வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9
ஒரு வார விடுமுறை முடிந்து மாநசி, பரணி, ரகு நந்தன்,
திரும்பிச் சென்றார்கள்.
தன்யா,நிகிதா, மஹியுடன் ஹுயூஸ்ட்டன் வந்தார்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்ப வேண்டிய அவசியம் மஹிக்கு ஏற்பட்டது.
மஹியின் பாட்டி , மஹிக்கு ஒரு வரன் பார்த்து வைத்திருப்பதாகவும்
அந்தப் பையன் மஹியின் பாட்டுக்காகவே அவளை விரும்புவதாகவும்.
வெளிநாடு செல்லும் உத்தேசம் இல்லாத
மஹிகாவை மிகப் பிடித்திருப்பதாகவும்
நீண்ட தொலைபேசி அழைப்பில் சொன்னார்
மஹியின் அம்மா.
தான் கலி போர்னியாவிலிருந்து
கிளம்பி ஹூஸ்டன் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
மஹி இதற்கெல்லாம் அசரவில்லை.
பெரியவர்களை மீறி அறியாதவள். அதனால் கிளம்ப சம்மதித்தாள்.
அவள் மனதில் சலனம் இல்லை.
23 வயதில் திருமணத்திற்கு அவசியமில்லை என்ற தீர்மானத்திலிருந்தாள் .
ஹுய்ஸ்டனில் மீனாக்ஷி அம்மன் கோவிலில்
மஹியின் இசையும், தன்யாவின் நடனமும் ,நிகிதாவின் வீணைக் கச்சேரியும்
அரங்கேறின.
இரண்டு மூன்று நாட்களில் அம்மாவும் வந்து சேர்ந்தார்.
அவர்கள் தங்கியிருந்த வீடு நியூஜெர்சி, மற்றும் வடகரோலினா
மாகாணத்தைச் சேர்ந்த இசைப் பிரியர்களின் சொந்த வீடு.
நிகழ்ச்சிகள் முடிந்த இரவு, தோழிகள் மனம் விட்டுப் பேசினார்கள்.
மஹி, நிகிதாவிடம் ஹரன் உள்ளத்தை அறிந்து சொல்வதாகவும்.
இப்பொழுது அவன் இருக்கும் நிலையில் சரியாக சிந்திக்க முடியாது என்றும்
விளக்கினாள் .
தான் அவனுடன் தோழமையாக இருந்தது நிஜம் என்றாலும்
அவன் அளவுக்குத் திருமணத்தில் தற்போது ஈடுபாடு இல்லை என்றும் சொன்னாள் .
நிகிதா மனம் நிம்மதி அடைந்தது.
இருவரும் தனியாவை நோக்க, யாருக்கு மாப்பிள்ளை யாரோ என்று
அபிநயம் பிடித்தாள் .
குறும்பைக் கண்டு ரசித்தார்கள் மற்ற இருவரும்.
நாம் தான் அடுத்த மாதம் பார்ப்போமே, அதற்குள்,"நல்ல சேதி சொல்லடி மீனாக்ஷி." என்று மஹி பாட " வீணையடி நீ எனக்கு மேவும் விரல்
நான் உனக்கு." என்று நிகிதாவும் சேர்ந்து கொண்டாள் .
"அப்போ மஹி நீ என்ன கதை சொல்கிறாய்."
ம்ம். எனக்காக ஒரு கண்ணன் தவமிருக்கிறாராம்.
இரண்டு மூன்று வருடங்கள் காத்திருந்தால்
நான் சரி என்று சொல்ல வாய்ப்புண்டு
என்று சட்டமாகச் சொல்லிவிடப் போகிறேன் என்றாள் மஹி.
யார் கண்டார். ஆளை பார்த்ததும், வரச் சொல்லடின்னு பாடுவியோ என்னவோ என்றதும் மஹி முகம் சிவந்தது.
மற்றும் இரண்டு நாட்கள் கழித்து
தோழிகளிடம் பிரியா விடை பெற்றவள் கையில் அம்மா
ஒரு படத்தை திணித்தார்.
"என்ன ?" என்று கேட்டவளிடம் பாட்டி சொன்ன கார்த்திகேயன்
என்றார் அம்மா.
ஏற்கனவே இரு தேவியர் ஹ்ம்ம்...
வைத்துக் கொண்டு கல்யாணமா "
என்று பரிகாசம் செய்தாலும் மஹியின் மனம்
கொஞ்சம் அசைந்து கொடுத்ததுதான் நிஜம்.
கதையைப் பூர்த்தி செய்ய இன்னும் நான்கு நாட்களாவது ஆகும்.
அமெரிக்க நண்பர்களுக்கு போய்வருகிறேன் என்று சொல்லி மீண்டும் சந்திக்க ஆவலுடன் வல்லிம்மா.

16 comments:
பாடல்களாலேயே கதையை நகர்த்திக்கொண்டு சென்றிருக்கிறீர்கள். அருமை.
நல்லபடியா ஊர் போய்ச் சேர்ந்து விசேஷமும் நல்லமுறையில் நடந்து எல்லாரையும் பார்த்துப் பேசி, வீட்டைப்பார்த்துக் கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் கலங்கி,கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் வருத்தம் என வரும் உணர்வுகளை எதிர்கொண்டு நண்பர்கள் பார்க்க முடிந்தவர்களைப் பார்த்துப் பேச முடிந்தவர்களோடு பேசி. திருக்குறுங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் தரிசனம் நல்லபடியா முடிந்து பின்னர் நீங்கள் யு.எஸ். வரும் நாளில் அநேகமாக நாங்கள் கிளம்பும் நாளாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறேன்.
பாட்டும் கதையும் அருமை.
ஊர் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
மஹி க்கும் ஃபிக்ஸ் ஆகிவிடுகிறது இல்லையா.
பாடல்கள் எல்லாம் மிக அருமை பொருத்தமாகவும் உள்ளது.
அம்மா உங்க பயணம் நல்லபடியாக நீங்க நினைச்சிருக்கும் கோயில்கள் எல்லாம் நல்லபடியாக தரிசனம் கிடைத்திடும் அம்மா. அப்புறம் எல்லாம் நல்லபடியா நடக்கும்.
ஹாப்பி ஜெர்னி அம்மா
கீதா
அன்பு ஸ்ரீராம், கொஞ்சம் கதை நகர்ந்ததோ ?
நன்றி மா. எதிர் பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் எந்தப் பயணமும் இனிதே
அமையும்.பார்க்கலாம் மா.
அன்பு கீதா மா.
உள்ளத்தில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
ஒரு மினி வாழ்க்கையின் அற்புதமே இந்தப் பயணம்.
எல்லாம் கலந்த உணவு போல.
நன்றி மா.உங்களுக்கும்,மாமாவுக்கும், குழந்தைகள் பேத்திகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
அன்பு கோமதி மா.
பொறுமையாகப் படித்ததற்கு மிக நன்றி .
அனைவருக்கும் நலம் பெருக வாழ்த்துகள். மீண்டும் பார்க்கலாம்.
அன்பு திரு ஜோஸஃப் சார். மிக மிக நன்றி.என்றும் வாழ்க வளமுடன்.
அன்பு கீதாமா.,
பாடல்களுக்காகவே வந்த கதையாகிவிட்டது.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.
நேரம் இனிதே அமைய நட்புகளின் துணை மிக அவசியம்.
சென்னை அது போலத்தான்.
கடவுள் கிருபையில் கடமைகளைச் சரியாகச் செய்ய
அவன் துணையே வேண்டும்.இனிய தீபாவளி வாழ்த்துகள்.
கதை முடியப்போகிறதா? ஐயையோ! மிகவும் பிடித்த மாலைப்பொழுதினிலே பாடலை நீ...ண் ...ட ... வருடங்களுக்குப் பிறகு கேட்டேன்.
Wish you a safe pleasant journey.
கதையும் இனிமையாக செல்கிறது. இந்திய பயணம் இனிதாக அமையட்டும். வாழ்துகள்.
இணைப்புகள் அற்புதம் வல்லிம்மா.
இதற்கு இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது வரம்.
வாழ்க்கையிலும் அப்படித்தானோ?..
இல்லை, தேர்வு ஆவது எதுவாக இருந்தாலும், அதை வரமாக்குவது தான் வாழ்வின் நோக்கமோ?..
அன்பு ஜீவி சார் வணக்கம். அது தீர்மானிக்கப் படுகிறதா, வரிக்கப் படுகிறதா என்பது இன்னும் என் குழப்பம்.
ஏதாக இருந்தாலும் வாழ்க்கை அமைதியாகச் செல்ல வேண்டும் என்பதே நம் விருப்பம் எல்லாம்.
அப்படியே அமைய வேண்டூம்.
சென்ற பகுதியில் சொன்னது போலவே செல்கிறது கதை. பார்க்கலாம் எப்படி முடியும் என.
இனிமையாகச் செல்லும் தொடர். இணைத்திருக்கும் பாடல்களை கேட்க முடியவில்லை. பதிவை படித்து மட்டும் செல்கிறேன் மா...
Post a Comment