Tuesday, August 03, 2010

வாடகை கொடுக்காத குடியிருப்புகள்
இருக்கும் இடம் எங்கே சொல் இறைவாஇடம் தேடும் பறவைகள் :)
வெளியேறிய பத்தடி மர அலமாரி
சுவர் ''காளி ''.கரையான்களை அழித்ததால் :)
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல :(

வரவேற்பா,தூக்கமா:0)


எல்லோரும் வாழ வேண்டும்.

கற்றது.  காலில்லாமல் மரப் பொருட்கள்(பீரோ)
vantha வைத்தால் காலும் வாயும் உள்ள கரையான்கள் குடி புகும்.
 அனுபவம் இல்லாத கார்பெண்டர் வீட்டில் நுழைந்தால் விபரீத அனுபவங்களைச் சந்திக்க  நேரும்.
எப்படியோ  பத்து வருடங்கள் முன் செய்த  தவறு,இப்போதாவது விழித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் புத்தகப் புழுக்கள,செல்  எனப்படும் அரித்துக் செல்லும் கரையான்களா, பெயர் சொல்லத் தெரியவில்லை. தோல் இருக்க சுளை முழுங்கும் ஜீவராசிகளைக் சந்திக்கும்  பாக்கியம் நேற்று கிடைத்தது.
  பழைய ஆல்பங்களின் ரெக்சின் உரைகள் மூடியிருக்க உள்ளே எப்படிப் புகுந்தன இவை??
வந்த மரவேலைசெய்பவர்,  பல நாட்கள்  தொந்தரவு செய்ததால் இந்தப் பத்தடி பீரோவை
படுக்கை அறையில் வைத்தோம். தரிக்கும் கூரைக்குமாக ஒரு ராட்சச அளவில்
பார்க்க ,முதலில் நன்றாகத் தான் இருந்தது.
அந்த ஆள், பலகைகளை முன்னேற  பாடாகக் கொண்டுவந்தபோது கூடச்க் சந்தேகப் படவில்லை.
அவன் கொண்டுவந்தது வெறும் பெயின்ட் அடித்த  ஆனால்   பூச்சிக் கொல்லி பூசின  மாம்பலகை  என்று நம்பினோம் பாருங்கள். அதுதான் தப்பு.
வெறும் மட்ட ரக  பிளைவுட்  உள்ளே ஏதோ  வைத்து,பார்க்கக் கனமாக இருந்ததால்,
.............ரூபாய் கொடுத்து   உள்ளேயும்  வைத்தாகிவிட்டது.
2004lilrunthu    ஆறு வருடங்கள் எல்லாவற்றையும் வைக்க இடம் கிடைத்த்து. பிரச்சினை கால்கலில் இருக்கு என்ரு தெரியாமல் தலையைக் கோதி, சீர் செய்தால்,என்ன நடக்குமோ அது நடந்துவிட்டது. கால் இருக்க வேண்டிய இடத்தில் மூடிபோட்டுப், பூச்சி எல்லாம் அடையாமல் இருக்கும் சார்னு அவன் சொன்னதை நம்பினோம்.


யாரும் என்னை நோகவேண்டாம், ஏதுடா வல்லிமா,இப்படி ஒரு தொழிலாளிய அவன் இவன் என்கிறாரெ என்று.

நேற்று நங்கள் இந்த பெரிய பீரோவை அகற்றப் பட்ட பாடு, கரயான்கள் மேலும் பரவாமல் இருக்க எடுத்த முயற்சிகள் ,70 வயதில் போராட வேண்டிய காரியமா. பாவம் எங்கள் சிங்கம். இரண்டே இரண்டு ஆட்களை வைத்துக் கொண்டு ,சிரமப்பட்டு வெளியேற்றினார் அந்த அலமாரியை.

அதற்கு முன் உள்ளே இருந்த அனைத்துப் புடைவகள், படுக்கை விரிப்புகள்,திரைச்சீலைகள் ,ஸ்வெட்டர்கள்(வெளியூர் போனால் வாங்குபவை) இத்யாதிகளை வெளியில் இப்போதைய வரவேற்பரையில் அடைத்தேன்.

இஸ்திரி மீனா, ''அம்மா, வீடு மாத்தறீங்களான்னு கேட்டு'' மானத்தை வாங்கினாள்:)

சோகக் கதை போதும்.

மக்களா, மரவிஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள். நான் இனிமேல் காத்ரேஜுக்கு மாறுவது என்று தீர்மானம் செய்துவிட்டேன்.

19 comments:

அமைதிச்சாரல் said...

உங்க பாடு கஷ்டம்தான் :-(( நல்ல கார்ப்பெண்டர் கிடைக்கவும் கொடுத்து வெச்சிருக்கணும் போலிருக்கு...

எங்கூட்லயும் ப்ளைவுட்ல பண்ணின வார்ட்ரோப்தான்(இங்கே ஏது மரம்)93ல் செஞ்சது. கல்லாட்டம் கிண்ணுன்னு இருக்கு.

துளசி கோபால் said...

ஐயோ..... இப்படியெல்லாமா????/

அடப் பாவமே :(

இரும்பைத் துளைக்கும் கறையான் இருக்காதுன்னு நம்புவோம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கமா சாரல்.
எங்கள் மகன் மும்பையில் இருந்த போது அங்க தடுப்பு சுவர் கூட மரம் தான்.
கட்டில்,அலமாரிகள் எல்லாம் சர்வம் மரம். அந்த மழைக்கு ஒன்றும் ஆகாது.
நாந்தான் முதலில் குறிப்பிட்டேன் பார்த்தீர்களா.
பீரோவின் அடிபாகத்தை மூடியது. அங்குதான் பிரச்சினை. கூல் அண்ட் வார்ம். உயிரங்கள் உற்பத்திக்கு ஏஏற்ற சூழ்நிலை.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி,,
இந்த பீரோவும் அடியில் மூடாமல் இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

Anonymous said...

கரையான் வந்தா எல்லாத்தையும் அரிச்சுடுமே

இந்த மாதிரி வெளில எடுத்து திருப்பி அடுக்கற விஷயம்னாலே எனக்கு சோம்பேறித்தனம்.

Sumathi said...

கஷ்டம்தான் வல்லிம்மா மர அலமாரி என்று மட்டும் இல்லை தண்ணீர் படும் இடங்களில் உள்ள நிலைபடி போன்றவற்றையும் அரித்துவிடுகின்றன பார்து அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியுள்ளது நம் ஊரில் என்று என் அத்தை சொல்லுவார்கள் வல்லிம்மா.

கீதா சாம்பசிவம் said...

நம்ம வீட்டிலேயும் இல்லாத ஜீவராசிகள் கிடையாது. எல்லாரும் வந்து குடியிருக்காங்க. அப்போப்போ பார்த்துட்டே இருக்கணும்,:)))))))))) இல்லாட்டி ஏமாத்திடுவாங்க. இப்போப் பாருங்க வாழையில் ஒரு மரம் பாக்கி யில்லாமல் குளவிக்கூடு, ஒரு இலை பறிக்க விடறதில்லை. விருக்ஷியிலும் கட்டி இருக்கா. பூவைக் கண்ணாலே பாரு போதும்னு சொல்லுது. அப்புறம் அதுவும் எங்கேதான் போகும்? அதுங்களும் பிழைக்கவேண்டாமா?? விட்டுடறது தான்! :))))))))))

ஸ்ரீராம். said...

நம்முடைய அனுபவங்களுக்குக் காத்திருக்காமல் இதைத்தான் அடுத்தவர்கள் அனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக் கொள்வது என்பது...! (எங்களைச் சொல்கிறேன்)

வல்லிசிம்ஹன் said...

வரணூம் அம்மிணீ. இப்ப அதைத்தான் செய்யப் போகிறேன்:)
பீரோ ஆர்டர் கொடுத்தால் 10 நாட்கள் ஆகுமாம். பொட்டிகளைக் கொண்டு வந்திருக்கிறேன்.இப்போதைக்கு அடுக்கி வைக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா சுமதி.
ஒருதடவையை வாசல்நிலைக்கு அப்படியாச்சு.
இப்போது வேறு நிலைவாசல் வைத்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

கீதா,நீங்க ப்ளூக்ராஸ் நடத்த வேண்டியது:)
அவ்வளவு ஜீவ காருண்யம். கடவுளே உங்க சுப்புவைநினைத்தால் நடுங்குகிறது.
மாதா கீதாநந்தமயி.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
பெரியவர்கள் அதற்குத்தானே இருக்கோம்:)

கொஞ்சம் மந்தமான அம்மா,அதுதான் வித்யாசம்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கீழ வீட்டில் கரையான் வந்து அது எங்கள் வீட்டுக்கும் வந்துட்டது.. அப்பறம் ஆளைக்கூப்பிட்டு இரண்டு அடிக்கு வீட்டில் ஒரு ஊசி மூலம் மருந்து போட்டிருக்காங்க .. இனி வராதுன்னு.. .. ஈரப்பதம் அதிகமா செவத்துல வைக்கறது கவனிக்காம விட்டிருக்காங்க.முதல்ல இல்லவே இல்லை எஙக் வீட்டுலன்னுசாதிச்சவங்க.. அடுத்த மாதமே காதும் காதும் வச்ச மாதிரி இஞ்செக்சன் ஏத்தி இருக்காங்க அவங்க வீட்டுலயும்.. :) எங்க வீட்டுல செவத்தை ஒட்டிய எல்லா அலமாரியையும் இரும்பாலேயே மூடிட்டம்..பாக்க மரம் மாதிரி கலரில் இரும்பு மூடிகள்.. யாராலாகும் திரும்ப அடுக்க

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து.டெல்லிலயா கரையான் வந்தது.
நாங்களும் பெஸ்டிசைட்ல சொல்லி இருக்கோம். பீரோ போனது கூட வேதனையில்லை. பசங்களோட கல்யாண ஆல்பத்தை சில பக்கங்களின் ஓரங்களைத் தின்றிருக்கின்றன.திருமண சிடிக்கள் இருக்கின்றன.என் கவனத்தை வேறுபக்கத்தில் திருப்பிவிட்டு, பீரோவின் அடியில் இவைகள் இருந்திருக்கின்றன என்றால் ,ப்ரஷர் தலைக்கேறுகிறது.:)பரவாயில்லை.ஊசிபோட்டுச் சரி செய்துவிடலாம்.நன்றிம்மா.

கீதா சாம்பசிவம் said...

கடவுளே உங்க சுப்புவைநினைத்தால் நடுங்குகிறது.//

நீங்க வேறே வல்லி, கொஞ்ச நாட்களா/மாதங்களா, சுப்புக்குட்டி கண்ணிலேயே படலை. என்ன ஆச்சுனு புரியலை, திவா வேறே பூனை சாப்பிட்டிருக்கும்னு சொல்றாரா ஒரே கவலை!

Matangi Mawley said...

உங்க carpenter கதைய கேட்டா எனக்கு எங்க தாத்தா நெனப்பு வரது. அவர் இந்த carpnters எல்லாரையும் ஆத்துல வச்சுண்டு தான் வேல வாங்குவார். நம்ப கண்ணு முன்னாடி தான் எல்லாம் நடக்கனும்னு சொல்லுவார்! நிஜம் தான் அது!

Jayashree said...

அட ராமா ! இது வந்தா போகாதே வல்லியம்மா. டெர்மிடொர் மாதிரி எதாவது ஸ்ப்ரே பண்ணினா வராதோ? compressed wood,untreated ply problem தான்.என் அப்பாவோட collaegue சொல்லுவார் புஸ்தக அலமாரில, புக்ஸ்க்கு நடுவே தாராளமா வசம்பு போட சொல்லி.அதுக்கு ஏதாவது புது பூச்சி வரும்:(( TERMITES பெரிய clean up தான். தாவு தீந்துடும்.பாத்து விசாரிச்சே பண்ணுங்கோ. weekend wash மூட்டை துணி மடிச்சு வெச்சிண்டே படிச்சேன். உங்க LOUNGE ல யும் துணி மூட்ட பாத்து வெல வெலனு வந்துடுத்து.துணி.....வேண்டித்தான் இருக்கு BUT சுத்தி இருந்தா ஓச்சலா தான் இருக்கும்.Hope the clean up goes well!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதங்கி. இவருக்கே கார்பண்டரி வேலை எல்லாம் தெரியும்.
இரண்டே இரண்டு நாட்கள் வெளி வேலை இருந்தது. அப்ப இந்த பாக்ஸ் டைப் காலை மாட்டிவிட்டுவிட்டான். :)
உங்க தாத்தாவுக்கு இந்தப் பிரச்சினை வந்தே இருக்காது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ.
ஒரே ஒரு மிஸ்டேக். அது தன் ரூபத்தைக் காட்டாமல் நம்மை விடுவதில்லை. எப்பவுமே ''ஆன் கார்ட்'' இருக்க வேண்டும். நன்றிமா.