Wednesday, September 30, 2026

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமுடன்  வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை)
தினம். அக்டோபர் 1.

வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர் 1.

பக்கத்தில் இருக்கும் சீனியர் சிடிசன் இல்லம்.
ஒரே விழாக்காலம் பூண்டிருக்கிறது.

இரு 90  வயது கணவர்கள் மனைவிகளின் திருமண நிறைவு நாள்
காலம். அறுபது வயது காலம் ஒன்று சேர்ந்து
வாழ்ந்தவர்களின் சிறப்பு நாள்.

நாங்கள்  வெளியே செல்வதானால் அவர்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும்.

மாலை வேளையில் பலவித வண்ண பலூன்கள் பறந்து கொண்டிருந்தன. 
வீதி முழுவதும்  சின்ன பெரிய கார்கள். 
குழந்தைகளின் ஆரவாரங்கள். ஒரு இரண்டு மணி நேரம் தெருவெங்கும் கலகலப்பு.

ஒரு அலங்கரிக்கப் பட்ட நீளமான வண்டியில்தம்பதிகளை உட்காரவைத்து
உத்சாகமான ஹார்ன் (ஒலி எழுப்பான்?) ஒலிக்க ஆறு வீதிகளையும் வலம் வந்தார்கள்.


பார்க்கவே மிக ஆனந்தம்.  அந்தத் தம்பதியினருக்கு என்று குடும்பம் இல்லை.  அக்கம் பக்கம் இருப்பவர்களே 

பங்கெடுத்து ஒரு பிரம்மாண்டமான  அலங்காரத் தடுப்புகள் வைத்து  நாற்காலிகள்   அமைத்து நடுவே பெரிய கேக் கும்
வைத்திருந்தார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் கண்டு களித்துக் கொண்டிருந்த
அந்த முதியவர்களைக் காணவே  மனம் நிரம்பியது.

அந்த[ ப்ளிமத் காரும் அதன் இசைக்கும் ஹார்னும் மனசை விட்டு அகலவில்லை. வாழ்க வையகம். வாழ்க முதியோர்.

10 comments:

ஸ்ரீராம். said...

சாதா சீனியர் இல்லை, சூப்பர் சீனியரா?  அந்த முதிய தம்பதியை வணங்குகின்றேன்.    அவர்கள் மனதில் என்ன தோன்றும் என்றும் மனதில் எண்ணம் ஓடுகிறது!

ஸ்ரீராம். said...

சீனியர் சிட்டிசன் தினத்துக்கு உங்களுக்கும் வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம், நலமுடன் இருங்கள் நீங்கள் சீனியர் வகுப்புக்கு வந்தாச்சா:) நான் நடு சீனியர். அவர்கள் சூப்பர் சீனியர். இங்கே வயதெல்லாம் ஒரு கணக்கே இல்லை. போன வருடம் 85 வயது மணமகளும் 88 வயது மண்மகனும் இந்த ஹோம்லியே திருமணம் செய்து கொண்டார்கள்.!!!! முழுவத்ஹும் சந்தோஷம் தான்:)

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஶ்ரீராம். எல்லோரும் நலமுடன் இருப்போம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. இன்று முதியோர் தினம் என்பதை நானும் காலண்டரில் நேற்றே படித்தேன்.நீங்கள் பதிவில் குறிப்பிட்ட அந்த முதிய ஜோடிக்கு என் அன்பான வணக்கங்கள். "முழுமை பெற்ற காலமெல்லாம் முதுமை வரை கூட வரும்" என்ற பாடல் பதிவை படித்ததும் நினைவுக்கு வந்தது. அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

முதியோர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறதாம். கேரளா முதல் இடம், தமிழ்நாடு இரண்டாம் இடமாம்.

அறுபது வயது காலம் ஒன்று சேர்ந்து
வாழ்ந்த அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன், என்றும் நலமுடன் வாழுங்கள். அந்த முதிய ஜோடி, அவர்கள் வீட்டு வராண்டாவில் உட்கார்ந்தபடியே எல்லோருடனும் பேசுவார்கள். நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். இங்கே அக்கம்பக்கத்தார், தொந்தரவு செய்யாமல் ஒருவரை ஒருவர் கவனிக்கும் பாங்கு என்னை அதிசயிக்க வைக்கிறது. உங்கள் அன்புக்கும் பின்னூட்டத்துக்கும் மிக நன்றி மா. அன்பினால் இணைந்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி வாழ்க வளமுடன். வெகு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம்.
உலகமெங்கும் முதியோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தான் சொல்கிறார்கள். என்ன செய்யலாம். யாராக இருந்தாலும் வளமாக இருக்க வேண்டும். நன்றி மா கோமதி.

Bhanumathy Venkateswaran said...

நிஜமான அறுபதாம் கல்யாணம்! சமீபத்தில் கமலஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசனும், அவர் மனைவியும் தங்கள் 72வது திருமண நாளை கொண்டாடினார்கள். மிகவும் அபூர்வம்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி பானு. எங்கள் சிங்கத்தின் தாத்தா பாட்டி சதாபிஷேகம் நடந்த போது பாட்டிக்கு எழுபது.எட்டு வயது கோமளம்மாள் 18 வயது ராஜகோபாலாச்சாரியை மணந்தார். சாருஹாசன் தம்பதியர் இனிமை.

ஒரு ஐப்பசி மாத ஆரம்பத்தில் ......2

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.  எங்க வீட்டு மஹாலக்‌ஷ்மி  பசுமலை. முன்பே எழுதி இருப்பதை நினைவூட்டல்  பதிவாக எழுத விரும்புகிறேன். ...