Blog Archive

Friday, November 29, 2019

கீழ் நத்தம்////// திருக்குறுங்குடி பயணம் 6

நம்பி ஆறு   எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
திருநெல்வேலி  வந்தாச்சு.
வைணவ நம்பி கோவிலுக்கும் வந்து விட்டோம்.
புகழ் பெற்ற நம்பி கோவில் படிகள் 
வல்லிசிம்ஹன்
பிரகாரச் சிறப்பு சிற்பங்கள் 

Image result for thamirabarani river in tirunelveli
நெல்லையில் தாமிரபரணி .
அனைவரும் துலா ஸ்நானத்திற்கு காவிரியத் தேடித் சென்று கொண்டிருக்கையில்  நான் பொருனையை   நாடிக் கண்டேன்.
கீழநத்தத்தில் கோவிலைத் திறந்ததும் உள்ளே சென்று  ஸ்ரீவேணு கோபாலனைத் தரிசனம் செய்து வைத்தார்  
பட்டாச்சார்.
அதற்குள் ஊர்ப் பெரியவர்கள்  வந்து எங்களை 
விசாரித்தார்கள். ஏதாவது பரிகாரமோ  என்று ஒருவர் கேட்டார்.
வெறும் அபிமானத்தால் வந்தோம் என்று விளக்கினோம்.

கோவில் மிக மிக சுத்தமாக இருந்தது.
கொஞ்சம்  பணத்தேவை  இருந்ததை மிக்க கௌரவமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

முன்பே சொல்லி விட்டு வந்தால் 
தங்கும் இடம்  ஏற்பாடு செய்து,நாங்களே சமைத்துக் கொள்ள வசதியும்  செய்து கொடுப்பதாவும்  என்றும் சொன்னார்கள்.


மிக உயர்ந்த பதவியில் வேலை யில் இருப்பவர்கள் ,சொந்த ஊருக்கு வந்து மாதக்கணக்கில் 
இங்கு வந்து கோவில் கைங்கரியம் செய்வதாகவும் சொன்னார்கள். எல்லோருக்கும் 60 வயதும் அதற்கு மேலேயும் இருக்கும்.

வைகாசி,சித்திரையில் திரு நாட்களுக்கு வருமாறு 
அழைப்பும் விடுத்தனர்.

இந்தக் கிராமமும்  ,கோவிலும் ஸ்ரீவேணுகோபாலன் கருணையில் 
செழிக்க வேண்டும்.
அடுத்த நாள் திருக்குறுங்குடி  பயணம். செல்வோம்.

21 comments:

நெல்லைத்தமிழன் said...

கீழ்நத்தம் கோவிலுக்குச் சென்றாலே சிறு வயதிலிருந்து அங்கு நின்று சொன்ன சேவாகாலம், என் பெரியப்பா மற்றும் பலரும் நினைவிற்கு வந்துவிடுவார்கள். என் இளமைக் காலத்தில் பின்னிப் பிணைந்த ஊர் அது.

மார்கழியின் போது, அதிகாலை 5 மணிக்கு தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு கோவிலுக்குச் சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

சென்ற இடுகையின் முதல் படத்தில் வலது புறம் தெரிவது எங்கள் வீடு. உங்கள் அம்மாவின் வீடு என்று காண்பித்திருந்த போஸ்ட் ஆபீஸாகச் செயல்படும் வீட்டிற்கு எதிரே ஓரிரு வீடுகள் தள்ளி-கோவிலுக்குப் பக்கம், என் அப்பாவின் திருமணம் நடந்தது. நிச்சயம் அவருக்கு உங்கள் பெற்றோரை/தாய் வழியைத் தெரிந்திருக்கும். நீங்கள் உங்கள் வீட்டை அடையாளம் சொன்ன பிறகு அங்கோ அதற்கு அடுத்த வீட்டில் இருந்த 'சீச்சா மாமா' என்று நாங்கள் சொல்பவருடைய மனைவி (நான் 9ம் வகுப்பில் அவருக்கு-சீச்சா மாமாவுக்கு 60 நெருங்கியிருக்கும்) உங்கள் சாயல் போல மனதில் தோன்றுகிறது.

நெல்லைத்தமிழன் said...

எந்த இடத்திலிருந்து தாமிரவருணி படம் எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. கீழநத்தம் படித்துறையா?

நெல்லைத்தமிழன் said...

நம் உணர்வு, நம் கார் டிரைவர்களுக்கோ அல்லது நம்முடன் கூட வருபவர்களுக்கோ இருக்காது.

எனக்கு பாளையங்கோட்டையிலிருந்து கீழநத்தத்திற்கு நடந்து (கீழநத்தத்திலிருந்து பாளை சேவியர் ஸ்கூலுக்கு நடந்த் செல்வேன். 35 பைசா பஸ் டிக்கெட்டுக்கு, அதாவது 70 பைசா ஒரு நாளைக்கு, என் பெரியப்பா கொடுக்க மாட்டார். கஷ்டப்பட்டால்தான் படிப்பு வரும் என்பார், ஓரளவு பணம் வீட்டில் இருந்தபோதும். ஹா ஹா) சென்ற பாதையில் இப்போதும் நடந்து ஒரு முறை சென்று மனதில் பழைய எண்ணங்களை மீட்டுக்கொள்ளணும் என்று எனக்கு ஆசை. அப்போல்லாம், என் பெரியப்பா (அவர் சேவியர் பள்ளிக் கல்லூரியில்-college of education ப்ரொஃபசர்) எனக்கு வேதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே வருவார். நான் அதில் சுவாரசியம் காட்டாமல், வெறும்ன வாயால் சொல்லிக்கொண்டு மனனம் செய்யாது விட்டுவிட்டேன். இப்போது வருந்தி என்ன உபயோகம் ஹா ஹா.

நெல்லைத்தமிழன் said...

நாங்கள் இருந்தபோது என்னைப்போன்ற பாலர்களால், கல்லூரிக் காலம் வரை ஜே ஜே என்று இருந்த ஊர் கீழநத்தம். அப்புறம் என் பெரியப்பா, ஓய்வு காலத்துக்கு திருவனந்தபுரம் சென்றபிறகு, கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அந்த ஊரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

பிறகு எல்லாமே 'பொய்யாய்ப் பழங்கனவாய்' ஆகிவிட்டது. நான் சிறுவனாக இருந்தபோது கோவிலுக்கு இப்போது உள்ள முகப்பு கிடையாது. கோவிலை பெரிதாக புனருத்தாரணம் செய்தவர் கீழநத்தத்தைச் சேர்ந்த, ஆனால் பெங்களூர் தொழிலதிபர். 79களில் 5 லட்சங்களுக்கு மேல் செலவழித்தார்.

என்ன என்னவோ நினைவுகளைக் கொண்டுவருகிறது உங்கள் பதிவு.

ஸ்ரீராம். said...

ஊருக்கு புதிதாய் வந்திருப்பவர்களை அடையாளம் காணும் அளவு சிறிய ஊர்தானா?

கோமதி அரசு said...

மிக அழகான படங்கள்.
பயணம் அருமை.
கோவிலும், அதன் சிற்பங்களும் அழகு.
வேணுகோபாலன் கருணையால் ஊர் செழிப்பாக வேண்டும் என்ற உங்கள் பிரார்த்தனையில் இணைகிறேன்.

துரை செல்வராஜூ said...

எத்தனை எத்தனை பழைய நினைவுகளைத் தூண்டி விட்டிருக்கிறது தங்களது பதிவு...

பெருமாளின் கருணையால் அனைவரும் நலமாக வாழ வேண்டும்....

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Anuprem said...

ஆஹா ...நம்பி ஆறும் ,நம்பி கோவிலும் ..அழகு மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, திரு நெல்வேலியைத் தாண்டி

திருக்குறுங்குடி போகும் வழியில்
ஒரு பாலத்திலிருந்து வண்டியை நிறுத்தச் சொல்லி எடுத்தேன்.
நிறையத் தண்ணீர் ஓடவில்லை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, நான் நின்றிருக்கும் இடம்
எங்கள் வீடு இல்லை.
தபால் அலுவலகம் என்பதால் படம் எடுத்துக் கொண்டேன்.
தாத்தா வீடு இப்போது இருக்கிறதா என்றே தெரியாது.

அம்மா அப்பா திருமணத்துக்கு முன்பே
அவர்கள் சென்னை வந்துவிட்டார்கள். அதாவது 90 ஆண்டுகளுக்கு முன். பிறகு வரப் போக இருந்தார்கள்.
மாமாக்கள் திருவிழா போது வந்து இருந்து விட்டுப் போவார்கள் .
இனிஷியல் தான் கே ஃபார் கீழனத்தம். நிலம் எல்லாம் வித்தாச்சு.

சென்னையில் எங்கள் வீட்டுக்கு அருகில் நாராயணன் என்பவர்
கீழ்னத்தம் குடும்பங்கள் பற்றி குறிப்புகள் வைத்திருந்தார்.
அதிலிருந்து பல செய்திகள் தெரிந்து கொண்டேன். இப்போது அவரது
மனைவி இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் கீழ் நத்தம் நினைவுகள் மிக மிக இனிமை.
அன்பு முரளி. நீங்கள் இன்னும் ஒரு முறை சென்று ஸ்ரீ வேணுகோபாலனைத் தரிசித்து வாருங்கள்.
பெரியப்பா எங்கே இருக்கிறார் இப்போது.
தாமிரபரணியில் நீராடிக் களித்திருக்கிறீர்கள் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஏதோ
ஒரு படித்துறையில் அந்தப் புனித நீரைத் தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டேன்.

பெரிய மகனுக்கு முடிந்த வரை நவ திருப்பதிகளைத் தரிசிக்கும் நோக்கம்.
அந்த வண்டி ஓட்டிக்கு வண்டியை விரட்டு மைலேஜ் ஏற்றுவதில் லாபம்.

எத்தனையோ படங்கள் எடுக்காமலே விட்டுப் போயின.
ஆனால் நினைவில் இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. நீங்கள் சொல்லி இருக்கும் சீச்சா மாமா,
சேச்சாவாக இருப்பாரோ.எங்கள் கீழ நத்த உறவுகள் அனந்த கிருஷ்ணா புரத்துக்கு
மாறிவிட்டதாகப் பாட்டி சொல்வார்.
பாட்டி திருனாட்டுக்கு ஏள்ளியே 20 வருடங்கள் ஆகிவிட்டது.
ஆனால் இவ்வளவாவது எனக்கு கோவில் தரிசனம் கிடைத்ததே
என்று த்ரிப்தி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். ஒரு அக்ரஹாரம் டைப்/
ஒட்டி ஒட்டிவீடுகள்.
பட்டணம் போல இல்லை.
அதே சமயம் வசதிகளும் இருக்கிறது. தண்ணீர்க் குறை இல்லை.
சிக்கனமான மனிதர்கள்.

பார்த்துப் பார்த்து செலவழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அமைதியான ஊர். அதிகபதம் படபட மோட்டார் சைக்கிள்.
யார் வந்திருக்கிறார்கள் என்ற ஆர்வம்.

திண்ணையில் உட்காரச் சொல்லும் நாகரிகம்.
கோவில் தெய்வத்திடம் வைத்திருக்கும் அதீத பாசம்.
எல்லாமே அழகு. நம்மால் இரண்டு நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை மா.
ஏதோ சின்ன வயதில் பசுமையாக
அன்பான பெரியவர்களிடம் இருந்த நினைவுகள்
எப்பொழுதும் இனிமை. நம் நெல்லைத்தமிழன் அங்கேயே
இருந்திருக்கிறார்.அவரது நினைவுகளே கீழ் நத்தம் தான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனும்மா. சிரத்தையாகப் படித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி மா.

Geetha Sambasivam said...

நம்பி ஆறு என்று தி/கீதா, நீங்க, நெ.த. ஆகியோர் சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போத் தான் படத்தில் பார்க்கிறேன். திருக்குறுங்குடி போனப்போப் பார்த்தோமானு நினைவில் இல்லை.

Geetha Sambasivam said...

நம்பி ஆறு என்று தி/கீதா, நீங்க, நெ.த. ஆகியோர் சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போத் தான் படத்தில் பார்க்கிறேன். திருக்குறுங்குடி போனப்போப் பார்த்தோமானு நினைவில் இல்லை.

மாதேவி said...

அழகிய ஊர். ஆடம்பரமற்றது கேட்கவே இனிமை.