியாதா .

சென்னை வந்த பிறகு விடை கிடைத்தது.

கார்த்திகேயனின்  தந்தைக்கு  மத்திய கிழக்கு நாடு ஒன்றில் 
நல்ல வேலை கிடைத்திருப்பதால் 
அவர் செல்லும் முன்  அவனுடைய    திருமணம் 
நிச்சயம்  செய்ய  விரும்பினார்.

பிரபல நிறுவனத்துடன் ஐந்து வருட ஒப்பந்தம்.
வருடத்துக்கு ஒரு முறை வரமுடிந்தாலும்,

மகனைத் தனியே விட்டுச் செல்ல  மனமில்லை.



மஹியை முன்பே கச்சேரிகளில் பார்த்தும் கேட்டும் இருக்கிறார்.

அவள் தோற்றமும் ,இசையும் பிடித்ததால் 
அவர்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்.
 பாட்டிக்குப் பேத்தியிடம் சொல்லத்  தயக்கம் தான்.  கேட்டு வைக்கலாம். நடந்தால் நல்லதுதானே  என்ற  நினைப்பில் மகளிடம் பேசி செய்தியைச் சொல்லி உடனே வரும்படி    சொன்னார் .
படத்தையும் அமேரிக்கா சென்ற ஒருவரிடம் அனு ப்பினார்.

மஹியும் அம்மாவும் வந்து சேர்ந்து,இரண்டு நாட்களில் தீபாவளி .

தோழிகளிடம் அரட்டையில் இருந்தாள்  மஹி.

வாசலில்  குரல்கள்.
 மாமா ,அத்தை யாரவது வந்திருப்பார்கள்   என்று நினைத்தபடி 
மஹி  வெளியே வந்தாள்.

புது மனிதர்களை ப்  பார்த்ததும் தயங்க,
மஹி ,இவர்கள்  திரு. சந்தானமும் அவர் மனைவி  கீதாவும் என்று அறிமுகப் படுத்தினார்.

மஹியின் திகைப்பைப் பார்த்து,  "சொல்லாமல் வந்ததற்கு  மன்னிக்கணும்.
தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல வந்தோம். " என்றார் .

இருவரது   புன்னகை முகத்தைக் கண்டதும் மஹிக்கு ஒன்றும் சொல்லத் 
தோன்றவில்லை. 
வணக்கம் என்று  சொல்லிவிட்டு, இதோ வருகிறேன் என்று தன்  அறைக்குள் சென்றாள் .

அம்மாவும் அப்பாவு ம் அவர்களோடு உத்ஸாகமாகப் பேசுவது கேட்டது.

சிறிது நேரத்தில் அம்மாவே உள்ளே வந்தார்.
நீ அங்கே  வந்து பேசலாமே மா. நல்லவர்கள் தான். என்றார்  சிரித்தபடி.

சொல்லாமல்  இப்படி  வந்தால் எப்படிம்மா, என்று 
சிணுங்கினாள். . எதோ ஆசையாக வந்திருக்கிறார்கள். ரெண்டு வார்த்தை பேசிவிட்டுப்போ 
என்று சொன்ன அம்மாவை தொடர்ந்து வெளியறைக்கு வந்தால் மஹி.

அவர்கள்   உண்மையான  ஆவலுடன் அவள் சங்கீத  அனுபவங்களை பற்றிப் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் இயல்புக்கு வந்தாள் .

அன்று மாலை மைலாப்பூர் பைன்  ஆர்ட்ஸில் அவள் கச்சேரியைக் கேட்க வர போவதாக  இருவரும் சொன்னதும்.. 
 அவளுக்கு வித்தியாசமாகப் படவில்லை.  
4 மணிக்கு கச்சேரி  என்பதால் ,சில  ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டி இருந்தது.

மீண்டும்  என்று  , உள்ளே சென்று விட்டாள் .
அம்மா அவர்களை வழி அனுப்பும் சத்தம் கேட்டதும் ,தன்  வேலை யில் மும்முரமானாள் .

அன்று மாலையே  கார்த்திகேயனிடமிருந்து அழைப்பு.

நிதானமாகப் பேசும் அவன் குரல் பிடித்திருந்தது.
 இருவரும்   புதன் கிழமை சந்திக்கலாமா என்று கேட்ட 
பண்பும்  பிடித்தது.

நுங்கம்பாக்கத்தில் ஒரு   ஓவியக்  கண்காட்சிக்குப் 
போகலாமா என்று கேட்டதும் சம்மதித்தாள் .

முறையாகப் பெண் பார்க்க வேண்டாமா என்ற பாட்டியைப் பார்த்து சிரித்த  மஹி ,  அதெல்லாம்  இப்ப அவுட் ஆப் FASHION பாட்டி.

சீக்கிரம்  நடக்கிற விஷயம் இல்லை இந்தக் கல்யாணம்.
அவசரமே  இல்லை.  இருவருக்கும் ஒத்துப் போனால் தான் 
மற்றதெல்லாம் என்றாள் .

டிசம்பர் முதல் தேதி  கே {மஹி வைத்த பெயர்}யின் பெற்றோர் கிளம்ப ,
அதற்கு முன்பாக 

மஹி யைக் கலந்தாலோசித்து  நவம்பர் 6 ஆம் தேதி 
இரு பெற்றோர்கள்  மட்டும் கலந்து கொண்ட  திருமண நிச்சயம் நடந்தது.

திருமணத்தேதி   நிச்சயிக்கப் படவில்லை.
ஒரு வருடம்   சென்ற பிறகு தான். என்று மஹியும் கேயும் 
செய்த  தீர்மானம். 
அடுத்த ஒரு வாரத்தில்  அமெரிக்க நண்பர்களின்  வரவு 
ஊரே கலகலத்தது. மீண்டும்   தொடரும் .






20 comments:

டிபிஆர்.ஜோசப் said...

மஹி மற்றும் கேயின் திருமணம் நல்லபடியாக நடக்கும் தானே. அதில் சஸ்பென்ஸ் ஏதும் இல்லையே?

மாதேவி said...

ஆகா !நிச்சயதார்தம்.

கோமதி அரசு said...

ஆஹா! கதையில் தீபாவளி பண்டிகையும் வந்து விட்டது.

//முறையாகப் பெண் பார்க்க வேண்டாமா என்ற பாட்டியைப் பார்த்து சிரித்த மஹி , அதெல்லாம் இப்ப அவுட் ஆப் FASHION பாட்டி.//

இரண்டு பேருக்கு மஹி சொல்வது போல் ஒத்து போகவேண்டும்.

திருமணம் நிச்சயம் நடந்து விட்டது, மாற்றம் இல்லாமல் இனிதாக மஹி கார்த்தி திருமணம் நடை பெற வாழ்த்துக்கள்.


Geetha Sambasivam said...

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததுக்கு சந்தோஷம். திருமணமும் அப்படி முடியட்டும். பிரார்த்தனைகள். இங்கு வரப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

Bhanumathy Venkateswaran said...

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் கழித்தா திருமணம்? நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது. இனிய பாடலுக்கு நன்றி. ஹிந்தி பாடலை கேட்க முடியவில்லையே:(

துரை செல்வராஜூ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

ஆஹா...     திருமணம் நிச்சயமாகி விட்டதா?  மஹி நன்றாய் இருக்கட்டும்.  தீபாவளியோடு இணைத்து நடத்திச் சென்றிருக்கும் விதம் ரசனை.

இனிய தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

பொருத்தமான பாடல்கள்.  ஜோவின் குறும்பு தவழும் நடிப்பும், உற்சாகமும் எப்போதுமே ரசிக்க வைக்கும்.  மற்ற பாடல்களும் இனிமை.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோஸஃப் ஆர். திருமணம் செய்யும் எண்ணத்துடன் தான் நிச்ச்யம்.

இப்பொது இருப்ப்து ட்ரையல் நேரம். கண்டிப்பாக நடக்கும் சார். மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதேவி.
நிச்ச்ய்ம் நடந்து விட்டது. அதுவே ஒரு ஒப்பந்தம் தானே.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,

இருவரும் மனம் ஒத்துப் போனதால் தான் நிச்சயம் நடந்தது.
இந்த ஒரு வருடத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுதான் அவர்களது நோக்கம்.. ந்ல்லதே நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,ஆமாம் நிச்சயம் நடந்து விட்டது. இனி இரு மனங்களும்
நன்றாக ஒத்துப் போக வேண்டும்.
அவர்கள் மனவிருப்பம் நிறைவேறட்டும்.. நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா. கவலையெ வேண்டாம்.இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு.பிற்காலத்தில் சங்கடம் வரக்கூடாது என்பதற்காக
இந்த ஏற்பாடூ. நல்லதே நடக்கும்.. பாடல் வரவில்லையா. அதனுடன் ஒரு லிங்க் இருக்கும் பாருங்கள்..அதை க்ளிக் செய்தால்
கேட்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நல்ல முடிவை நோக்கி நகர்த்தியாச்சு.
அடுத்த பகுதியை சுபம் நோக்கி செலுத்திவிடலாம்.
பாடல்களைப் பதிய இந்தக் கதை இடம் கொடுத்தது.
நீங்களும் ரசித்ததுதான் மகிழ்ச்சி. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றிமா.

Geetha Sambasivam said...

@Banumathy Venkateswaran, எங்க பையருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஆறேழு/எட்டு மாசம் கழிச்சுத் தான் கல்யாணம். மே மாசம் நிச்சயம். டிசம்பரில் கல்யானம். நிச்சயதார்த்தம் பிள்ளை இல்லாமல் தான் பெண்ணை மட்டும் வைத்துச் செய்தோம்.

வெங்கட் நாகராஜ் said...

நினைத்தபடி மாறி இருக்கிறது. திருமண நிகழ்வு வரை பொறுத்திருக்க வேண்டும். பார்க்கலாம்.