அன்பு அமைதிச்சாரல் எனக்குப் பத்துக் கேள்விகளை
அனுப்பித் தொடரச்சொன்னார்.
இது ஒரு மாதிரி ''திரும்பிப் பார்க்கிறேன்'' ஆகிவிட்டது.
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் . என்றாலும் ஒருவரையும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.
மறந்திருந்தால் கட்டாயம் மன்னிக்கணும்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வல்லிசிம்ஹன்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது உண்மையில் பாதிப்பெயர். வீட்டுக்காரருடையது . வல்லிநாச்சியார். எப்பவும் புனை பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை.:) வேற காரணம் இல்லை.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
கதை சொல்லப் பிடிக்கும். பேசப் பிடிக்கும். பேசுவதைக் கேட்க தற்போதைக்கு இங்க சாமிகளும்,ஆசாமியும் தான் இருக்காங்க.
இரண்டுமே திரும்பி பதில் பேசாது. நீ பெரியவளானாட்டு என்ன செய்வே என்று யாராவது கேட்டால் நிறையக் கதைப் புத்தகம் படிச்சு எழுதுவேன் என்று சொன்ன நினைவு இருக்கிறது.அதனாலதான் ரொம்ப லேட்டாக எழுத வந்தேன்.!!
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒன்றுமே செய்யவில்லை. செய்திருக்கலாம் வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தால் சாப்பிட யோசிக்கும் சோம்பேறி.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
முக்கால் வாசிப் பதிவுகள் என் சொந்த அனுபவங்கள் தான்.
சிலது சிரிக்க வைக்கும். சிலது அய்யொடா இது ஏன் இந்த வல்லிம்மா இப்படி அழறாங்கன்னு சொல்ல வைக்கும்.
சிலது பக்திபூர்வமா இருக்கும்.அதுக்காக ஆன்மீகம் பக்கம் உறுதியாக இருந்தால் ஒழிய போக மாட்டேன்
சிலது போட்டோ,பயணமாக இருக்கும்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா
சம்பாதிக்கலாம்னு தெரியாது. யாரும் கொடுக்கப் போகிறதில்லை.
இப்போதைக்கு இது ஒரு தொடர் அடிக்ஷனாகப் பீடித்திருக்கிறது.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து நிறுத்திவிட்டேன்.
குழந்தைகளுக்காக ஆரம்பித்து அதுவும் அப்பப்போ எழுதுகிறேன்.
படங்கள் மட்டும் போடுவதற்காக என்று ஒன்று.
நிச்சயமாக அப்டேட் செய்வது நாச்சியார் தளம் மட்டுமெ.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்
வீணாக விவாதங்கள் நடக்கும்போது தோன்றும்,. கோபம்.
ஓ நிறைய பொறாமைப் படுவேன். வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான என் சக பதிவாளினிகளைப் பார்த்து அதிசயப் பொறாமை வரும்.
படிக்கக் கண்கொடுத்த இறைவனை வேண்டி இவர்களை வாழ்த்திவிடுவேன்
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் என்றால், துளசி, அம்பி,அபி அப்பா, வடுவூர் குமார்,கீதா சாம்பசிவம்,கோவி.கண்ணன் நாகை சிவா,கோபிநாத்,,சுலைமான்,மௌலி .தருமி,ஓகை ,கண்மணி, ,பொன்ஸ்....................
என்னைப் பாடவைத்த ரவி,சர்வேசன்,இன்னும் என் பதிவு கலைமகளில் தெரியவைத்த ஷைலஜா ...
துளசிகோபால் மட்டுமே பின்னூட்டம் இட்ட பதிவுகளும் உண்டு.:))கீதாவும் துளசியும் என் எழுத்துக்கு உற்சாகம் கொடுப்பவர்கள்.
பிறகு ஆயில்யன்,இலவசம்,,சின்ன அம்மிணி, ,நானானி, திவா தம்பி .
ராமலக்ஷ்மி,தென்றல்,முல்லை,சாரல்,முத்துலட்சுமி,கோமதி தங்கச்சி
இப்போ மாதங்கி மௌலி,ஜயஷ்ரீ,சுமதி.,எல்.கே,.,திவா தம்பி .
எழுத்துக்குத் தகுந்த பின்னூட்டங்கள் வரும்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
இனிமேல் சொல்ல ஒன்றும் கிடையாது.அநேகமாக என் எழுத்துக்களால் என்னைத் தெரிந்தவர்கள் என் நண்பர்கள்.
அவர்களுக்குச் சொல்ல வேண்டியது நன்றி மட்டுமே.
பதிவுகள் எனக்கு வடிகால். பின்னூட்டங்கள் எனக்கு மருந்து.
எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை.
இன்னும் அழைக்கப் படாதவர்கள் யார் என்று தெரியவில்லை.
இருந்தாலும்
தம்பி திருமூர்த்தி வாசுதேவனையும்,
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தக்குடுவையும்
&&&&&&&&&&&&&
பினாத்தலாரையும்,
&&&&&&&&&&&&&&&&&
நுனிப்புல் உஷாவயும்
&&&&&&&&&&&&&&&&
அழைக்க ஆசை.
முடிந்தால் நேரமிருக்கும்போது எழுதுங்கள்.:)
எல்லோரும் வாழ வேண்டும்.

ஆடிப்பூரத்து அழகியும் |
திருமலை வேங்கடவனும் |
இன்னும் அழைக்கப் படாதவர்கள் யார் என்று தெரியவில்லை.
இருந்தாலும்
தம்பி திருமூர்த்தி வாசுதேவனையும்,
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தக்குடுவையும்
&&&&&&&&&&&&&
பினாத்தலாரையும்,
&&&&&&&&&&&&&&&&&
நுனிப்புல் உஷாவயும்
&&&&&&&&&&&&&&&&
அழைக்க ஆசை.
முடிந்தால் நேரமிருக்கும்போது எழுதுங்கள்.:)
எல்லோரும் வாழ வேண்டும்.
28 comments:
அருமையான கேள்விகள் ,அருமையான பதில்கள்.
உங்களை உற்சாகப் படுத்துபவர் லிஸ்ட்டில் இந்த கோமதி தங்கச்சி பேரும்
இருப்பது என்க்கு மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்கு நன்றிஅக்கா.
//
எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை.//
ஆஹா..... போட்டயேம்மா ஒரு போடு!!!!
அதே அதே அதேதான்:-))))
உங்க ஸ்டைல்ல அழகான பதில்கள் வல்லிம்மா
very well answered!! :)
நல்ல ஒரு "திரும்பிப்பார்" நாச்சியாரே!!:)
நான் உங்கள் எழுத்தில் முதன் முதலா படித்தது அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்:)))).எழுதியிருந்த விதம் பிடித்தது. படிக்கத் துடங்கினேன்.முதலில் எப்போதாவது. இப்ப FAIRLY REGULARLY AS TIME PERMITS.
திரு ஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!! என்னிக்கு திருஆடிப்பூரம்??. நம்ப வீட்டுப்பாட்டு திருஆடிப்பூரத்து ஜகத்துதித்தான்(ர்) வாழியே!:))
அன்பு கோமதி,எதையும் எதிர்பாராத இந்த நட்புத்தான் பிடித்திருக்கு.
வந்து பார்த்ததிற்கும் மிகவும் நன்றி.
எல்லா பதில்களும் நன்றாக உள்ளன வல்லிம்மா. என்னையும் உங்களுக்கு பின்னுட்டமிடுபவர் வரிசையில் சேர்த்தமைக்கு நன்றி வல்லிம்மா. உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது ஊரை விட்டு இருந்தாலும் எல்லோரையும் நேரில் பார்க்கும் மகிழ்ச்சி கிடைக்கின்றது வல்லிம்மா :))))
நான் படிக்கிற முதல் பதிவே உங்களைப் பற்றிய அறிமுகம்.. :))
//இரண்டுமே திரும்பி பதில் பேசாது.//
//எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை.//
ரொம்ப நல்லாருக்கு.
நிசந்தானே தங்கச்சி:)
எழுதாம இருந்தா கைபரபரன்னு வரது.
பதிவு பின்னூட்டம் இப்படியே மூளை ஓடறது.:)
ஓவராப் பேசிட்டேனோ துளசி:)
வாங்கப்பா சின்ன அம்மிணி, ஸ்டைல ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி.:)
Thank you Mathangi. yr comments make me really happy.
நன்றி ஜயஷ்ரீ. அதென்ன ஆடிப்பூரத்தான். வீட்டுக்காரருக்குப் பிறந்த நாளா:) ஆகஸ்ட் 12 ஆடிப்பூரம். ஃபேர்லி ரெகுலர் விசிட்டருக்கு ரொம்ப நன்றி.
தொடர்ந்ததுக்கு நன்றி வல்லிம்மா.
//எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை.//
சரியா சொன்னீங்க.
எளிமையான, நேர்மையான பகிர்வுகள்... சுவாரஸ்யமான தொடர்பதிவு. பல தளங்களிலும் ரசித்துப் படிக்க முடிகிறது.
நல்ல பதிவு. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..
http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html
வாங்க சுசி.
இனிமையான நல்வரவு.இன்னுமொரு தோழி கிடைத்தது சந்தோஷம்.உங்கள் பதிவையும் படித்தேன்:)
உங்க பிறந்த வீட்டைப் பற்றின புகைப்படங்களையும் பார்த்தேன்.வெகு அழகு. மிக்க நன்றிமா.
வரணும் ஸ்ரீராம். நிறைய பதிவுகளைப் படிக்க முடியாமல் நேரம் நெருக்குகிறது.தவறாமல் பின்னூடமிடும் உங்களையும் குறிப்பிடாமல் விட்டேனே:(
அழைத்து என்னை எழுத வைத்த உங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும் சாரல்.சாரல் என்னும்போதே இனிமை மனதை வருடும்.மதுரையில் இருக்கும்போது ஆனி மாதம் பிறக்கும்போது சிறு தூரல் ஆரம்பிக்கும். அவ்வப்போது பன்னீர் தூவும். அதனால் உங்களை அமைதிச்சாரல் என்று அழைக்காமல் வெறும்சாரல் என்றே அழைக்கணும்னு தோணுகிறது பா. நன்றி.
நன்றி தமிழ்மகன்,
இணைப்பு கொடுத்ததற்கும் இங்கு வருகைதந்தற்கும். பார்க்கிறேன்.
இன்றுதான் இப்பதிவைப் பார்த்தேன் வல்லியம்மா...அவ்வப்போது வரும் என்னையும் நினைவில் வைத்துச் சொல்லியிருக்கீங்க...உங்களது அன்புக்கு மிக்க நன்றி.
எவ்வளவு அழகாக உங்களது இளமைக்காலத்தை அசை போட்டீர்கள், அந்தப் பதிவுகளும், சித்ர ராமாயணமும் என்றும் என்மனதில் தோன்றும்.
அன்பு மௌலி,வளரும்பொழுது வந்து உரம் இட்டவர்களை எப்படி மறக்கமுடியும். இப்பொழுது எல்லோருக்குமே வேலைகளும் நிறைய.நினைவில் இருந்தால் போதும். உங்களைப் போன்ற,அம்பியைப் போன்ற ,திரச,கீதா,துளசி இவர்களால் தான் நான் ஒரு அடையாளத்தை அடைந்தேன்.மிக மிக வருத்தம் சூழ்ந்த நிலையில் பதிவுகளை ஆரம்பித்து இன்று வரை ஏதோ தேறி இருக்கிறேன் என்றால் அதற்கு நீங்களெல்லோருமே காரணம்.எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்.
ரொம்பப்பிடித்தது வல்லிசிம்ஹன்.
எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை//
கலக்கல் வல்லிம்மா.
வாங்க மாதேவி. உங்கள் பெயரை விட்டு எழுதிவிட்டேன்.
அனுபவித்துப் படித்துவருவதற்கு மிகவும் நன்றி.
வாங்கப்பா தென்றல். அந்த வாக்கியத்தை எழுதினப்புறமா தான் புரிந்தது.அறியாத உண்மைகளை நம் விரல்கள் உணர வைக்கிறது.! நன்றிப்பா.
கரையான்கள் மீண்டும் படையெடுத்திருக்கின்றன பழைய அலமாரியில் ரெண்டு நாட்கள் பிடிக்கும், மீண்டு வர:(
vallimma, buzzla comment potten inga maranthutten... nalla pagivru. nan tamilla elutha neengalum oru kaaranam
எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை//
என்ன எளிமையா சொல்லிட்டீங்க நம்ம இன்றைய நிலையை.. :)
நல்ல பதில்கள்.. நன்றி வல்லி..
நல்ல பகிர்வு!!
Post a Comment