Follow by Email

Friday, March 02, 2012

என்ன பேசும் இலையும் பூவும்?


இலை கேட்டது பூவிடம்  உதிரமல்  இருக்க எங்க கற்றாய்  பூவக்கா

இருபத்தெட்டு ஆண்டுகளும்
கடந்தாச்சு தங்கச்சி.
என்னை முதலில் நட்ட போது இந்த இடம் கட்டாந்தரை.
கட்டாந்தரையைப் பண்படுத்த வந்த வீட்டுத் தலைவருக்குத்
தன் அருமைப் பாட்டியின் ஆசையான அழகுத் தோட்டத்துக்கு
ஒரு உரு கொடுக்க ஆசை.
உதவிக்கு வந்த மனைவி  காலில் கடப்பாறையைக்
காலில் போட்டுக் கொண்டதும் அவள்   
பார்வையாளராக நின்றுவிட்டாள்.:0)

நான்தான் வெய்யில் விரும்பி .
அதற்கு ஏற்ற திசையில் என்னை நட்டார்  என் நண்பர்.
முத்லில் குத்தும் முட்கள் குழந்தைகளை வருத்தினாலும்
நான் வளர வளர   என்பூக்களின் அழகு
அவர்களுக்குப் பிடித்துவிட்டது
நான் வளரஅவர்களும் வளரப்
பலவகைப் பருவங்களைக் கடந்தோம்.
எங்கவீட்டு அம்மா பூஜாடிகளை அலங்கரிக்க அவ்வப் போது என்னிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு
பூக்களை அள்ளிச் செல்வாள்.
ஜன்னல் வழியாக நானும் எட்டிபார்ப்பேன்.
என் குழந்தைகள் பத்துநாட்கள்
வரைத் தாக்குப் பிடிக்கும்.
அம்மா தாண்ணீரையும்  கொஞ்சம் உப்பும் கலந்து
இரு நாளுக்கொரு முறை மாற்றுவார்.

அவைகள் வாடும் தருணம் வந்தால் எஜமானருக்கு மனம் வாடும். இனிமேல் பூக்களை எடுக்க வேண்டாம்மா.
பாவம் அவைகள் என்று சொல்லிவிட்டார்.
இப்போது எனக்கும் வயசாகிவிட்டது. அவர்களுக்கும் வயசாகிவிட்டது.

புதிதாக இலைகளும் பூக்களும் வருவதால்
என் இளமை  என்றும் குறைவதில்லை.

இரண்டு மாடியேறி என் பழைய கிளைகளை
அழகாக  எடுத்துவீட்டு எனக்கு வேண்டும் என்கிற
கம்பி சட்டங்கள்  வைத்துப் பராமரிக்கும்  போது
எனக்கென்ன கவலை.
நீ புதிதாக வந்திருக்கிறாய்.
கவலைப் படாதே.  நீயும் பூத்துக் காய்த்து
நன்றாக இருப்பாய்.
நல்ல  இடம் தேடி வந்தால் எல்லாம் நன்மையே.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

25 comments:

துளசி கோபால் said...

நல்ல பேச்சு!!!! கவனிச்சுப் பார்த்துக்க நண்பர் இருக்கும்போது கவலை ஏது:-))))

இதுக்குக் காகிதப்பூன்னு ஒரு பெயர் இருக்கு! நிறங்களும் பல.

இந்த வருசம் சம்மர் காணாமப் போனதால் நம்ம வீட்டு போகன்வில்லா பூக்களை ஒளிச்சுவச்சுருச்சு:(

கௌதமன் said...

வழக்கம்போல, கலக்கிட்டீங்க, வல்லிசிம்ஹன்.
பூ தன கதையையும் சொல்லி, வாழ்த்தும் வழங்கிவிட்டதே!

ஸ்ரீராம். said...

செடிகள் ஒன்றுக்கொன்று பேசிக் கொள்ளுமா தெரியாது...ஆனால் இனிய கற்பனை. செடி கொடிகளிடம் அன்பாகப் பேசினால் நல்ல பலன் தெரியும் என்று படித்திருக்கிறேன். நல்ல இசை கேட்கும் இடத்தில் செடி கொடிகள் நன்றாக வளர்கின்றன என்றும் படித்திருக்கிறோமே...!

வெங்கட் நாகராஜ் said...

அப்பா என்ன ஒரு கற்பனை....

போகன்வில்லா பூக்கள் - இங்கே தில்லியில் கலர் கலரா இருக்கும்.... :)

வல்லிசிம்ஹன் said...

காகிதப்பூ வா இருக்கிறதனாலதானே நிலைச்சு நிற்கிறது துளசி:0)
நம்ம ஊரில சம்மர் குறையவோ
இல்லை பூக்கள்
ஒளியவோ முடியாது.

இப்ப சரியான வெய்யில் ஆரம்பிச்சுடுத்து.

வல்லிசிம்ஹன் said...

ஓ.நன்றி.எப்பொழுதும் இந்த மாதிரி எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும்.
நீங்கள் லிண்டா குட்மான்(ஸன்சைன்ஸ்

அண்ட் மூன்சைன்ஸ்) படித்திருக்கிறீர்களா. அதில் செடிகளின் உணர்ச்சிகளைப் பற்றி நன்கு விளக்கியிருப்பார்.
எங்கள் வீட்டில் இவர் செடிகளுடன் பேசுவார்.
+

வல்லிசிம்ஹன் said...

நன்றி கௌதமன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்ஸ்ரீராம்.
எல்லாமே உண்மைதான்.
இசைக்குச் செடிகள் வளரும் என்றே கேட்டிருக்கிறேன்.
அதே போல யாராவது சட்டென்று
முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் பயந்து சுருங்குமாம். இதை க்ராஃப் வைத்துக் கண்டுபிடித்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.
எனக்கு பச்சையான செடிகளின் நடுவில் நல்ல நிழலில் உட்கார்ந்து புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும்.

பால கணேஷ் said...

நல்ல இடம் தேடி வந்தால் எல்லாம் நன்மையே... அழகான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறது பூ. உரையாடல் ரொம்பவே நல்லா இருந்தது, ரஸிச்சுப் படிக்க முடிஞ்சதுங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகாப்பேசரவங்க வீட்டு பூ வும் இலையும் .. பேசாத பின்ன.?

ADHI VENKAT said...

போகன்வில்லா சொன்ன அழகான கதையை கேட்டேன் அம்மா.

அருமையான பகிர்வு.

Geetha Sambasivam said...

அருமையான பேச்சு. அதைப் புரிந்து கொண்டதும் உங்கள் திறமை. நேத்திக்கு வாக்கிங் போகையில் இப்படித்தான் பக்ஷிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். எல்லாப் பக்ஷிகளும் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டினாலும் ஒரே மொழியில் பேசிக்கொள்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் எத்தனை மொழிகள் என வியந்து கொண்டிருந்தோம்.

அதே போல் இங்கிருக்கும் பூக்களும் இதே மொழியில் தான் பேசிக் கொள்ளும்.

உங்க பதிலை வந்து தான் பார்க்கணும். பின் தொடரும் ஆப்ஷன் காக்க்க்க்கா ஊஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! :(

சாந்தி மாரியப்பன் said...

இவ்வளவு அருமையா பார்த்துக்கவும் அன்பாப் பேசவும் ஆள் இருக்கறப்ப மகிழ்ச்சியிலேயே பூத்துக் குலுங்கிருமே.

அப்பாதுரை said...

பூமொழிங்கறது இதுதானா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ்.எல்லோருக்கும் இந்த ரசிப்பு இருக்கத்தான் செய்கிறது. நேரம் தான் கிடைப்பதில்லை.
வருகைக்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஹா! கயல். ஒருவரி சொன்னாலும் திருவரியாகச் சொல்லிவிட்டீர்கள். மிகவும் நன்றி மா.செடிகளுடன் ஒரு வசதி. இவரைப் பற்றி அவைகளிடம் கம்ப்ளைண்ட் செய்தாலும் தலையை ஆட்டிச் சும்மா இருந்துடும்.அவர்கிட்டப் போட்டுக் கொடுக்காது.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆதி.
போகன்வில்லாவோடு என் உறவு
சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது.
அப்பா வேலைசெய்யும் அலுவலகம்
போகன்வில்லா போஸ்டாஃபீஸ் என்றே பெயர் எடுக்கும்.ஆரஞ்ச் வண்ணம் நிறைய இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
அங்கயாவது தூசி இல்லாத இடத்தில் நடக்க முடிகிறதே.மற்ற சத்தங்களையும் மீறிப் பக்ஷிகளின் மொழியும் உங்களுக்குக் கேட்டது அதிர்ஷ்டம் தான்.
பூக்களின் மொழி தனி. ஒவ்வொரு குழந்தை முகமும் தெரிவது போலக் கூடத்தோன்றும் எனக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஓ.அதெல்லாம் தேர்ந்த கலைஞரைத்தான் தெரிவு செய்திருக்கின்றன இந்தச் செடிகள்.பாவம்பா வாயில்லா ஜீவன் என்பார்.அதற்காகச் சிலசமயம் நான் கூட ஊமையாகிவிடுவதுண்டு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. பூ மொழி பூக்கள் கொண்டு வருபவருக்கும் நன்றாகத் தெரியுமே.

ஒருவீட்டுக்குப் போகும்போது நாம் பூவும்,பழங்களும் வாங்கிப் போவது சகஜம்தானே.அது ஒரு நல்ல பரிவர்த்தனைமொழி இல்லையா.

கோமதி அரசு said...

நல்ல இடம் தேடி வந்தால் எல்லாம் நன்மையே.//

நல்ல இடம், வந்த இடம் , வரவேண்டும் போகன்வில்லா! என பாட வேண்டும் போல் உள்ளது.

கவனித்து பார்த்தால் எல்லாமே அன்புக்கு ஏங்கும் ஜீவராசிகள்.

அன்பு தழைக்கும் போது செடி தழைக்கதோ.

நிலவும், பூசெடியும் அழகு.

மாதேவி said...

பூவும் தனது இனிய கதை பேசி அனைவரையும் மயக்குகின்றதே. அருமை.

நம்வீட்டில் பூந்தொட்டியில் தலை நீட்டுகின்றன போகன்விலாக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

Simply Superb !

ஸ்ரீராம். said...

//பறவைகள் - கண்டம் விட்டு கண்டம் தாவினாலும் ஒரே மொழி//

ஆஹா...கீதா மாமி...அருமை.

அவைகளுக்கெல்லாம் "உலகம் எங்கும் ஒரே மொழி...உண்மை பேசும் காதல் மொழி..." போலும்!