Blog Archive

Saturday, October 19, 2019

சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 8

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

சப்தஸ்வரங்கள்   ராகமாலிகா  8


ஹரன்  மைசூர் வந்தடைந்த போது , அவன் அப்பாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி   முடிந்திருந்தது.

விமானத்தை விட்டிறங்கிய  அவனைச் சந்திக்க மாமா வந்திருந்தார்.
கண்கள்  கலங்க தன்னை அனைத்துக் கொண்டவனைத் தேற்றினார்.

உடனே கவனித்ததால்   நம் நல்ல வேளையும்   சாமுண்டீஸ்வரியின்  கருணையும் 

அப்பாவின் ஆரோக்கிய வாழ்க்கையும் காப்பாற்றியது.

நாளை காலை நாம் அவரைப் பார்க்கச் செல்லலாம் என்று சொன்னவரை மறுத்தான் ஹரன் 
அம்மாவைப் பார்க்கணும் மாமா  என்று சொல்வதற்குள் தொண்டை அடைத்துக் கொண்டது.

அம்மா வீட்டில் தான் இருக்கிறாள்.
அவளுக்கு  ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது.
அதனால்  நான் தான் ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

முன் மாதிரி  ஒரு வாரம் எல்லாம் அங்கே இருக்க வேண்டாம்.
இந்த வேகத்தைப் பார்த்தால் நீயே  அசந்து விடுவாய்.
வீட்டுக்குப் போகலாம் வா என்று அழைத்துச் சென்றார்.

அம்மா பத்து நாட்களில் இவ்வளவு வாடிப் போனதைக் கண்டவனுக்கு ஒரே அதிர்ச்சி.

நாற்காலியிலியே  உறங்கி விட்டிருந்தாள் .
அவனைப் பார்த்து   அனைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள் .
ஆசை ஆசையாக கிளம்பினீயேப்பா.

மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
போகலாம்  என்ற அம்மாவின்   அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தான்.

அவர்கள் எல்லோரும் இங்கே வருகிறார்கள் . இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.
நாம் அவர்களை இங்கே அழை க்கலாம்  அம்மா. நீ 
சாப்பிட்டியா. என்றபடி உதவிக்கு வந்திருந்த மாமிக்கு வணக்கம் சொன்னான்.
 " நீ கவலைப்படாதேப்பா. அம்மா தைரியசாலி. நீயும் அப்படியே இருக்கணும். போய்க் குளித்து விட்டு,
சாப்பிட வா" என்றாள் .
 மாமா  மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினார்.



அமெரிக்காவுக்கு செய்திகள் அனுப்பியதும் உறங்கப் போனான் ஹரன் .
உடனே பதில்  வந்தது  நிகிதாவிடமிருந்துதான்.

பிறகு வந்த செய்திகளை பார்க்க அவனுக்கு  
களைப்பாக இருந்தது.

சிகாகோவில் மற்றவர்களுக்கு  நிம்மதியாக 
இருந்தது.  

முதலில்  மூன்று  மாத நிகழ்ச்சிகளாக   நினைத்து ஆரம்பித்த 
எண்ணம், இந்தியாவுக்கு நவம்பரில் சென்றுவிடும் தீர்மானமானது.

மஹி  , சற்று முன்பே சென்று   இசை நிகழ்ச்சிகளை 
 நடத்தும்  சபாக்களிடம் பேசி  முடிக்க நினைத்தால். மற்றவர்களும் அவரவர் உறவினர்கள் வழியாக 

பேசி முடிக்க  முடிவு செய்தனர்.

நவம்பர் 20ஆம் தேதி  அனைவரும் சென்னை செல்ல பயணசீட்டுகள் வாங்கப் பட்டன.

அடுத்த நாள் , நியூஜெர்சி சென்ற  கலைஞர்கள்,

சென்னையிலிருந்து 30 வருடங்களுக்கு முன்பே 
இங்கே செட்டிலாகிவிட்ட பல குடும்பங்களுடன் தங்கினர் .

Image result for New Jersey  carnatic  hindu festivals festival



நியூ ஜெர்சியில் வாழும் இந்தியர்கள் மிக அதிகம். 
அதிலும் தமிழர்கள்  எண்ணிக்கை   கணக்கில் கொள்ள முடியாது.
சென்னையில் இருக்கும் உணர்வைத் தரும் கடைகள். பூக்கள் அலங்காரம், உணவு  வகைகள் பரிமாறும்  விடுதிகள்.

இவர்களது நிகழ்ச்சிகள் இரண்டு கோவிலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

Image result for new jersey hindu temple

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்    பிரிட்ஜ்வாட்டர். நியூ ஜெர்சி.

மனதை ஒரு நிலைப் படுத்த   தியானம் செய்தபிறகே 
அனைவரும் கிளம்பினார்கள்.

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில்  நடனக் கச்சேரி .
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் இசையும்  ஏற்பாடு ஆகி இருந்தது.


நிகிதா தன்  நிகழ்ச்சி முடிந்ததும்  ஹரன்னுக்கு  
 தொலைபேசி வெகு நேரம் உரையாடினாள் .
மஹி அவளிடமிருந்து   செய்திகளை க்  கேட்டுக் கொண்டாள் 

மன  நிம்மதிக்காக   ஸ்வாமி நாராயணா  கோவிலுக்கும் சென்று வந்தார்கள். 







15 comments:

ஸ்ரீராம். said...

மஹியின் மனநிலை அறிய ஆவல்.  ஹரன் மனம் யாரிடம்?

ஸ்ரீராம். said...

நெஞ்சுக்கு நீதியும் பாடலும் ஒளிபடைத்த கண்ணினாய் பாடலும் எம் எஸ் பாடியதை  கேட்டுக்கொண்டிருப்பேன்.  சுகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்., இனிய காலை வணக்கம். ஹரன். மனம் நிகிதாவிடம் நகர ஆரம்பித்து நாடகளாகிறது. மஹி மனம் இசையில். அவளை விரும்பும் ஒருவர் அடுத்த பாகத்தில் வருவார்.:)

வல்லிசிம்ஹன் said...

நெஞ்சுக்குள். நீதி மிக பிடித்தது. ஒளி படைத்த கண்ணினாய் உய்ர்நத பாசிட்டிவ் பாடல். கேட்டுடலாம்.

KILLERGEE Devakottai said...

எல்லாம் நலமாகட்டும் அருமையான பாடல் அம்மா.

துரை செல்வராஜூ said...

நிறைவும் நிம்மதியும் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.. வேண்டுதல்கள் பலிக்கட்டும்...

கோமதி அரசு said...

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரிட்ஜ்வாட்டர் கோவிலை மகன் நியூ ஜெர்சியில் இருக்கும் போது போய் பார்த்தோம். அந்த நினைவுகள் வந்தன.

நெஞ்சுக்கு நீதி எம்.எஸ் அம்மா பாட்டு அடிக்கடி கேட்பேன்.
சோபானாவும் நன்றாக பாடி இருக்கிறார்.

ஸ்வாமி நாராயணா கோவில் இப்போது போனபோது போய் வந்தோம். அழகான கோவில்.

கதையும் பாடல், ஆடல் காணொளியும் என்று எல்லாம் அருமை.

டிபிஆர்.ஜோசப் said...

கதை என்பதை விட இது யாருடைய டைரியை படிப்பதுபோல் உள்ளது நீங்கள் கதை சொல்லும் திறன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜோசஃப் ஐயா வணக்கம். நடந்தது
பலவருடங்களாக நினைவில் இருப்பது. அதை இந்தக் கதையில்
சேர்த்ததனால் டயரி மாதிரிதெரிகிறது.
இங்கே நடக்கும் கதையோடுஅதைக் கோர்த்துவிட்டேன்.

எல்லோருக்கும் மனம் போல் மாங்கல்யம் கிடைக்கட்டும்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
பாடல்கள் நம் எல்லோருக்குமே பிடித்தவைதான்.
நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ஷோபனா நன்றாகப் பாடியிருக்கிறார். எனக்கு எம் எஸ் அவர்கள் பாடியது ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடிக்கும். அதில் கணீர் மற்றும் அந்த வாய்ஸ் காந்தம்...இந்தப் பாட்டின் பொருள் அவர் பாடுவதில் அப்படியே தைரியமாக எதிரொலிப்பது போல் இருக்கும். அவர் பாடி கேட்ட பின் மற்றவர் பாடியதைப் பாராட்டினாலும் அவர் பாடுவதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கும்...நான் அதை அடிக்கடி கேட்பதுண்டு...வசீகரம்!! அது. கட்டிப் போடும்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மஹி என்ன முடிவு செய்யப் போகிறாள்? ஹரன் யாரை மனதில் நினைத்துள்ளான்? நிகிதா ஹரனை நினைப்பது போல் இருக்கிறது.
பார்ப்போம் தொடர்கிறேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அட! மஹியை விரும்புபவர் வருவாரா அடுத்த பகுதியில் அது யார்!!??! ஆவலுடன்!! தொடர்கிறேன்

கீதா

மாதேவி said...

படங்களும் பாடல்களும் மேலும் அழகுசேர்கின்றன. நன்கு ரசிக்கவைக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

கதையில் மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது - மஹியிடமிருந்து நிகிதா!

மேலும் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, தொடர்கிறேன்.