Blog Archive

Tuesday, December 23, 2008

தூமணி மாடம்










இன்று தூமணிமாடத்து நாள்.
ஒன்பதாம் திருப்பாவை.
இதுவும் பத்தாம் பாவைப் பாடலான நோற்றுச் சுவர்க்கமும் இரண்டு தடவை சேவிக்க வேண்டும் என்று பெரியோர் சொல்வார்கள்.
மார்கழி விசேஷம் பேசும் பதிவுகள் கேஆரெஸ் ,குமரன் என்னும் பண்பான பதிவர்கள் ஆன்மீகத்தோடு சொல்லும் வார்த்தைகள் இருக்கும் போது
நானும் மீண்டும் எழுத என்ன இருக்க முடியும்.
பாட்டைத்தான் கொடுக்க வேண்டும்.
பார்த்தால் அங்கே ஆண்டாளின் தோழியின் வீடு தெரிகிறது. அதிலோ ஒரு மணிக்கதவம்.
விழித்திருப்பது பெண்ணின் தாயார் மட்டுமே.
பாடலின் நாயகியோ மார்கழிப் பனிக்குத் துணையாக வடபத்ர சாயி யினை நினைத்துக் கொண்டு அவன் தந்த ஆதரவிலே அழகாகத் துயில்கிறாள்.
அவள் படுத்திருக்கும் இடமோ தூ...மணி...மாடம்.சுற்றும் விளக்குகள் எரிகின்றனவாம். தூபம் கமழ்கிறதாம்.

இந்த மாதிரி மென்மையான காலையில் இருளும் ஒளியும் கலந்த வேளையில்
இவளுக்கு மட்டும் ஒளி நடுவே எப்படித் தூக்கம் வருகிறது.
நாமோ நோன்பெடுத்துவிட்டோம். கேசவனைப் பாட. இவளுக்கு யாராவது ஏவல் வைத்துவிட்டார்களா.
சொப்பனத்தில் கண்ணனைக் கண்ட மயக்கத்தில் இன்னும் கண் திறக்க முடியாமல், ஊமையாய் உறங்குகிறாளா.

கண் திறந்தால் கண்ணன் ஓடிவிடுவான் என்ற பயமாக இருக்க வேண்டும். அதுதான் என்று தீர்மானித்த ஆண்டாளும் தோழியரும், பெண்ணின் அம்மாவை விளித்து,
மாமீர்! உங்கள் மகளை எழுப்புங்கள், மாதவனைப் பாட வேண்டும்,
அவன் கோவில் நாட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
அவளும் எழுந்துவிடுவாள். அவர்களும் சேர்ந்து இன்னோரு பெண்ணை எழுப்பப் போவார்கள்.
என்ன ஒரு இனிமையான காலம்.
இப்போதோ இன்றொ நானும் இருக்கிறேன்.
மார்கழிக்கு என்று ஒரு கோலமும், இரு விளக்குகளும்தான் வாசலில் அத்தாட்சி.
இழைகளை இழுத்து முடிக்கவும், ஜயா,விஜய்,பொதிகை,ராஜ் டிவி என்று ரிமோட்டை அழுத்தி மார்கழி உபன்யாசங்களைக் கேட்டு விட்டு,
இன்னோரு காப்பியும் குடித்துவிட்டு, இதோ இணையத்துக்கு வந்தாகிவிட்டது.
நேற்றுதான் இந்தத் தமிழ்மணம் வரலாமா வேண்டாமா என்று யோசித்தது இன்று
ஆண்டாளின், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் தயவில் வலை ஏற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ்மணம் இன்னும் என் இணையத்தில் தெரியவில்லை.
படிக்க முடிந்தவர்கள் கருத்துச் சொல்லுங்கள்.

அன்னவயல் புதுவை ஆண்டாள்
அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
பாடிக்கொடுத்தாள்,
நல்பாமாலைச் சூடிக்கொடுத்தாள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே வாழிய நீ பல்லாண்டு.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.





Posted by Picasa

16 comments:

Kavinaya said...

ஆண்டாள் திருவடிகள் சரணம்.

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துகள் அம்மா :)

enRenRum-anbudan.BALA said...

தகவலுக்காக: என் திருப்பாவைப் பதிவுகள்

http://balaji_ammu.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

enRenRum-anbudan.BALA said...

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய -
http://balaji_ammu.blogspot.com/2008/12/490-tpv9.html

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.
பாலா உங்களை மறந்தேனே.
மன்னிக்கணும்.

இதை மார்கழி மாதத்து மறதிப் பட்டியலில் வைக்கிறேன்.
இன்னுமொரு பாவைப் பாடல் விரிவுரை கிடைத்தது என் பாக்கியம்.
நன்றிம்மா இந்த லின்கிற்கு.

துளசி கோபால் said...

ரெண்டாவது படம் முத்தம் +நான்:-)))))

கொள்ளை அழகு.

கனவு வீடு அது!!!!!

சந்தனமுல்லை said...

ரெண்டாவது படம் உங்க வீடா?

வல்லிசிம்ஹன் said...

பின்ன நாம் எல்லாம் இந்த மாதிரி இருக்கிற ரிசார்ட் ஒன்று,அதுக்குப் போகலாமா துளசி.. மாயவரம் பக்கத்தில ஸ்டெர்லிங் ரிசார்ட் இப்படித்தான் இருக்காம்.

துளசி அழகுக்குக் கேட்பானேன்.

வல்லிசிம்ஹன் said...

முல்லை வாங்கப்பா. எங்க பழைய வீட்ட்டு முற்றம் இன்னும் பெரிசாக ஊஞ்சலோடு இருக்கும்.

இது கூகிள் முற்றம்:)

குமரன் (Kumaran) said...

எளிய விளக்கம்ன்னா இது தான் வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன்,
குளிர் மிகக் கடுமையாக இருக்காமே.
பனியில் மாதவனை நினைத்துக் கொள்ளவேண்டும். பத்ரிநாதனாக வந்து உங்களோடு இருந்து
காப்பான். நன்றிம்மா.

Geetha Sambasivam said...

சிக்கென்ற அருமையான விளக்கம் வல்லி, நன்றி, அருமையான முற்றத்திற்கு. அப்பாடா, இந்த மாதிரி முத்தம் வைச்சு வீடு கட்டவில்லையே என்ற குறை எனக்கு இப்போவும் உண்டு. படத்திலாவது பார்க்க முடியுதே?? :(((((((

மெளலி (மதுரையம்பதி) said...

மிக பொருத்தமான படங்கள், எளிய விளக்கம்...அருமை வல்லியம்மா.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக பொருத்தமான படங்கள், எளிய விளக்கம்...அருமை வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா மௌலி.எத்தனை அழகான் மாதம் இந்த மார்கழி. நல்ல ஆன்மீக நண்பர்களோடு நட்பை இன்னும் மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம்.
நன்றிப்பா.

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். நான் அறிந்திராத விவரங்கள். நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மிக்குத் தெரியாத தமிழ் இருக்கும் என்று என்னால் நம்ப முடியல்லைம்மா.

இருந்தாலும் நன்றி;)
வாழ்த்துகளுக்கும் சேர்த்துத்தான்.