vallisimhan
சென்னையில் இருக்கும்போது காணாமல் போன
பழைய புத்தகங்கள் இங்கே துபாயில் வீட்டு மேல் அலமாரியில் கிடைத்தன,.
அவைஎன் தந்தையால் பைண்டு செய்யப் பட்ட வீட்டுவைத்தியம் என்ற
புத்தகமும் ஒன்று.ஸ்ரீஹரி அவர்கள் எழுதியது. இதைப் படித்தாலே பாதி வியாதி பறந்து விடும் போலிருக்கிறது.
அங்கங்கே மிளிரும் நகைச்சுவை.
பீரோமேல் உட்கார்ந்திருக்கும் பையனுக்கு விளக்கெண்ணெய் குடிக்கக் கொடுக்கும் அம்மா. கூடவே அப்பா. எத்தனை உணர்ச்சிகள்!
இது அம்மாவின் தந்தை சேர்த்துவைத்து அம்மாவுக்கு அனுப்பிய விகடன் அத்தியாயங்கள்.
.
பிஸ்ரீ அவர்களின் கம்பராமாயணக் குறிப்பு. ஸ்ரீரங்கம் நரசிம்மன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.
சியாமா ''என்பவர் எழுதிய கதை அழகான மணியான
ஓவியங்கள்,
ஸ்ரீதர் அவர்களின்
நகைச்ச்சுவைத் துணுக்குகள்,
விதவிதமான விளம்பரங்கள். அந்நிய நாட்டு நடிகைகள் போஸ் கொடுக்கும்
விளம்பரங்கள்.
சியாமா எழுதி இருக்கும் வேளைவரவில்லை கதை மனித எண்ணங்கள்
புனித மடையும் நேரம் மரணம் நெருங்கும்போது என்பதை விளக்கமாகக் கோர்வையாக
எடுத்துச் செல்லுகிறது.
வியாபாரி,இளம்சந்நியாசி,
இரு குழந்தைகள்,
கேப்டன் அமர்நாத்,
விமானப் பணிப்பெண்
சமூக சேவகி அம்மையார் எல்லோரும் வேறு வேறு விதத்தில்
அந்த ஆபத்தை உணருகிறார்கள்.
இளம் சந்யாசியும்,பணிப்பெண்ணும் மனம் தளராமல் மற்றவர் நலனை வேண்டுஜ்கிறார்கள்.
விமானம் ஆபத்தைக் கடந்து தரை இறங்கியதும்
ஏறும்போது இருந்த மனோபாவம் மாறாமல் அனைத்துப் பயணிகளும் பிரிகிறார்கள்.
மயானவைராக்கியத்தை நினைவூட்டியது இந்தக் கதை.
இன்னோரு வியாபாரியை ஏமாற்ற நினைத்த செண்பகனார்
ஆபத்தில் மனம் மாறி,
விமானம் தரை தொட்டதும்
பழைய வேலையை தொடருகிறார்.
ரத்து செய்து பிரிந்த கணவனைச் சந்திக்க விழைந்த சமூகசேவகி
அதைச் செய்யாமல் கவர்னர் மாளிகையை நோக்கி விரைகிறார்.
இரு குழந்தைகளும் பத்திரமாகத் தாய்தந்தையரைக் கட்டி அணைக்கின்றன.
கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த காப்டன் அமர்நாத்
மனைவிக்கு ஃபோன் செய்து இனிக் கடவுளை நம்புவதாகச் சொல்லுகிறார்.
இளம் சந்யாசியும்,
விமானப் பணிப்
பெண்ணும் இன்னும் வேளைவரவில்லை என்று சொல்லியபடி பிரிகிறார்கள்.
எளிமையான கதைகள். எளிமை எழுத்திலும் பளிச்சிடுகிறது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
32 comments:
//இது அம்மாவின் தந்தை சேர்த்துவைத்து அம்மாவுக்கு அனுப்பிய விகடன் அத்தியாயங்கள்.//
பழைய பொக்கிஷம்தான்.
சுவாரசியமான புத்தங்களை கண்டு பிடித்து விட்டீர்களா?
சியமளா அவர்களின் கதையைப்பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதை படிக்கும் போதே முழுக்கதையையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.
சியாமா என்ற பெயரில் எழுதியது யார்?
எப்போதோ தொலைத்த பொக்கிஷங்கள் எதிர்பாராமல் மறுபடி கிடைக்கும்போது வரும் சந்தோஷமே தனிதான்!
பொக்கிஷங்களின் சுவையே அலாதி தான்...
ஆஹா.... புத்தகத்தை சென்னைக்குக் கொண்டு வந்துருங்க.
நான் வரும்போது பார்க்கணும். முடிஞ்சால் அப்படியே..... ஹிஹி....
நியூஸி....க்குக் கொண்டுவரணும்:-)
ஆஹா !! வீட்டு வைத்தியம் என்று ஒரு புஸ்தகம் இருக்கா ?
எனக்காக அதைக்கொஞ்சம் படித்து சொல்லுங்களேன்.
வறட்டு இருமல் சரியாக 30.ஜனவரி 2013 இரவு 9.32 க்கு ஆரம்பித்தது. ஸோர் த்ரோட் ஆக ஆரம்பித்தது
ஒரு கட் த்ரோட் ராஸ்கலாக இன்னமும் தொடர்ந்து என்னை விஜய் டிவி கருத்தம்மா வரும் ராஜம்மா
வில்லி மாதிரி என்னை துன்புறுத்துகிறது. லொக்...லொக்....லொக்...
எல்லாவித காஃப் சிரப்புகள், ஆன்டி ஹிஸ்டமின் மாத்திரைகள் , இரண்டு பிரபல ஸ்பெஷலிஸ்ட்
கன்சல்டேஷன் எல்லாருமே இது வெறும் வறட்டு இருமல் தான் கபம் இல்லை.லங்க்ஸ் க்லீயர் ஆக இருக்கிறது.
சரியாக போயிடும் என்று சொல்லி இன்று
இருபது நாட்கள் ஆகிறது. பர்ஸ் க்ளியர் ஆகிவிட்டது. லங்க்ஸ் க்ளியர் ஆகவில்லை. லொக்..லொக்....
வென்னிர் லே, மஞ்சள் பொடி, மிளகு பொடி, பனங்கல் கண்டு போட்டு ஒரு தடவை.
ஓமவல்லி, ஆடுதொடாஇலை, கண்டங்கத்திரி இலைய் பொடி பண்ணி, தேன் கலந்து.
திராட்சையோட இரண்டு துளசி இலை. ஒரு நாளைக்கு நாலு தடவை.
துளசி, சுக்கு, மிளகு, ஜீரகம், கண்டந்திப்பிலி, தேன், சித்தரைத்தை எல்லாம் கலந்து
சித்ரவதை செய்யும் ஒரு சூரணம். , சாப்பிட்டபின்.
மிளகு குழம்பு என் மாட்டுப்பொண் உங்களுக்காகன்னு கொண்டு வந்தேன்பா அப்படின்னு தோஹாவிலேந்து கொண்டு வந்ததை
தினம் காலையிலும் ராத்திரியிலும் சுடற சாதத்தோட மிளகு அப்பளம், ஜீரக லேகியம் இத்யாதி.
இதைத் தவிர கோட்டக்கல் ஆரிய வைத்த்ய சாலா டாக்டர் கொடுத்த
தாளீசாதி சூரணம், வடகம் ,சீதோபலாதி, கதிராதி குடிகம், ஸ்ரீஹரி க்ராந்தி லேகியம், ச்யவன ப்ராசம்,
தூங்கும்பொழுது இருமல் ச்ரமப்படுத்தரதேன்னு, நன்னா தூங்கிட்டா, இருமாது அப்படின்னு சொல்லி, வசம்பு இழைச்சு மஞ்சள் பொடி, மிளகு பொடி போடி போட்டு பால் தர்றா ஆத்து ராக்ஷஸி.
ஊஹூம். போவேன்னா அப்படிங்கறது.
எதிர்த்த மருந்து கடை கொடுத்த செரி காஃப், ஹிமாலயா ஹனிடஸ், காஃப்லெட
ஹால்ஸ், விக்ஸ், வாடர்பரீஸ் காம்பவுன்ட் . பாட்டில் பாடிலா காலியாரது....
எதுவும் ப்ரயோஜனப்படல்லை. லொக்...லொக்....
ஆண்டவா, அனந்த பத்மனாபா, என்ன செய்யறது அப்படின்னு தவிச்சுண்டு இருக்கிற போது
சரியான சமயத்துலே ஆபத் பாந்தவ, அனாத ரக்ஷகராக வந்திருக்கிறீர்கள்.
வீட்டு வைத்தியத்திலே வறட்டு இருமலுக்கு, லொக்...லொக்... ஸ்ரீ ஹரி என்ன சொல்லியிருக்கிறார் ?
எங்க அம்மாவுக்கும் ரொம்ப புடிச்ச புஸ்தகம்.
( ஆம் முழுக்க தேடிப்பாத்துட்டேன். எங்க வச்சுட்டு போயிருக்கான்னு தெரியல்ல. சொல்லாமலேயே மேலே போயிட்டார். அங்கே நான் போகும்போது தான் கேட்க வேண்டும்.)
நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.
மற்றபடி,
உபய குசலோபரி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
சுவையாக இருக்கின்றன.
என் அம்மாவும் இந்த மாதிரி சிறுகதைகள் (அந்தக் காலத்து) தொகுப்புகள் நிறைய வைத்திருக்கிறார். சென்னை போகும்போதெல்லாம் அம்மாவின் அலமாரியைக் குடைந்து எடுத்து படிப்பது வழக்கம்.
நீங்கள் குறிப்பிட்ட சிறுகதை வெகு சிறப்பு.
நல்ல பகிர்வு வல்லிம்மா.
/பீரோமேல் உட்கார்ந்திருக்கும் பையனுக்கு விளக்கெண்ணெய் குடிக்கக் கொடுக்கும் அம்மா. கூடவே அப்பா. எத்தனை உணர்ச்சிகள்!/
கண் அகல இது போன்ற சித்திரங்களை இரசித்திருக்கிறேன் பழைய கால விகடனில். நடுப்பக்க சித்திரங்கள், சில தொடர்கள் எல்லாம் பைண்ட் செய்திருந்தேன். ஊரில் புத்தகப் பெட்டியில் தேடிக் கொண்டு வர வேண்டும்.
எப்போ சென்னைக்கு வரீங்கனு சொல்லுங்க. வீட்டு வைத்தியம் புத்தகத்தை லவட்டிட்டு வந்துடலாம்னு ஒரு எண்ணம். :))))))))))
இன்னும் என்னல்லாம் பொக்கிஷங்கள் இருக்கோ அதை எல்லாம் பகிர்ந்துக்குங்க. :)
//சென்னையில் இருக்கும்போது காணாமல் போன
பழைய புத்தகங்கள் இங்கே துபாயில் வீட்டு மேல் அலமாரியில் கிடைத்தன.//
யார் அந்த கடத்தல்காரர்?? :-))))
இங்கேயே வச்சிட்டுப் போயிடுங்க அந்த வைத்தியப் புத்தகத்தை. ஊருக்கு மறுபடி எடுத்துட்டுப் போனா, அதை மறுபடி ஹைஜாக் பண்றதுக்கு எத்தனை பேர் ரெடியா இருக்காங்க பாருங்க!! இங்கயாவது நான் ஒருத்திதான். :-))))
சுப்புத்தாத்தா, இருமலுக்கு இத்தனை கைவைத்தியமா? பேசாம, நீங்களே இன்னொரு “வீட்டு வைத்தியம்” புஸ்தகம் எழுதலாம் போலருக்கே!! :-))))
காணாமல் போன புத்தகம் கிடைத்தது மகிழ்ச்சி.
கதை பகிர்வு அருமை.
பொக்கிஷமான பகிர்வு ...
கிடைத்த பழம் பொக்கிஷத்தை எல்லோருடனும் பகிர்ந்தது அழகு.
பாராட்டுக்கள்.
வரணும் ரமா. முன்பு வரும்போதெல்லாம் புத்தகங்கள்
கொண்டுவருவது வழக்கம்..
ஒன்றிரண்டு தொலைந்துவிட்டது. இந்தத் தடவை
இருக்கிறதை எடுத்துக் கொண்டு போகவேண்டும்.
பழைய எழுத்தாளர்களின் கை பக்குவம் நல்ல
கதைகளையே கொடுத்திருக்கிறது. ஒவ்வொன்றாகப் பதிவிட்டு விடுகிறேன்மா:)
இந்தப் புத்தகத் தொகுப்பில் இருப்பவர்கள்,எழுதி இரெஉப்பவர்கள் யாரென்றே தெரியவில்லை
ஸ்ரீராம்.
சியாமா,கிருஷ்ணா என்ற எழுத்தாளராக இருக்க வாய்ப்பு உண்டு.
உண்மைதான் ஆதி.அருமையான பொக்கிஷம்.எதிர்பாராத பொக்கிஷம்.
மின்னாக்கம் செய்யலாம் என்று பெரியவர் இன்னம்பூரான் சொல்லி இருக்கிறார். அப்படியே
செய்தால் இரண்டாகப் பண்ண முடியுமான்னு பார்க்கணும் துளசி:)
அன்பு சுப்பு சார். மீனாட்சிமாமி செய்தவைத்தியத்துக்கே அடங்கவில்லையா உங்கள்ள் இருமல்.
ஸ்ரீஹரி அவர்களின் புத்தகத்தில் கிழிந்த பக்கத்தில் கடுக்காய்த்தோலை வாயில் அடக்கிக் கொள்ளலாம்னு போட்டு இருக்கு.
அதே போல மிளக் ஒரு பத்துப் பன்னிரண்டு வாயில் அடக்
கிக் கொண்டால் தேவலைன்னு அம்மா சொல்வார்.
அதிமதுரம்,சித்தரத்தை இடிச்சுப் பொடி பொஅண்ணித் தேனில்ல் குழைத்துச் சாப்பிடலாம்னும் சொல்வார்.
இதற்குள் சரியாகப் போயிருக்கவேண்டும் என்று பகவானை வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி மாதேவி.ரசிப்பதற்கே உண்டான கதைகள் இவை.
அன்பு ரஞசனி முண்பு பொக்கிஷப்படுத்த நல்ல கததகள் இருந்தன,. இப்பொழு தோன்றவில்லை.
அப்பாவின் மரப் பெட்டியில் இருந்த அதனை தொடர்கதைகளும் ஊர் மாற்றிவந்தபோது
பக்கத்துவீட்டுக் காரரால் பேப்பர்காரனிடம் போடப் பட்டுவிட்டன,.
பழகியவரிடம் கேட்க முடியுமா.:)
கண்டிப்பாகத் தேடிப்பாருங்கள் கிடைக்கும்..நன்றி மா,
அன்பு ரஞசனி முண்பு பொக்கிஷப்படுத்த நல்ல கததகள் இருந்தன,. இப்பொழு தோன்றவில்லை.
அப்பாவின் மரப் பெட்டியில் இருந்த அதனை தொடர்கதைகளும் ஊர் மாற்றிவந்தபோது
பக்கத்துவீட்டுக் காரரால் பேப்பர்காரனிடம் போடப் பட்டுவிட்டன,.
பழகியவரிடம் கேட்க முடியுமா.:)
கண்டிப்பாகத் தேடிப்பாருங்கள் கிடைக்கும்..நன்றி மா,
அன்பு கீதா,இன்னும் புத்தகங்கள் எங்க இருக்குன்னு தெரியலை. இருவருக்கும் தமிழ்ப் புத்தகங்கள்
என்று அடுக்கி மேலே போட்டுவிட்டார்கள்.
அதில என்னோட தசாபுக்தி ராமாயணம்,அதில வைத்திருந்த பழைய படங்கள்
எல்லாம் போச்சு. பரவாயில்லை. இருக்கிறதை மீட்டுக் கொண்டு வந்துவிடுகிறேன்.
பிஞ்சு பிஞ்சு போயிருக்கு வீட்டு வைத்தியம்.
அதை நேர் செய்யணும். நடுவில கொஞ்சம் பக்கங்களையும் காணோம்!
அன்பு ஹுசைனம்மா,
நலமாப்பா.
அருமையான புத்தகம். நாட்டு மருந்துகள் தான் எல்லாம். அவர் எழுதாத விஷயமே இல்லை. ஹைப்ரஷர் .லோ பிரஷர் எல்லாவற்றிற்கும் அழகான
விளக்கம் அந்த நாளிலேயே விளக்கம் கொடுத்து,மதுமேகம் எனும் டயபெடிஸிக்கும் மருந்து சொல்லீருக்கார்.
ஊருக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சரி செய்யணும்மா.
இதோ இந்த வாரக் கடைசியில் கிளம்பவேண்டியதுதான். இரண்டு நாட்கள் பிபி வேற படுத்திவிட்டது.
துண்டைக் காணம் துணியைக் காணோம்னு ஓடப் ;போகீறேன்:) கடவுள் மனம் வைக்கும் போது நாம் சந்திக்கலாம்.
அன்பு கோமதி ,உங்களிடமிருந்தும் பழைய புத்தகங்களின் பதிவு வரும் என்றே நம்புகிறேன்.
அன்பு இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி அம்மா
அன்பு கோபு சார், உடல் நலம் கொஞ்சம் சரியில்லை. இன்று தேவலை.
அதனால்தான் பதிலெழுத நேரம் ஆகிவிட்டது.
Read some binded vikatan books in uncle's house in school annual leave days. Still remember Madisaar maami and alai osai. Thanks for sharing
நன்றி புவன். இன்னும் ஏதாவது கிடைக்கும்.தேடுங்கள்.
புத்தகங்கள் கிடைக்க என் வாழ்த்துகள்.
படித்த பழங்கதை பழமாய் இனிக்குது வல்லிம்மா..
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
Post a Comment