Blog Archive

Wednesday, February 02, 2022

தை 21 அப்பாவின் நினைவு

வல்லிசிம்ஹன்


தை 21
அப்பாவின் நினைவு நாள் இன்று. 
அந்த அன்பை என்றும் மறக்க முடியாது.
நல்ல  நினைவுகளில் ஒரு பகுதியைப் பகிர்கிறேன்.
Saturday, April 21, 2018
அப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.#அப்பா 70காஞ்சீபுரம் பயணம்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அகிலா மாமிக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. "நீங்க எல்லாம் சாப்பிட வேண்டாமோ "என்றார்.
"கையோடு கொண்டு வந்திருக்கிறோம் அகிலா
கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு வரதனைப் பார்க்கணும்.
குளக்கரையில் சாப்பிடலாம் என்று குழந்தைகள் ஆசைப் படுகிறார்கள். நீங்களும் வாங்கோ "என்றதும்..

"சாப்பாடெல்லாம் முடித்தாச்சே. நீ செய்யும் திருக்கண்ணமுது இன்னும் என் நாக்கு மறக்கவில்லை. அதைக் கொஞ்சம் வைத்து விட்டுப் போ.
இதோ மணி மூணாகிட்டது பார். கண்ணனப் பார்த்துட்டு பெரிய கோவில்
போங்கோ "என்றார்.
முன் பசிக்கு, இட்லி எல்லோருக்கும் போது மruந்தாக இருந்தது.

"இப்பாவே சொல்லிட்டேன் இன்று இரவு நம்மாத்திலதான் சாப்பாடு.
வந்துவிடுங்கள் "என்று என்னை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

"அப்புறம் எப்போது சென்னைக்குச் செல்வது "என்றார் அப்பா. "அதெல்லாம் கார்த்தால
பார்த்துக்கலாம் டா நாராயணா வராத  விருந்து நீங்கள். நல்ல நாள். நான் கொடுத்து வைத்திருக்கிறேன்" என்று மாமாவும் சொல்ல நாங்கள் விழித்தோம்.

கோவிலுக்குப் போய் வருகிறோம் என்று கிளம்பினோம்.
மாமி மாமாவுக்கு  ஆர்டர் போட ஆரம்பித்துவிட்டார்.

பாண்டவதூதன் கோவில் அப்போதெல்லாம் வீதியிலிருந்தே ஆரம்பித்த நினைவு.
பிழையாகவும் இருக்கலாம்.

துவஜஸ்தம்பம் தொட்டு வணங்கி, பட்டர் மாமாவுடன் உள்ளே நுழைந்ததுதான் தெரியும்.
விஸ்வரூபம் எடுத்து, துரியோதனன் சபையில் எழுந்தருளினானே அந்தக் கண்ணன் விரித்த விழிகளும், கறுத்த உருவம், மடித்த காலும், 
அந்த அழகிய நகங்களும் தெரியும் படி வீற்றீருந்த கோலம் இப்பொழுதும் என் கண்களில் நிற்கிறது.
அந்த க்ஷணமே கண்ணன் முடிவெடுத்தானோ ,குரு   குலத்தை அழிக்க.??????

 ஒன்றும் ஓடவில்லை எங்கள் மனதில்.
யார் இந்த சிலையை வடித்திருப்பார்கள். இத்தனை வடிவாக?
வேஷ்டி மடிப்புகள் அளவாக இருக்க, அபய ஹஸ்தம் அருள் வழிய
இதென்ன மாயம் .
எங்கள் வாழ்க்கையில் இது போல ஒரு மாயக்கண்ணனைப் பார்த்ததில்லை.
மனமில்லாமல் வெளியே  வந்தோம்.
வண்டியிலேறி மீண்டும் வரதராஜன் மதில்சுவரை அடைந்தோம்.
மீண்டும் பட்டர் உதவியோடு சுற்றுப்புற மண்டபத்தில் குளுகுளு காற்று வீச,
 குளத்தில் மீன்கள் பாய்ந்து வர, கொஞ்சமே சாப்பிட முடிந்தது. 
அம்மா கதம்ப சாதத்தைத் தன் தோழியோடு சாப்பிட எடுத்து வைத்துவிட்டார்.
"நாமெல்லாம் அங்கே சாப்பிட வேண்டும் என்றால், சீக்கிரம் பகவான் தரிசனம் முடித்துக் கொண்டு வைகுண்டம் சார் அகத்துக்குப் போய் விடலாம் "என்றார் அம்மா.

அப்பா, முரளியையும்,ரங்கன்,சிம்முவை அழைத்தார்.
கைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார்.
எதுக்குத் தாத்தா ..
இந்தக் கேள்வி என் 
பசங்களிடமிருந்து."

நான் அவர்களை இந்தச் செலவில் கலந்து கொள்ளச் சொன்னேன்,.
 தெரியாதாம்மா என்று
திருப்பிக் கேட்டனர்////

நாளை மீண்டும் வரதனைத் தரிசிக்கப் போகிறோம்.
நீங்கள் மூவரும் அவரவர் மனைவியை அழைத்துப் போய்
புடவைகள் வேஷ்டிகள் வாங்குங்கள்.
இன்னோரு ஜோடி வைகுந்தத்துக்கும், அவர் மனைவிக்கும் வாங்கி விடுங்கள். அவர்கள் இருவரும் இன்று நமக்கு பெருமாளும் பெருந்தேவித்தாயாரும் என்றார்.
யாரும் மறுக்கவில்லை.
நான் அம்மா அப்பாவோடு இருந்து கொண்டேன் . அவர்கள் வண்டியில் கிளம்பினார்கள்.
நாங்களும் வரதா வரதா என்று முன்புறப் படிகளில் ஏறினோம். தொடரும்.

20 comments:

ஸ்ரீராம். said...

நல்ல நினைவுகள்.  எந்த இடம்   .காஞ்சிபுரமா?  கண்ணனைப் பார்த்த விவரம், வர்ணனை அபாரம்.  பார்க்கும் ஆவல் வருகிறது.

Geetha Sambasivam said...

இது படிச்சதே இல்லையே, புதுசா இருக்கு. இதன் ஆரம்பங்களைப் படிச்சால் இன்னமும் புரிஞ்சுக்கலாம். மீள் பதிவு?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
காஞ்சீபுரம் பயணம். ஒரு டெம்போ டிராவலரில் மொத்த குடும்பமும் சென்றோம்.
அதை நாலு பாகமாக அப்போது 2018இல் எழுதினேன்.
நாங்கள் சென்றது 1991 இல்.
அப்பாவின் போஸ்ட் ஆஃபீஸ் நட்பைக் காஞ்சீபுரத்தில் சந்தித்தோம்.

நன்றி மா. கட்டாயம் காஞ்சீபுரம் செல்லுங்கள்.
அங்கு பாண்டவ தூதன் ஆலயம் காண வேண்டிய தரிசனம்.
திரு ஊரக ஆதி சேஷனும் முக்கியம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

என்றும் நலமுடன் இருங்கள்.
சரியாக லேபல் செய்யாததால்
பதிவைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
அப்பா என்று தேடினபோது
இந்தப் பதிவு கிடைத்தது.

மீள் பதிவுதான் மா. மற்றவை கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவை போன்ற பதிவுகள் மனதிற்கு நிம்மதியைத் தருபவை.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை அம்மா இது கொஞ்சம் வாசித்த நினைவு வருகிறதே. அகிலா மாமி பற்றி சொன்னது..அவர்கள் வீட்டில் இரவுச் சாப்பாடு சாப்பிடச் சொன்னது, தங்கிவிட்டு செல்லச் சொன்னது ...புடவை வேஷ்டி வாங்கப் போகச் சொன்னது..எல்லாம்.

ரசித்து வாசித்தேன்

கண்ணனைப் பற்றிய வர்ணனையும் உங்கள் மன எண்ணங்களும் ஆஹா!!!மிகவும் ரசித்தேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆனால் பாண்டவ தூதன்/கண்ணன் (ஆஹா அழகா சொல்லியிருக்கீங்க பாண்டவ தூதன்!!) கோயில் தான் நினைவுக்கு வரவில்லை..ஒரு வேளை நான் உங்களின் வேறு ஒரு அனுபவத்தை நினைத்து மிக்ஸ் செய்திருக்கிறேனோ...ஆனால் அகிலா மாமி காஞ்சிபுரம் நல்ல நினைவு வருகிறது..நீங்கள் அம்மா அப்பாவுடன் சென்றது..எல்லாம்

கீதா

கோமதி அரசு said...

அப்பாவிற்கு வணக்கம்.

உலகளந்த பெருமாள் கோயில் பார்த்து இருக்கிறேன், அதில் வேஷ்டியின் மடிப்புகள் அழகாய் இருக்கும் .
காஞ்சுபுரத்தில் இரண்டு நாள் தங்கி, சைவ, வைணவ கோயில்கள் பார்த்தோம்.

மலரும் நினைவுகள் அருமை.
வரதனை காண வருகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் அப்பாவிற்கு வணக்கம்.

அழகான நினைவுகள். இது போன்ற நினைவுகள் தான் நம்மை கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்தி வாழ்க்கையை ஓட்டுகிறது. நம் பெற்றோரின் நினைவுகள் நம்மை வழிநடத்தும்

துளசிதரன்

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள். முன்னரும் படித்திருக்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அப்பாவின் நினைவுகளை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் நம் அப்பாவை மறக்க முடியுமா? கோவிலுக்கு சென்ற அனுபவங்களை விவரித்த தும், இறைவனை நேரில் கண்டது போல் விமர்சித்து எழுதியதும் மெய்சிலிர்க்க வைத்தது.நல்ல அனுபவப்பூர்வமாக எழுத்துக்கள். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.இப்படி அனுபவங்களை ரசித்து எழுத உங்களால் மட்டுமே எளிதாக முடியுமென தோன்றுகிறது.நீங்கள் அப்படியே தங்கள் அம்மாவின் சாயல். பதிவு நன்றாக இருந்தது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஐயா,
வணக்கம்.
நலமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் என்றும் மனதை விட்டு மறைவதில்லை.
நினைவுகள் பொக்கிஷம். நட்புகளும் பொக்கிஷம்.

Bhanumathy Venkateswaran said...

பாண்டவ தூதன் கண்ணனை நானும் தரிசித்திருக்கிறேன். மிகவும் அழகான வடிவமா. கோயில் வாயிலில் நுழையும் பொழுதே கர்ப்பகிரகதிற்குள் கருப்பாக தெரியும், உள்ளே சென்றால்தான் அது மடித்து வைத்துக் கொண்டிருக்கும் கண்ணனின் தொடை என்பது புரியும். ரோகிணி நட்சத்திரக்காரர்களும், ரிஷப ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய கோவில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,

நன்றாக நினைவிருக்கும் அம்மா. 2018இல் எழுதியதுதானே.

அப்பாவையும் அழைத்துக் கொண்டு
வெய்யில் இல்லாத நாள்
காஞ்சிபுரம் சென்று வாருங்கள்.
பாண்டவதூதன் கண்குளிரப் பார்க்கலாம்.
அந்த சிற்பக் கலையைச் சொல்லி முடியாது.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,

:)))) நினைவுக்கு வந்ததா. உங்களுக்கு மறக்கவே மறக்காதே?



''ஆனால் பாண்டவ தூதன்/கண்ணன் (ஆஹா அழகா சொல்லியிருக்கீங்க பாண்டவ தூதன்!!) கோயில் தான் நினைவுக்கு வரவில்லை..ஒரு வேளை நான் உங்களின் வேறு ஒரு அனுபவத்தை நினைத்து மிக்ஸ் செய்திருக்கிறேனோ...ஆனால் அகிலா மாமி காஞ்சிபுரம் நல்ல நினைவு வருகிறது..நீங்கள் அம்மா அப்பாவுடன் சென்றது..எல்லாம்''

அதே அகிலா மாமி. நன்றாக இருக்க வேண்டும்.
நன்றி டா.

வல்லிசிம்ஹன் said...

அப்பாவிற்கு வணக்கம்.

உலகளந்த பெருமாள் கோயில் பார்த்து இருக்கிறேன், அதில் வேஷ்டியின் மடிப்புகள் அழகாய் இருக்கும் .
காஞ்சுபுரத்தில் இரண்டு நாள் தங்கி, சைவ, வைணவ கோயில்கள் பார்த்தோம்.'''''''''''


மிக நன்றி கோமதி மா.
அப்பாவுக்கு செய்ய முடிந்த தொண்டு அது ஒன்றுதான்.

எல்லோரும் மேலிருந்து நம்மை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

நாமும் ஒரு நாள் அவர்களுடன் சேர்வோம்.
வாழ்க வளமுடன்.



வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

என்றும் நலமுடன் இருங்கள்.

முன்னரே படித்திருப்பீர்கள். 4 வருடங்கள் முன்பு எழுதினதுதானே.
இன்றும் நாளையும் வலைப்பதிவுக்கு ஓய்வு கொடுத்துத் தொடர வேண்டும் அப்பா.
வந்து வாசித்ததற்கு மிக நன்றி. நம் பயணங்கள்
தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

தங்கள் புதல்வனுக்கு இனிய திருமண நாள்
வாழ்த்துகள்.

இன்றும் என் அப்பா வழி கஸின் களோடு
ஒருவாறு அப்பாவின் நினைவுகள்
தொடர்ந்தன.
அவர்களின் அப்பாவும் என் தந்தையும்
ஒன்றாகக் கழித்த விடுமுறை நாட்கள்
மீண்டும் வந்து போயின,.

இப்பொழுது உங்களை மாதிரி நெருங்கிய நட்புகளுடன்
தொடர்கிறது.
என் அம்மா சாந்தமான அருமையான பெண்மணி.
நீங்கள் எனக்கும் அம்மா சாயல் இருப்பதாகச் சொல்லி இருப்பது
எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
சகோதரி என்று நீங்கள் அழைக்கும் போதும், அன்பின் கோமதி
அக்கா என்று கூப்பிடும்போதும்
என் குடும்பம் என்னுடன் இருக்கும் உணர்வே மேலிடுகிறது.
மிக்க நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானு மா.
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் பாண்டவதூதன் பற்றி சொன்னதும் நானும் அந்த
கோவில் புராணம் படித்தேன்.
நீங்கள் சொல்லி இருப்பது போல் ரோஹிணி சந்திரனை மணந்த தலமாம்
அது. எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
முன்பும் படித்துப் பின்னூட்டம் இட்டிருப்பீர்கள்.
இப்போதும் வந்து படித்ததற்கு மிக நன்றி.

நம் பெற்றோர் என்றும் நம்மைக் காப்பார்கள்.