Blog Archive

Monday, December 08, 2008

சென்னையில் பதிவர்

வித விதமான சோழிகள், வாங்கி இருக்கலாமோ..
சூவனீர் கடை. நான் ஒரு பொம்மை கூட வாங்காமல் வந்தேன்:))

அட்லாண்டிஸ் அக்வாரியத்தில் சிற்பம்


முன்னைவிடப் பெருகிவிட்ட கட்டிடங்கள்








புர்ஜ் டவர்





எங்க மீனாட்சியோட அக்காவாம்.சொல்லித்து.






அட்லாண்டிஸ் முகப்பு



















Posted by Picasa
என்ன வாங்கிட்டுப் போகலாம்....
தலை குடச்சல் தாங்கலை.
பட்டியல் நீளம்.
வயதுகள் வித்தியாசம்.
தேவைகளூம் அதே.
ஏழு மாதங்கள் கழித்து பட்டினப் பிரவேசம் செய்தால்,
காட்டிருக்கும் வேலைகள் பிரம்மாண்டம்.
எண்பது பூர்த்தி செய்தவர்களிலிருந்து,புதிதாகப் பிறந்திருக்கும் ஒரு பாப்பா வரை ஏதாவது கொண்டு போகவேண்டும்.
பெண்களுக்கென்றால் நல்ல புடவை போதும்.

ஆண்களுக்குத்தான் யோசிக்க முடியவில்லை. நான் சொல்லும் நபர்கள்
வயதானவர்கள்.....வாசனைத்திரவியங்களைத் தவிர்ப்பவர்கள். எளிமையான பழக்க வழக்கங்கள்.
டி ஷர்ட் சரியாக இருக்கும். இல்லை என்றால் நடப்பதற்கான வாக்கிங் ஷூஸ்.
சரி அது ஓவர்.
சின்னக் குழந்தைகளுக்கு ஃபான்சியான காது,கழுத்து,கைகளுக்கான விஷயங்கள்.
நடுத்தரவயதுப் பெண்மணிகளுக்கு வாசனை செண்ட், கைப்பைகள்.
பாதாம்,முந்திரி,திராட்சை,குங்குமப்பூ இதுபோல வகையறாக்கள்.

சரி வாங்கியாச்சுனு முடிக்க முடியாது.

முனிம்மா கேட்ட குடை,செருப்பு இதுக்கெல்லாம் இடம் வேணும்.
அவங்க பேத்திகளுக்கு உடைகள்,தலைக்கு ஹேர்பாண்ட்,
பேரனுக்கு இரண்டு ரெடிமேட் உடைகள்.

சிங்கத்தோட பொட்டிக்குள் அவரோட கைவேலைக்கான ஆயுதங்கள்,பொம்மைகள் இத்தியாதி. .அய்யா மேல போட்டு இருக்கிற துணிமணியோட ப்போய் இறங்க வேண்டியதுதான்.
ஆனல் சினேகிதர்களுக்கான பேரிச்சம்பழம்,பாதாம் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு:)

எல்லாவற்றையும் வைத்து நிமிர்ந்தால் ,என் புடவைகளுக்கு இடமில்லை:)
எமிரட்ஸில் ஒரு பயணிக்கு 20 கிலோ தான் உண்டு.
கையில் 7 கிலோ.
அதற்குள் எனக்கு இரண்டு நாட்களுக்கு வேண்டும் என்கிற துணிமணிகளைப் போட்டுக் கொண்டாகிவிட்டது. மருந்துகளை அடைத்தாகி விட்டது.
போய் இறங்கினதும் ஒரு ஹோட்டலில் தங்கல்.
வீட்டை முழுவதும் சுத்தம் செய்த ப்பிறகு, கிரகப் பிரவேசம் செய்ய நினைப்பு.
கார்த்திகைக்கு அங்கே விளக்கேற்றலாம். கடவுள் கிருபையில்.

இன்னும் மழை இருக்காம். நாகைப் பட்டினத்திற்கு அருகே புயல் வந்து கொண்டிருக்கிறதாம். அதுகிட்ட சொல்லி இருக்கேன்.
அம்மா, தயவு செய்து எங்க ப்ளேன் தரை இறங்கற வரை மெல்ல வீசு. அப்புறமா வங்களவிரிகுடாக்குள் போயிடு''ன்னு.:)
பார்க்கலாம்.

31 comments:

சந்தனமுல்லை said...

:-) நல்வரவாகுக! உங்க லிஸ்ட்-ல நிறைய இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!! Safe Journey!

சந்தனமுல்லை said...

சோழிகள் நல்லாருக்கு!
சூவனீர்-ன்னா என்ன?

ராமலக்ஷ்மி said...

Welcome back!

பயணம் இனிதாக அமையும்.

வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்!
ஊருக்கு வரும் போதெல்லாம் இந்த சிக்கல்கள் வந்து விடுகின்றன..:)
20 கிலோ தானா? ஏர் இண்டியா, கல்ஃப் ஏர், தாய் எல்லாம் 40 கிலோ விடுவார்களெ..எமிரேட்ஸில் வந்ததில்லை...;)

பழமைபேசி said...

படங்கள் நொம்ப நல்லா இருக்குங்க... சோழிகள், பழைய நினைவு வந்தது. பார்த்து எவ்வளவு நாட்களாச்சு?ம்ம்...

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா முல்லை.

வந்த பிறகு உங்களுக்கு மெயிலுகிறேன். கம்ப்யூட்டர் வேலை செய்யணுமே !!!!!! சாமி:)

வல்லிசிம்ஹன் said...

சாவனீர்னும் சொல்லுவாங்க. அதான் எங்கயாவது போனால் பக்கத்திலியே புதுமண்டபக்கடை மாதிரி இருக்குமே,அந்த ஊர்க்கார சாமான்கள் எல்லாம் வாங்கலாம்.
ராமேஸ்வரத்தில சோழி வாங்கற மாதிரி;))

வல்லிசிம்ஹன் said...

வந்துகிட்டே இருக்கேன் பா.
நன்றி. வந்ததும் மெயிலுகிறேன்.

ஆயில்யன் said...

வல்லியம்மா

பயணம் இனிதாக அமையும்.

வாழ்த்துக்கள் :)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா. நட்சத்திர வாரம் நன்றாக முடிந்தது. சோழிகள் இங்க வண்ண வண்ணமாத் தீட்டி விக்கிறாங்க.
நம்ம ஊரில இயற்கையா அழகா இருக்கும் இல்லையா.

இலவசக்கொத்தனார் said...

சரி நல்ல படியா ஊர் போய் சேருங்க. முதலில் இணையத் தொடர்பு ரெடி பண்ணுங்க. அப்புறம் நீங்க எல்லாம் ஊருக்குப் போயாச்சுன்னா அப்புறம் மழை பத்தி என்ன கவலை! :))

சென்ஷி said...

அம்மா. வணக்கம். இந்த முறையும் தங்களை சந்திக்கும் வாய்ப்பு தவறிப்போனதில் சற்று சங்கடமாக உணர்கிறேன். மன்னிக்க....

சென்னை வரும்பொழுது தவறாது தங்களை வந்து சந்திப்பேன் (என்று நினைக்கிறேன்).

தங்களின் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்...

நானானி said...

வரணும்...வரணும் வல்லி!! யாருக்கு வாங்கினாலும் வாங்காவிட்டாலும் முனிம்மா கேட்டதை கண்டிப்பாக வாங்கிவரவும்.
சின்ன பொருள் கொடுத்தாலும் நிஜம்மா சந்தோஷப் படும் ஆத்மாக்கள்
இந்த முனிம்மாக்கள்!!!
கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!!!

துளசி கோபால் said...

வெல்கம் டு இண்டியா

என் சார்பா அங்கே சென்னையில் யாராவது கண்டிப்பா வரவேற்பாங்க பாருங்க.


பத்திரமா ஊர் போய்ச்சேர்ந்த விவரம் தெரிவிக்கணும்.

மீனாட்சியை நான் மறந்தே போயிருந்தேன்(-:

பரிசுப் பொருட்கள் இப்பெல்லாம் வாங்கிக் கட்டுபடி ஆறதே இல்லை.

நம்ம மனசுக்கு சூப்பராத் தெரியும் பரிசுகள் உள்ளூர் மக்களுக்கு ஜுஜுபி(-:


எங்களுக்கும் 20 + 7 கிலோதான்.

குறைந்த புண்ணியம் செஞ்சவுங்களுக்கு இப்படியாம்....

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, செளகரியமா வந்து சேர்ந்திருப்பீங்கனு நம்பறேன். நல்வரவு. சென்னைக்கும், அதன் பவர் கட்டுக்கும் அனுபவிக்க ஆள் குறைஞ்சிருந்தது. வாங்க, வாங்க, ஆனால் உங்க வீடு விஐபி ஏரியாவோ??? :))))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா, தமிழ் பிரியன்.
எமிரட்ஸ் டிக்கட் இந்த ஊரில் வாங்கினால் 40கிலோ உண்டாம்.

நம்ம ஊரில வாங்கின 20 தான்.
போனாப் போறது.

இங்க மருமகளுக்குத் தான் கஷ்டம். நாங்க மிகுதியா வச்சிட்டுப் போகிற பொட்டிகளைப் பத்திரப் படுத்தணும்:(

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா, ஆயில்யன் ரொம்ப நன்றி. மீன்டும் பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

இதல்லவோ கொத்ஸ் டச்.

நாங்க போனா?? மழை நின்னுடுமா. பாருடா இந்தக் கதையை.

ம்ம். கண்டுக்கிறேன்,கண்டுக்கிறேன்:)
கட்டாயம் செய்கிறேன் கொத்ஸ்.
இணையம் இல்லாமல் இருக்க முடியாது.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சென்ஷி, கட்டாயம் சென்னைக்கு வாங்க. வீட்டுக்கு வாங்க. நல்ல அரட்டை போடலாம்:)
சங்கடப் படாதீங்க.

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.

இந்தத் தடவையாவது ஒழுங்கா சந்திச்சுப் பேசிக்கணும்.
வீடு செட்டில் ஆனதும் போன் செய்யறேன்.
உங்களுக்கும் ஒளி நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா. துளசி.

ஊருக்குப் போனதும் முடிந்தால் போன் செய்கிறேன். இல்லாவிட்டால் நெட் செண்டர் எதிலயாவது மெயிலுகிறேன்.

எல்லாம் நல்லபடியா செய்துடலாம்.
மீனாட்சியை உடனடியாப் போய்ப் பார்க்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

வந்து கொண்டிருக்கிறோம் கீதா. ஆமாம் அது விஐபி ஏரியா தான்.
ஆனா எங்க வீடு வரைக்கும் உண்டான்னு சந்தேகமே:)

கோபிநாத் said...

;)

வல்லிம்மா....இப்போதைக்கு டாடா ;))

சென்னையில் சந்திப்போம் ;)

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள். படங்கள் அருமை. கட்டிடங்கள் எல்லாம் சின்ன வயசுல செஞ்ச பேப்பர் வீடுங்க மாதிரியில்ல குச்சி, குச்சியா வரிசையா நிக்குது :))

20+7 ல என்ன தான் எடுத்திட்டு போகமுடியும். ஏர்லைன்ஸ் அடாவடியான இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :))

நாகை சிவா said...

புயலை எல்லாம் திருப்பி விட்டாச்சு... வாங்க வாங்க....

சிங்கார சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது.

திவாண்ணா said...

வழக்கம் போல மெதுவா வரேன்!:-)
வந்து சேந்தாச்சு இல்லே? மழை எங்க ஊரோட நின்னு போச்சுன்னு நினைக்கிறேன். அக்கா வீடு மைலாப்பூர்தான். அடுத்த தரம் வந்து பாக்க முயற்சி பண்ணறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா ஊருக்கு வந்தாச்சா... வாங்க வாங்க..
இந்த தடவையாவது அடுத்த பயணத்துக்கு முன்னால சந்திக்க ஆசை...முயற்சிசெய்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் நாம பார்க்கலாம் கோபிநாத்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாப்பா, சதங்கா.

கொடுமை செய்யறாங்க. எல்லாருக்கும் ஏதாவதூ கொண்டு வர முயற்சித்தேன் முடியவில்லை.:)

வல்லிசிம்ஹன் said...

சிவா இன்னோண்ணு வருதாமே:)

இன்னிக்குத்தான் எனக்கு இணையத் தொடர்பு கிடச்சுது.
சென்னை நல்ல கலகலான்னுதான் இருக்கு:0)

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா சந்திக்கணும் கண்டிப்பா.
வாங்க வீட்டுக்கு.
அடுத்த பயணம் இப்போதைக்கு இருக்காது.:)