Blog Archive

Thursday, November 28, 2019

நவம்பர் 11 மாலை.பயணம் 5

வல்லிசிம்ஹன்
கீழ நத்தம்    ஸ்ரீ வேணுகோபாலன்  கோவில் 

Related image

பயணம்  5   எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 
ஸ்ரீஆண்டாள் கோவிலில் சுற்றுப் பிரகாரங்களில் உள்ள யாளிகள், ரதி,மன்மதன்  எல்லா சிற்பங்களையும் நின்று நிதானமாக சேவித்து  வர நேரமாகிவிட்டது.

கோவில் பிரசாதமாக நிறைய புளியோதரை, தயிர்சாதம், பால் கேக்,
இவற்றை எல்லாம்   அர்ச்சகர் தன்  பங்காகக் கொண்டு வந்து கொடுத்தார். அப்படியொரு தெய்வ மணம் கமழும் பிரசாதங்களை உண்டே வெகு நாட்கள்  ஆகி இருந்தன.
அதுவும்  வில்லிபுத்தூர் ர்க் கோதையின்  கருணைதான்.

கோபுர தரிசனம் முடித்துக் கொண்டு, உள்ளிருக்கும்  அன்னைக்கு நன்றி சொல்லி திருநெல்வேலி கிளம்பினோம்..

மனம் அன்னையைச் சுற்றியே  வந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் 
நினைத்து மகிழ்ந்தேன்.  
கீதாமா கேட்டது போல   யானையையோ, கொட்டாரத்தையோ 
பார்க்க முடியாமல் போனது  சின்ன வருத்தம் .

அதற்கப்புறம், நான்கு  யானைகள் பார்க்க முடிந்தது.

திருநெல்வேலி வந்து சேர மணி 5 ஆனது.

கீழ் நத்தம் போய்விடலாம் என்று வண்டியைத் திருப்பினோம்.

Image may contain: one or more people, people walking and outdoor
Add caption

Map of Tirunelveli, Tamil Nadu, India
அழகான மலைத்தொடர் கூட வர  அந்தி மயங்கும் நேரம். தனக்கும் வெளி உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலாகி காட்சி அளித்தது என் அம்மாவின் பிறந்தகம்.Image result for keezhanatham village

Image may contain: Vijaya Selvaraj, standing

18 comments:

துரை செல்வராஜூ said...

ஸ்ரீ வேணுகோபால தரிசனம்..
மகிழ்ச்சி....

படங்கள் எல்லாம் அழகு..

கோமதி அரசு said...

கீழ நத்தம் ஸ்ரீ வேணுகோபாலன் தரிசனம் கிடைத்ததா?
நானும் தரிசனம் செய்து கொண்டேன்.

கோலமாவு விற்பவர் பின்னால் நீங்களும் உங்கள் மகனும் நடந்து வருவது தெரிகிறதே! சின்னவரா? பெரியவரா?

அம்மாவுன் பிறந்தகம் அப்படியே இருக்கா! மாறுதல் இல்லாமல்?

உங்கள் படம் அழகு, ஆண்டாளை பார்த்து வந்த ஆண்டாளுக்கு முகத்தில் பூரிப்பு.

கோமதி அரசு said...

வண்ணார்ப்பேட்டையில் முன்பு என் பெரிய அத்தை இருந்தார்கள்.
இப்போது யாரும் இல்லை. வாகைக்குளத்தில் சாரின் அத்தை இருந்தார்கள், இப்போது அவர் பிள்ளை இருக்கிறார். குலதெய்வம் கோவிலுக்கு போய் வந்த போது ஒரு முறை போய் வந்தோம்.

பேட்டையில் சாரின் பெரியப்பா மகள் அக்கா இருந்தார்கள்.இப்போது அவர்கள் குழந்தைகள் ஒவ்வொவரும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறார்கள். யாரும் அங்கு இல்லை.

திருநெல்வேலியில் சொந்தங்கள் இருக்கிறார்கள்.

ஊர்களின் பேரை பார்த்ததும் நினைவுகள் போகிறது சொந்தங்களை நோக்கி.

பாளையம்கோட்டை என் அப்பா பிறந்த ஊர். தாத்தா, ஆச்சி, மற்றும் ஒரு வருடம் அங்கு படித்ததும் மலரும் நினைவுகளாய் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, ஸ்ரீவேணுகோபாலன் சன்னிதியில் இரண்டு மணி நேரம் இருந்தோம்.
அதுவும் அவன் கருணைதான். கோவிலுக்குப் பக்கவாட்டில் தாமிரபரணியின் பாசன வாய்க்கால். அழகான இடம் மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.வண்ணாரப் பேட்டை தாத்தா பாட்டி பல வருடங்கள் வசித்த இடம். பிறகு தான் மதுரை வந்தார்கள். எல்லாம் மாறிவிட்டது.
அப்பா, சித்தப்பா எல்லோரும் படித்தது பாளையங்கோட்டையில் தான்.
திரு நெல்வேலியிலிருந்து வந்துதான் அம்மாவைத் திருமணம் செய்தார் அப்பா.

தபால ஆபீஸ் முன் ஒரு நினைவுக்காகப் படம் எடுத்துக் கொண்டேன். ஆமம் மகனும் நானும் காலார நடந்தோம் அந்த ஒற்றை வீதியில்.
பலரும் அன்புடன் விசாரித்தார்கள்.

ஒருவருக்கும் அம்மாவைப் பெற்ற தாத்தாவை நைவு கொள்ள முடியவில்லை.
70 வருடங்கள் கடந்து விட்டனவே.

உங்கள் உறவுகளும் அங்கே வாழ்ந்திருந்தார்கள் என்பது மகிழ்ச்சிதரும் செய்தி கோமதி மா.
திருனெல்வெலியில் இரவுத்தங்கல் மட்டுமே சுற்றிப் பார்க்கவில்லை.

Geetha Sambasivam said...

அழகான படங்கள். கீழநத்தம் போயிருக்கோம். ஆனால் உங்க அம்மாவின் பிறந்த ஊர்னு தெரியாது. திருக்குறுங்குடி போனப்போத் தான் நினைச்சுண்டோம். மறுபடி போக ஆசை. பார்க்கலாம். நீங்களும்,உங்க பிள்ளையும் நடந்து வருவதை நானும் பார்த்துக்கொண்டேன். போன பதிவின் வீடியோ தான் பார்க்க முடியவில்லை. இந்தியாவில் ஒருவேளை தெரியலாம்.

ஸ்ரீராம். said...

பழைய இடங்களுக்கு சென்று வந்த மகிழ்ச்சி இன்னும் நிறைய நாட்கள் மனதில் இருக்கும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலியாணையைப் பார்க்க நேரமில்லையா?  ஒரு சுற்று உள்ளே போயிருந்தால் பார்த்திருக்கலாமே அம்மா?

நெல்லைத்தமிழன் said...

என்னென்னவோ எண்ணங்களை வரவழைத்த பதிவு.

நான் வாழ்ந்த வீடும் தெரிகிறது. நாங்கள் விளையாடிய வீதியும் தெரிகிறது.

பிறகு வருகிறேன். பாசன வாய்க்காலா? அது நான் வளர்ந்த தாமிரவருணி ஆறு அல்லவா?

கரந்தை ஜெயக்குமார் said...

பயணங்கள் இனிமையானவை

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
கீழ் நத்தம் போயிருக்கிறீர்களா.

வண்டியை நிறுத்தினதுமே ,யாரு எந்த வீடு என்று அங்கிருந்த
பாட்டி வெளியே வந்து விசாரித்தார்.
உள்ளே வரச்சொல்லி பால் சாப்பிடச் சொன்னார்.
எல்லார் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்துக் கோலம்
போட ஆரம்பித்தார்கள்.
மகன் போய்ப் பூக்களுக்குச் சொல்லிவிட்டு வந்தார்.
ஊர்ப் பெரியவர்கள்,பைகள் நிறைய பவழமல்லி
கொண்டுவந்தார்கள். நம் நெல்லைத்தமிழனுக்கும் இதுதான் ஊர்
என்று சொல்லி இருக்கிறார். அந்தக் கடிதத்தை மீண்டும்
படிக்கணும்.

கட்டாயம் ஒரு பயணம் போய் வாருங்கள். உடல் உறுதி
நன்றாக வலுவாக இருக்கும்போது போய் விட்டு வரவேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
ஆமாம் இப்படி எழுதும்போது நினைத்துப் பார்க்கிறேன். எங்க சீனிம்மாப் பாட்டியின்
அருமைதான் நினைவுக்கு வந்தது.

அங்கேயே இருந்தால் இதை உணர்ந்திருப்பேனோ தெரியாது.
வேறு வேறு பாலங்களைக் கடந்து வந்த
பிறகு, இந்த அன்பு மனதை நெகிழ வைத்ததுமா.
வில்லிபுத்தூர் யானையைப் பார்க்க நேரம் இல்லை மா. அமைந்த
டிரைவர் சரி இல்லை. சுற்றிப் போகணும்னு சொல்லி வண்டியை வெளியே
எடுத்து விட்டார். பெரிய கடை வீதியை மட்டும் பார்த்தேன். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
முன்பே கேட்டுக்காமல் போனேனே.
எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். கோவிலுக்கு அடுத்தாப்போல இருந்தது பட்டாச்சார் வீடு. அதற்கு அடுத்த வீட்டுப் பெண் பார்த்து தோழமையாகச் சிரித்தார். வெளியே வரவில்லை.

உங்கள் வீடு எது.
தாமிர பரணிதானா. வாய்க்கா ஓடுதுன்னு அங்கே சொன்னார்கள்.
இல்லை நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேனோ.
தெரு நடுவில் தண்ணீர் அடிக்கும் பம்ப் இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார். நன்றி மா.

நெல்லைத்தமிழன் said...

முதல் படத்தில் வலதுபுறம் பைக் நிறுத்தப்பட்டிருக்கும் வீடு எங்கள் வீடாக நான் 9ம் வகுப்பு படிக்கும் வரையில் இருந்தது. அதற்குப் பிறகு தெருவின் கடைசியில் ஒரு வீடு வாங்கிக்கொண்டு எங்கள் பெரியப்பா சென்றுவிட்டார்.

நான் சிறுவயதில் வம்புகள் செய்த வீட்டை உள்ளே சென்று பார்த்து படங்கள் எடுத்துக்கொண்டேன். (பெரியப்பா, பெரியம்மா ஆசாரமானவர்கள் என்பதால், சின்ன வயதில், கிச்சன் வாசலில் குறுக்கே படுத்துக்கொள்வேன், கோபம் வரும்போது. என்மீது படவும் முடியாது, என்னைத் தாண்டிச் செல்லவும் முடியாது. ஹா ஹா)

தெருவின் நடுவில் கிணறுதான் இருந்தது. இங்கிருந்து தண்ணீர் எல்லோரும் தத்தம் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள், தங்கள் வீட்டுக் கிணற்றில் நீர் இல்லாதபோது. ரொம்ப வருடங்களுக்கு முன்பு அதில் ஒருவர் குதித்து தற்கொலை செய்த பிறகு, மெதுவாக அந்தக் கிணறு தூர்ந்துவிட்டது. இப்போது அங்கு அடிபம்பு வைக்கும் நிலை வந்துவிட்டதா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, இனிய காலை வணக்கம்.
கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம் அடுத்த வாரம்
இங்கே ப்ரம்மோத்சவம். பெருமாள் இங்கே வந்து 28 வருடங்கள் ஆகிறதாம். அதை ஒட்டி ஜகத்பதி ஜகார்த்தாபதி என்று கொண்டாடுகிறார்கள்.
நல்ல் செல்வந்தர்கள் பராமரிக்கிறார்கள். கைங்கர்யம் செய்கிறார்கள்.
வீட்டுப் பெண்மணிகள் பிரசாதம் செய்து கொடுத்து மாலைகள் கட்டி
சஹஸ்ரனாமம் சொல்லி பிரமாத பளபளப்பாக இருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

கீழ்னத்தம் பெருமாள் கிட்டத்தட்ட 150 வருடங்களாக இருக்கிறார் போலிருக்கிறது.
கட்டடம் கட்டி அவ்வளவு நாட்களாகிறது. அங்கே எழுதி வைத்திருக்கிறது.

கோவிலுக்கு வலது புறம் இரண்டாம் வீட்டில் கோவிலை நிர்வாகம் செய்யும் பெரியவர் தனியாக இருந்தார். மானேஜர் என்று இன்னோருவர் வந்தார்.
கோவிலைப் பற்றி ஏதோ ஒரு மீட்டிங்க் நடந்து முடிந்தது.

முன்னே சொன்ன பெரியவர் தான் அந்த வீட்டில் வந்து தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்.
நீங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கிறது.
அந்தக் கிணறு பக்கம் போகத் தயக்கமாக இருந்தது.
மூடிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
வெளியே பம்ப் மாதிரி தெரிந்தது தப்பாக இருக்கலாம்.
ஆமாம் பெரியவர்களிடமிருந்து லேசில் பணம் பெயராது.

என்னைக் கவர்ந்தது வீதிகளின் சுத்தம் தான்.
மீண்டும் வருகிறேன்.

மாதேவி said...

நீங்காத நினைவுகள்.அழகிய படம்.

நெல்லைத் தமிழன் said...

மனதில் நிறைய எண்ணங்களை வரவழைக்கிறது கீழநத்தம் படங்கள். நான் சிறுவனாக இருந்தபோது முன் மண்டபம் கிடையாது. சாதாரண மர gate கோவிலுக்கு. 80ல் கும்பாபிஷேகம் நடந்தது (அப்போது 5 லட்ச ரூபாய் ஒரு தொழிலதிபர் செலவழித்தார் என்று சொன்னார்கள்).

படத்தில் இடப்புறத்தில் கிட்டத்தட்ட பச்சை/நீலக் கலரில் இரும்புக் கம்பிகள் போட்ட வீடு இருக்கிறதல்லவா? அதனைக் கடைக்காரர் வீடு என்போம். அதற்கு நேர் எதிரான வீடு என் பெரியப்பாவினுடையது (BT Sir என்று சொல்வார்கள்).

அந்தத் தெரு, 3 வயதிலிருந்து எங்கள் காலடித் தடங்கள் பட்டது. என்ன என்னவோ நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. குழந்தைப் பருவம் முதல், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் திரும்பப் பார்க்கின்ற பருவ வயது முதல்.. என்ன என்னவோ நினைவுகள். கோவிலில் நுழைந்ததும் வலது புறத்தில்தான் என் பெரியப்பாவும், நானும் நின்றுகொண்டு சேவாகாலம் சொல்லியிருக்கிறோம். மிகச் சாதாரண இடத்தில் இருந்த என்னையும் பல நாடுகள் பார்க்க, சம்பந்தமே இல்லாத வாழ்க்கையை வாழ அருளியவன் அந்த ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணு கோபாலன்
எல்லோரையும் ரக்ஷிக்க வேண்டும். அங்கிருந்து வந்த யாருமே சோடை
போனதாகத் தெரியவில்லை.

உங்கள் குழந்தைப் பருவம் அங்கே சென்றது என்பதை நினைக்க
மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெரிய மகன் இப்பொழுதும் அங்கே போய் வரவேண்டும் என்கிறார்.
எனக்கு காருகுறிச்சி, அம்பாசமுத்திரம்
எல்லாம் பார்க்க ஆசை.
சேவாகாலம் எல்லாம் சேவித்திருக்கிறீர்களே. நாங்கள் சென்றபோதும் ஒருவர் புஷ்பங்கள் கொண்டுவந்து பாசுரங்களைச் சேவித்துப் போனார்.