|
Add caption |
|
Add caption |
|
எம்பெருமானார் சந்நிதி திருக்குறுங்குடி. |
|
எங்கேப்பார்த்தாலும் வேப்பமரம் |
|
Add caption |
வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
ஐந்து நம்பிகளும் எம்பெருமானா ரும் இருக்கும் இடம். திருமங்கையாழ்வாரின் திருவரசும் அமைந்திருக்கும் புனித இடம் திருக்குறுங்குடி.
|
Add caption |
|
Add caption |
|
நல்ல உயரமான அழகிய வைஷ்ணவ நம்பி |
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
|
சுந்தரவல்லி திருக்குறுங்குடி |
கூடவே இருந்த குறுங்குடி வல்லி அலட்சியமாகப் போஸ் கொடுக்க மறுத்து விட்டார்.
பாகன் பார்க்கும்போது சாதுவாகத் தூசி தட்டி,கீற்றுகளைச் சாப்பிட்டார்.
பாகன் அந்தப் பக்கம் திரும்பினால் அப்படியே சாப்பிடுவதும் ஒரே கலாட்டா.
,,
|
குறுங்குடி வல்லி . |
|
மஹேந்திர கிரி . அனுமன் பாதங்கள் பதிந்த இடம். இங்கிருந்து இலங்கையை நோக்கி பறந்த பயணம் . பாட்டி சொன்னது.
திருநெல்வேலியிலிருந்து கிளம்பும்போது தொடங்கிய இனிய மழை குறுங்குடி வரை தொடர்ந்தது. கோயில் வாசலில் வண்டியிலே உட்கார்ந்திருந்தோம் எப்படி கோவில் உள்ளே போவது. நமக்காகக் காத்திருக்கும் பட்டர் சுவாமிகளுக்கும் சொல்ல வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவரே வந்துவிட்டார். எதிரே தெரிந்த செம்மண் இட்ட படிகளையே எத்தனை நிமிடங்கள் பார்த்தேனோ . எத்தனை வருடக் கனவு இது .இவ்வளவு பெரிய கோயிலை இன்று மட்டும் பார்த்து முடியுமா,என்று நினைக்கும் போதே யானைகள் சத்தம் கேட்டது.
வில்லிபுத்தூரில் விட்டு விட்ட பாக்கியம் இங்கே பிடித்து விடலாம் என்று சப்தம் வந்த திசையை நோக்கி நடந்தேன். ஒன்றல்ல இரண்டு யானைகள் என்னை அளந்தன.. தென்னை ஓலைகளை சுவைத்தபடி, அவர்கள் இருவரும் செய்த இன்னொரு வேலை. ஓலைகளைத் தூசி தட்டி சாப்பிடுவதே
அதிசயமாக இருந்தது. துதிக்கைகள் ஆட, உடல் அங்கும் இங்கும் அசைய, கண்கள் என்னை விட்டு அகலாமல் பார்க்க, மனமில்லாமல் நகர்ந்தேன். வடக்கு வாசலில் கைகூப்பி வணங்கி உள்ளே நுழையும் போதே நான்தான் பிரம்மராட்சச வம்சத்தின் ஐந்தாம் தலை முறை என்று ஒருவர் அறிமுகப் படுத்தி கே கொண்டார். தொடருவோம்.
|
15 comments:
படங்கள் அழகு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் பதிவுலகம் பக்கம் வர முடிந்தது. நிறைய பதிவுகள் விடுபட்டு இருக்கின்றன. முடிந்த போது படிக்கிறேன்.
பயணம் முடிந்து இந்தியாவிலிருந்து புறப்பட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்து சந்திப்போம்.
மிக அழகான படங்கள். கடல் அலை போல் காணப்படுகிறது தாமிரபரணி ஆறுதானே? அழகு.
பொதிகை காற்று தவழ்ந்து வரும் மலை சிகரங்கள் அழகு.
வல்லியை பார்த்து விட்டீர்கள் காணொளி வரவில்லையே!
அழகிய வைஷ்ணவ நம்பியை வணங்கி கொண்டேன்.
நன்றி.
பாகன் பார்க்காதபோது அப்படியே சாப்பிடும் யானையின் குறும்பு புன்னகைக்க வைக்கிறது!
அந்த மலையும் நீர்நிலையும் இருக்கும் படம் வெகு அழகு. பிரம்ம ராட்சச வம்சமா? இதென்ன?
ஓம் நமோ நாராயணா ...
எத்தைகைய அழகான இடம் ...மிக ரசித்தேன் அம்மா ..
உங்கள் எழுத்து நான் சென்றிருந்த திருக்குறுங்குடி பயணத்தை நினைவுபடுத்திவிட்டது.
நிச்சயம் மலைமேல்நம்பி கோவிலுக்கு நீங்கள் இந்தப் பயணத்தில் சென்றிருக்கமாட்டீர்கள். மற்றபடி உணவுக்கு பிரச்சனை இருந்திருக்காது.
படங்கள் ரசனையாக இருந்தது அம்மா.
அன்பு வெங்கட்,
வரணும் பா. நலமா. உண்மையில் கவலையாக இருந்தது.
காணோமே என்று.
இனிமேல் விடுமுறை எடுத்துக் கொள்வதனால்
ஒரு வார்த்தை எழுதிப் போடுங்கள்.
பயணம் இனிதே முடித்து இந்தோனேஷியா வந்தாச்சு.
நன்றி மா.குடும்பத்தில் அனைவருக்கும் என் அன்பு.
அன்பு கோமதி மா. தாமிரபரணிதான்.
மலைகளில் ஐப்பசி மழை அதனால் தண்ணீர்
நிறைய போகிறது என்றார்கள்.
நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைவு.இப்போது வந்திருக்கும்.
நல்ல தரிசனம் நிதானமாக நடந்தது.எல்லாமே வண்ணக் கலவையோடு மூலவர்களின் தரிசனம்
அழகு. ஆனால் தொலைவிலேயே நிறுத்திக் கம்பி போட்டு விடுகிறார்கள்.எனக்கும் காணொளி இயங்கவில்லை.கோமதி. தனி மெயில் அனுப்பி இருக்கேன்.
ஆமாம் ஸ்ரீராம். அவரும் சளைக்காமல் அதட்ட
அதுவும் சளைக்காமல் புரட்டி அசை போடுகிறது.
என்ன அழகா அந்தக் கீற்றுகளைக் காலில் தட்டி
தூசி போக்குகிறது மா. அசாத்திய ஞானம்.பிரம்ம ராட்சஸ் கதை அடுத்த பதிவில் ஸ்ரீராம். கைசிக புராணக்கதை.கார்த்திகை வளர்பிறை துவாதசி கைசிக துவாதசி.
அன்பு அனு ப்ரேம், சத்தமே இல்லாத ஊர்.ஆறுகூட அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.
சென்று சேவிக்க முடிந்தது ஒரு பாக்கியம்.
ஆமாம் முரளி மா. நீங்கள் அனுப்பிய மலைமேல் நம்பி
வீடியொவை எத்தனை தடவை பார்த்தேனோ நினைவில்லை.
கோவில் வாசலில் ஜீப் இருந்தது. பட்டர் உங்களால் முடியாத காரியம் என்று சொல்லி விட்டார். முதுகெலும்பெல்லாம் உலுக்கி எடுக்கும் பயணமாக அது இருந்திருக்கும்.
ஆனால் அழகாக அமைந்திருக்கும். கிடைத்த வரை லாபம்.
நீங்கள் சொல்வது சரி உணவுக்குப் பிரச்சினை இல்லை. வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தார் ராமானுஜ பட்டர்.
மிக மிக நன்றி அன்பு தேவ கோட்டை ஜி.
இந்தப் பதிவும் படிக்க முடியுது! படங்களோடு கூடிய அழகான பதிவு.
படிக்கும் போது மனம் இளகியது.
Post a Comment