வல்லிசிம்ஹன்
சிங்கத்தின் நினைவுக்கு சில பாடல்கள்.
சிங்கத்துக்கு பழைய பாடல்கள். மிகப் பிடிக்கும்
சில நடிகர்கள், நடிகைகள், இந்தி ,ஆங்கிலப்பட படங்கள்
மீண்டும் மீண்டும் டெலிவிஷன் சானல்களில் ஓய்வு நேரங்களில் பார்ப்பார். கிஷோர்குமார், தேவ் ஆனந்த், ராஜேஷ்கன்னா, நூதன்,சாதனா. . தமிழ் என்றால் சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள். ஆங்கிலத்தில் அர்னோல்ட் ஷ்வாஸ்நேகர்,கிரிகரி பெக்,Antony Quinn.இப்படிப் போகும் அவரது சுவை. Where Eagles dare, JamesBond movies, Die hard, Terminator,Guns of Navaronne. எத்தனை தடவை வந்தாலும் பார்ப்பார்.
இப்பொழுது அந்த டிவிக்கும். வாழ்க்கை இல்லை. அதைக் கவனிக்க எங்களுக்கும் நேரம் இல்லை.
சிங்கத்தின் நினைவுக்கு சில பாடல்கள்.
சிங்கத்துக்கு பழைய பாடல்கள். மிகப் பிடிக்கும்
சில நடிகர்கள், நடிகைகள், இந்தி ,ஆங்கிலப்பட படங்கள்
மீண்டும் மீண்டும் டெலிவிஷன் சானல்களில் ஓய்வு நேரங்களில் பார்ப்பார். கிஷோர்குமார், தேவ் ஆனந்த், ராஜேஷ்கன்னா, நூதன்,சாதனா. . தமிழ் என்றால் சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள். ஆங்கிலத்தில் அர்னோல்ட் ஷ்வாஸ்நேகர்,கிரிகரி பெக்,Antony Quinn.இப்படிப் போகும் அவரது சுவை. Where Eagles dare, JamesBond movies, Die hard, Terminator,Guns of Navaronne. எத்தனை தடவை வந்தாலும் பார்ப்பார்.
இப்பொழுது அந்த டிவிக்கும். வாழ்க்கை இல்லை. அதைக் கவனிக்க எங்களுக்கும் நேரம் இல்லை.
24 comments:
அவர் நினைவு நாள் அருகிலிருக்கும்போது நீங்கள் இந்த இடுகை எழுதியதில் ஆச்சர்யம் இல்லை.
தமிழ்ப்பாடல்கள் ஒன்றுகூட பகிரலையே
நினைவுகள் அருமை. கண்ணீர் வரும் நினைவுகள். ஊருக்குக் கிளம்பியாச்சா?
அன்பு முரளி மா, அவருக்கு மிகப் பிடித்த தமிழ்ப் பாடல் சேர்த்து விட்டேன். ஆமாம்.
எல்லாவித நினைவுகளும் நல்லது அல்லாதது வந்து போகின்றன .நல்லதையே நினைக்கிறேன். நன்றி மா.
அன்பு கீதாமா, இதோ இன்னும் 48 மணி நேரங்களில் கிளம்பி ஸ்விஸ்
போகணூம். அவருக்கு என் பதிவில் இடம் கொடுக்கணும். அங்கே போனால் எப்படியோ தெரியாது. அதான் அப்போதைக்கு இப்போதே சொல்லிவிட்டேன்.
நன்றி மா.
ஒரே ஒருமுறை அவரைப்பார்த்து ஆசி பெற்றிருக்கிறேன். தேவானந், கிஷோர்குமார், ராஜேஷ் கன்னா... எனக்கும் பிடிக்கும்.
மனதைக் கவர்ந்த 'வாராதிருப்பாரோ' பாடல். அருமை. என்றைக்கு சென்னை?
அவர் நினைவுகளில் படிந்த நடிகர்களின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருக்கிறீர்களே!..
'வாராதிருப்பானோ, வண்ணமலர் கண்ணனவன்?' -- இப்பொழுதும் கேட்டேன்.
என்ன இசை? என்ன பாடல்?.. என்ன குரல்?..
அந்தப் பொற்காலம் இனி வராது தான்!..
ஆமாம் ஶ்ரீராம். படம் எடுப்பது, அளவில்லாமல் பேசுவது ஒன்றும் பிடிக்காது. கிஷோர் குமாரனின் அத்தனை பாடல்களும் இப்போது பெரியவனிடம்.
துபாயில் Cliff Richard என்ற பாடகரின் நூறு பாடல்கள் அடங்கிய சிடிக்களை எனக்கு பரிசாக வாங்கிக். கொடுத்தார்.
அன்பு முரளி மா, ஆமாம் மிகப் பிடித்த பாடல். நவம்பர் 4 வாக்கில் அங்கே. வருவோம்பா பகவத் சங்கல்பத்தில்.
அன்பு. ஜீவி சார்
நாங்கள் பிரிந்து இருந்ததே இல்லை் என் விருப்பம் அத்தனையும் அவருக்கும் தெரியும். அவருக்கு எதில் எல்லாம் இஷ்டம் என்பது தினசரி
வாழ்க்கையில் காய்கறி வாங்கி வருவது அவர்தான் மறக்காமல். ஸ்வாமிக்கு. மலர்களும் வாங்கி வந்து விடுவார். நல்லதெல்லாம் பிடிக்கும்.
இந்தப் பாடலை நன்றாகவே பாடுவார். மறக்க முடியாத. உறவு. இது. பொற்காலம் தான்.
நினைவுகள் மனதை வருந்தச் செய்தாலும் சிலருக்கு நினைவுகள்தான் வாழ்வைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருக்கிறது அம்மா.
உண்மையே அன்பு தேவகோட்டை ஜி. உங்களை. நினைக்கையில் என் வருத்தம் எல்லாம் ஒன்றும் இல்லை. நல்நினைவுகள் நல்்தூண்களாக நம்மை நிறுத்தமும். நன்றி மா.
காலை வேளையில் பாடல்களை கண் மூடி ரசித்தேன்.
அருமையான குரல்வளம் கிஷோர்குமாருக்கு.
அவர் படங்களும் பிடிக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர்.
தேவ் ஆனந்த்,நூதன் பாடலை யூ -டியூப்பில் கேட்டேன்.
பச்சை விளக்கு பாடலும் பிடிக்கும். இனிமையான பாடல்.
நவம்பர் வந்தால் சாரின் நினைவுகள் வந்து விடும். ஆனால் பதிவுகள் மூலம் அடிக்கடி பார்ப்பதால் என்றும் வாழ்கிறார் நினைவுகளில்.
இப்பொழுது அந்த டிவிக்கும். வாழ்க்கை இல்லை. அதைக் கவனிக்க எங்களுக்கும் நேரம் இல்லை.//
அப்படியானால் பொழுது எப்படி போகிறது ?
அவரின் நினைவுகள் உங்களை தாங்கும் அம்மா...
அருமையான பாடல்கள் அம்மா...
அம்மா அருமையான பாடல்கள்
அப்பாவுக்கு செம ரசனை! ஆர்ட், பாட்டு, படம் நு இல்லையா...நான் பார்க்க முடியாம போச்சேன்னு இருக்கு..
கீதா
அம்மா உங்களுக்கா பாட்டு தெரியாதுனு சொல்லிருக்கீங்க...டூ மச்...ஹா ஹா ஹா
முந்தைக்கும் முந்தைய கதையில் கமகம் இனிதான் வரும்னு சொல்லிருந்தீங்களே...அப்பவே கொடுக்க நினைத்துவிட்டுப் போனது...
அழகான வரி அது. அந்த கமகம் இனி அடுத்த கதைப் பகுதியில் வருகிறதோ!!!
கீதா
மறக்ககூடியவையா? என்றும் மனதில் வாழும் நினைவுகள். இனியதையே நினைத்திருங்கள்.
ந ழகிவிட்டதுமாஅன்பு கோமதி மா. ஆமாம் நவம்பர் , நினைவுகளை
அதிகமாக்குகிறது. நல்லதுதான்
நாங்கள் யாரும் அங்கே இல்லையே ஜோசஃப் சார். இரண்டு டிவியும்.
உறங்கிக்கொண்டிருக்கின்றன..
எனக்குத் துணை அவர் நினைவுகள் தான்அன்பு தனபாலன்.
நலமாப்பா. சென்னை வரும்போது அழைத்துப்பேசுகிறேன்.
அன்பு மாதேவி ,
.
உண்மையான பாசம் என்றும் மறைவதில்லை.
நினைவுகள் காக்கும் கோட்டையாக நிலைத்திருகும். மிக நன்றி மா.
அன்பு கீதா, அடுத்த பாகத்தை அங்கே போய் தான் எழுத வேண்டுமோ என்று தெரியவில்லை.
மிக மிக நன்றி மா. இத்தனை நேசம் எங்கே கிடைக்கும்.
உண்மையில் அப்பா எல்லாக் கலையும் கற்றவர் தான்.
ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்.
மிகச்சிலரே அவரது அருமையை அறிந்தவர்கள்.
இப்பொழுது உங்களுக்கெல்லாம் தெரியும்படி எழுதுகிறேன்.
ஆமாம் கமகம் அடுத்த பதிவில் வந்துவிடும்.
அன்புடன் வல்லிம்மா.
நினைவுகள்.... மறக்க முடியா நினைவுகள்.
நினைவுகள் நிலைத்திருக்கட்டும்மா...
தொடர்கிறேன்.
Post a Comment