எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எழுபதுகளில் காரைக்குடி இனிமையான ஊராகவே இருந்தது.
நாங்கள் வசித்தது தபால் அலுவலகக் கட்டிடத்தில் .
'
அப்பா போஸ்ட் மாஸ்டராக , ராமேஸ்வரத்திலிருந்து இந்த அழகப்பநகர் மாற்றலில் வந்தபோது. ,
தபால் அலுவலகம் பெரியதாகத் தான் இருந்தது..
அதை ஒட்டிய இடம், போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்துக்கு ஒதுக்கப் பட்டது.
ஒரு புதர் மண்டிய தோட்டம்.
வீட்டிற்கும் தண்ணீர்க் கிணற்றுக்கும் நடக்க வேண்டிய
தூரம் அரைப் பர்லாங்காவது இருக்கும்.
நடுவில் ஊர்வன வம்சம் நிறைய இருக்கும். செம்மண் பூமியாச்சே.
ஆளுயர கரையான் புற்றுகளும் இருக்கும்.
அப்பாவும் தம்பியும் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு எங்களுக்குக் கடிதம் போட்டார்கள். அம்மா என்னுடைய இரண்டாவது பிரசவத்துக்காகச் சேலத்திற்கு உதவியாக வந்திருந்தார்.
என் மகன் பெரியவனுக்கு ஒண்ணரை வயது. சவலை.
பாட்டியுடனே ஒட்டிக் கொள்வான்.அவனையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அம்மா சமையல் வேலை செய்து, எனக்கு முறை தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து விறகடுப்பில் பெரிய தவலையில் தண்ணீர் கொதிக்க வைத்துக் குளிப்பாட்டிவிடுவார்.
பிறகு சின்னப் பாப்பா குளியல். மாமியாரும் உதவிக்கு வந்தார்.
குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே சிங்கம் எங்களை தன் பிரிய ஃபியட் வண்டியில் மனமில்லாத மனத்தோடு காரைக் குடியில் கொண்டு விட்டார்.
அம்மாவுக்கு வண்டியைவிட்டு இறங்கியதும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மிகச் சிறிய வீடு. மூங்கில்
அழி போட்ட வராந்தா. ஒரே ஒரு ஆறுதல் பெரிய வேப்ப மரம் கப்பும் கிளையுமாகச் சுகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது.
அதற்கப்புறம் ஒரு குட்டி ஹால். ஹாலை ஒட்டி வெளி வராண்டா. பாத்திரம் தேய்க்க, குளிக்க.
அதை ஒட்டி ஒரு படுக்கை அறை.
இந்தப் பக்கம் ஒரு சிறிய சமையலறை.
எங்களுக்கு முந்தி இருந்தவர்களுக்கும் சுத்தத் திற்கும் சம்பந்தம் இல்லை போல.
சுவரெல்லாம் கரி.
விளக்கெண்ணெய் போட்டுத் தடவி குழந்தைக்குத் திருஷ்டிப் பொட்டு வைக்கலாம்ம்மா என்று நான் சொன்னதை அம்மா
ரசிக்கவில்லை.
தரையெல்லம் பெயர்ந்திருந்தது.
ஒரு பூரானை வேறு பார்த்துவிட்டாள்.
கேட்கவேண்டுமா.
நீயும் குழந்தைகளும் கட்டிலில் ஏறி உட்காருங்கள் முதலில்.நிறையப்
பூச்சிகள் வருகின்றன.
டேய் ரங்கா, ....................................
முதல்ல இங்க வா.
குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த சின்னத்தம்பி வந்தான்.
சைக்கிள்ள காத்து இருக்காடா.
இருக்குமா. நல்ல ஜலம் குடிக்கிறதுக்கு எங்க எடுக்கணும்னு அப்பாகிட்ட கேள். அப்படியே போய்க் குடத்தில் எடுத்துக் கொண்டுவா,.
பதினாறு வயது கூட நிரம்பாத சின்னவன் எல்லா வேலைகளையும் தோளில் போட்டுக் கொண்டான்.
நல்ல பாங்கான உடல்.
அவனுக்கு. வேலை செய்ய அசர மாட்டான்.
புதிதாக அழகப்பா காலேஜில் சேர்ந்த பெருமை வேற. பியுசி யில் புதுத் தோழர்கள் வேற கிடைத்திருந்தார்கள். ஒரே உற்சாகம்.
அம்மா சொன்னதற்கெல்லாம் தலையாட்டினான்.
முத்ல்ல கிணற்றிலேருந்து தண்ணீர் கொண்டுவா
. ரெண்டு ட்ரம் ரொம்பினதும்.செக்காலை ஹோட்டலிலிருந்து இரண்டு சாப்பாடு வாங்கிண்டு வந்துடு. சாதம் கரியடுப்பில் வைத்துவிடுகிறேன். இது அம்மா.
அன்றிலிருந்து 30 நாளே ஆன என் பெண்ணை நான் கவனிக்கப் பெரியவனை
அவன் பார்த்துக் கொண்டான்.
அப்பாவோடு சேர்ந்து சுற்றியிருந்த இடங்களை மண்வெ ட்டி, கத்திகள் இவைகளை வைத்துக் கொண்டு சீர் செய்தான். ஆடுமாடுகள் நுழையாமல் மூங்கில் படல் செய்து போட்டான்.
எங்க இருந்தோ கட்டாந்த்தரையாக இருந்த வாசலில் சினியா Ziniya பூச்செடிகள் கொண்ட தொட்டிகளைக் கொண்டுவந்து வைத்தான்.
இரண்டு மாதங்கள் கழித்துப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பிய என்னையும் என் குழந்தைகளையும், ரயில் பயணமாகக் கூடவந்து சேலம் கொண்டுவந்து சேர்த்தான்.
இன்று இருந்தாலும் ஏதாவது வழியில் உதவிக் கொண்டுதான் இருப்பான்.
எங்கிருந்தோ வந்தான் ரங்கன். கண்ணனைப் பார்க்கப் போய்விட்டான் ஒரு மார்கழி மாதம்.

12 comments:
தெரிந்த சேதி என்றாலும் மனம் வலிக்கிறது:(
'எங்கிருந்தோ.......வந்தான்.........'
இழப்பின் வலி... நீங்காத நினைவுகள்...சென்ற வருடம் புகைப் படத்துடன் பகிர்ந்திருந்தீர்கள் என்று நினைவு.
இனிக்கும் நினைவுகள் கூட இழப்பினால் மனதில் பாரமாகி விடுகின்றன.
அதேதான். எல்லோரும் வருகிறோம் போகிறோம் துளசி. நாளைக்கு அவனுக்கு நினைவு நாள்.
ஆமாம். ஸ்ரீராம். 2010 இல் அவன் பிறந்தநாளுக்கு அவன் புகைப்படம் போட்டிருந்தேன்.செப்டம்பர் 28.
இப்பொழுது கண் கலங்குவது நின்று விட்டது ராமலக்ஷ்மி.
அவனது நுணுக்கமான அன்பை நினைத்துக் கொள்ளுகிறேன்.
யாரிடமும் தீங்கு நினைக்காத நல்ல குணத்தை நினைத்துக் கொள்ளுகிறேன்,
:(((( ethanaia varusham analum marakathu! :(
அருமை!
பகிர்விற்கு நன்றி அம்மா!
sad.சட்னு சிந்தனைகள் கூட ஒரு கணம் நின்னு போச்சு.
ஆமாம் கீதா. உண்மைதான். இந்த நிகழ்ச்சியினால் எத்தனை நபர்களுடைய வாழ்க்கை மாறியது!
ஆமாம் துரை.நான் இருக்கும் வரை அவன் நினைவுகளைப் பதிவது என்று உறுதியாக இருக்கிறேன்.
அந்த விசுவாசமாவது இருக்கணும் இல்லையா.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகப் படித்துச் சென்றேன். 'எங்கிருந்தோ வந்தான் ரங்கன். கண்ணனைப் பார்க்கப் போய்விட்டான்' வரிகளைப் படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன.
நினைவலைகளில் ரங்கன்.....
Post a Comment