Follow by Email

Wednesday, December 14, 2011

பேசியது கிளியா.

பச்சை ஒட்டகச் சிவிங்கி:)
Add caption
பயணத்தின் போது போஸ்  கொடுத்த ஒற்றைக் கிளி


கிளி பேசுவது அழகு. அதன்  குரல்  கிறீச்சிட்டால் பக்கத்தில் ஏதோ பூனை வந்துவிட்டது   என்று அர்த்தம். மற்றபடி சாடுவாக கண்ணை  அப்படியும் இப்படியும் உருட்டியபடி கூடுக்குள் தத்தித் தத்தி அது நடக்கும் அழகே தனி.
இந்தக் கிளியை  என் தோழி  வளர்த்து வந்தாள்.
"  அக்கா,  பிசெட்(பிஸ்கட்) "

இதெல்லாம் மட்டும் சொல்லும்.
மூக்கின்  சிவப்பு  சொல்லி  முடியாது.
அந்தப் பச்சையும் சிவப்பும் இன்னும் என் எண்ணங்களை ஆக்கிரமிப்பதால் தான்  வாங்கும் அத்தனை உடைகளும் அதே வண்ணத்தில் அமைகின்றனவோ என்று ஒரு ச்சின்ன  சந்தேகம்  கூட  எனக்கு உண்டு.:)

அந்தக் கிளிக்கு ஒரு நாள் தோழி ,  ஒரு பயங்கர சிகித்சை செய்தாள். யாரோ சொன்னார்கள் என்று அந்தக் குட்டிக்கிளியின்  சிறகுகளை   ஒரு அங்குலம்    அளவுக்குக்  கத்திரிக்கோலால்      நீக்கிவிட்டாள்.
அய்யோ  அதுக்கு வலிக்கப் போகிறதே  என்று  நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே  அதைச் செய்து முடித்துவிட்டாள்.
அதுவோ காச் மூச்னு  சத்தம் போட்டது.
அச்சுஅசல்  திட்டு வார்த்தைகள் போலத்  தோன்றியது.
கிளியை வாங்குவானேன்  இப்படி இறைக்கைகளைச்  சிதைப்பானேன் என்று கேட்டேன்.
உனக்கு   ஒண்ணும் தெரியாதுடி.
கட் செய்யலைனால் பறந்து போய்விடும்.

என்ற பதிலை வீசினாள்.
பூனை  வந்தால் அதனால் நகர முடியாதே அப்ப என்ன பண்ணும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
 என்ன  ஆச்சோ அந்தக் கிளிக்கு.தெரியவில்லை. அடுத்தமாதம் திண்டுக்கல் ,  ஊர் மாற்றல் .

இப்ப எதுக்குக் கிளி  கதை  என்று பார்க்கிறீர்கள்.

மங்கையர் உலகம்  ஒளிபரப்பில்  எழுத்தாளர் சிவசங்கரி
   ஒரு கதை சொன்னார். நல்ல பேச்சுத் திறமை கொண்ட கிளி   ஒன்றை  ஒருவர் வாங்கினாராம்.  என்ன சொன்னாலும் சலிக்காமல்  திருப்பிச்  சொல்லுமாம். எந்த   சத்தத்தையும்  அதே போலே  கத்திக் காட்டுமாம்.  ஒரு நாள்  இந்தக் கிளி  நிற்காமல்  இரும  ஆரம்பித்ததாம்.
தேன் கொடுத்துப் பார்த்தாராம். பால் கொடுத்தாலும்
பயன் இல்லையாம்.

சரின்னுட்டு ஒரு வெடரினரி  வைத்தியர்  இடம் கிளியை  அழைத்துக் கொண்டு போனாராம்.
அவர் முன்னாடியும் இந்தக் கிளி இருமிக் கொண்டே இருந்ததாம்.
கொஞ்ச நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் முகத்தில் சிறிய புன்னகை தோன்றியதாம்.
''ஏன் சார் நீங்கள் புகை பிடிப்பவரா''  என்று வந்தவரைக் கேட்டாராம்.  ''ஆமாம் சார்  இருபது சிகரெட்டாவது பிடிப்பேன் ''என்றாராம் கிளிக்காரர்.
ஒரு வைத்தியம் சொல்கிறேன். அதைச் செய்தால் இருமல் நின்றுடும் என்றாராம் வைத்தியர்,.  கட்டாயம் செய்கிறேன்  என்று உறுதி கொடுத்தார்  இவர்.
நீங்கள் ஒரு பதினைந்து நாட்களுக்குப் புகைபிடிக்காமல் இருங்க என்றாராம்.
   கிளி இருமலுக்கும்  என்  சிகரெட்டுக்கும் என்ன சார் சம்பந்தம் என்றாராம்  கிளிக்காரர்:)
நான் சொல்றபடி செய்யுங்க. 15  நாட்கள் கழித்துவாருங்கள் என்றாராம்.
கிளிக்காக  இவரும் புகை பிடிக்காமல் இருந்தாராம். நிறுத்தின இரண்டு நாட்களிலியே  கிளி இருமுவதை நிறுத்திவிட்டதாம்.
அதிசயமான அதிசயம்    புகைப்பவருக்கு.

எடுத்துக் கொண்டு ஓடினாராம்.  வைத்தியரிடம். என் சிகரெட்டுக்கும் கிளி இருமலுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று அவசரமாகக் கேட்டாராம்.

சிகரெட்டுக்கும் உமக்கும் உம்மோட இருமலுக்கும் தான் சம்பந்தம்  சார். நீங்க புகைபிடிச்சு  இருமறீங்க.
அந்தச் சத்தத்தை  அது செய்து காட்டுது.
இன்னும் கொஞ்ச நாளானால்  சிகரெட்டைக் கூடக் கேட்டு இருக்கலாம்:)
என்று நகைத்தாராம் டாக்டர்.
நீங்கள் இருமுவதை நிறுத்தியதும் அதுவும் நிறுத்திவிட்டது. அவ்வளவுதான்.
எப்படியோ புத்திசாலி   வைத்தியர்கள் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
செய்திக்கு திருமதி சிவசங்கரிக்கு நன்றி சொல்கிறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

22 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல கதை, நல்ல செய்தி. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

திவாண்ணா said...

அந்தப் பச்சையும் சிவப்பும் இன்னும் என் எண்ணங்களை ஆக்கிரமிப்பதால் தான் வாங்கும் அத்தனை உடைகளும் அதே வண்ணத்தில் அமைகின்றனவோ என்று ஒரு ச்சின்ன சந்தேகம் கூட எனக்கு உண்டு.:)/
:-)))))

ஹுஸைனம்மா said...

கிளி பச்சைதான், இல்லைங்கலை. அதுக்காக இப்படி பேக் ரவுண்டையும் பச்சையாக ஆக்கி, அழுத்தமாச் சொல்லணுமா? :-)))))

கிளி பழகிட்டா பறக்காதுதானே. அதுக்குப் போய் ரெக்கையெல்லாம் வெட்டிட்டு.. பாவம்.

அப்போ, சிகரெட் பழக்கத்தைவிட வைக்க, கிளி பரிசளிக்கலாம் போல!!!! :-))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி:)

வல்லிசிம்ஹன் said...

ஹலோ கயல் கதை பிடித்ததா:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.
பச்சை வெறி ஜாஸ்தியாப் போச்சோ:)
அந்த எட்டு வயதில் யார் சொன்னாலும் நம்பறதுதானே பலஹீனம்!
ஆமாம் கொடுக்கலாம். ஆனால் நல்ல காப்பி அடிக்கிற கிளியா இருக்கணும்:)

ஸ்ரீராம். said...

பாசக்கிளியாய் இருக்கும் போலவே....இந்தச் செய்தியை சொன்ன சிவசங்கரிக்கும், கேட்டுப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!

பால கணேஷ் said...

ஆஹா... மது குடிக்கற பழக்கத்தை நிறுத்தற கிளி ஏதாவது இருக்கான்னு சிவசங்கரி மேடத்தைக் கேட்டுச் சொல்லுங்க வல்லிம்மா... நாட்டுல பாதிப் பேருக்கும் மேல டாஸ்மாக்லயே கெடக்கறதப் பாக்கறப்ப கோபம் கோபமா வருது... நல்ல செய்தி சொன்னீர்கள். நன்றி!

துளசி கோபால் said...

அருமை! பச்சை(யும்) அருமை!

geethasmbsvm6 said...

பாலூட்டி வளர்த்த கிளி, பழம் கொடுத்துப் பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சைக்கிளி இருமுதம்மா! :))))))

geethasmbsvm6 said...

தொடர

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:)! கதை முன்னரே வாசித்திருக்கிறேன். பளீருங்கற கிளிப்பச்சை பேக்ரவுண்டில் அழகான பச்சையில் கிளி:)!

திண்டுக்கல் தனபாலன் said...

பளீர்! பளீர்! கிளி! அருமை!
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். ஆமாம் அந்தக் கிளிக்கு இருக்கிற கரிசனம் சக ஜனங்களுக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.!

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் சிரிப்பதைப் பார்த்தால் ஆமாம் அப்படித்தான்னு சொல்கிற மாதிரி இருக்கே!!!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ் . ஆஹா அப்படி ஒரு கிளி மட்டும் இருந்தால் உலகமே காப்பாற்றப் படுமே.
கதை சொன்ன சிவசங்கரி அம்மாவோட கதையே ஒரு கிளி மாதிரி தானே ... நிறைய மனிதர்களைக் குடியிலிருந்து விடுவித்தது.

வல்லிசிம்ஹன் said...

பச்சைதான் அருமை இல்லையாப்பா துளசி.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. சரியான சமயத்தில் சரியான பாட்டு:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ராமலக்ஷ்மி. இரண்டு வருடங்கள் முன்னால் எடுத்தது.செட்டிபுண்யம் கோவில் வளாகத்தில் பறந்த கிளிகளில் ஒன்றைப் பிடித்தேன். பிகாசாவில் கறுப்பாகத் தெரிந்தது. வர்ணம் மாற்ற முயல்கையில் எல்லாம் பச்சையாகிவிட்டது.:0)

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி தனபாலன்.என் தோழி ஒருவளின் சகோதரன் ஒருவர்.அவர் மகன் பெயர் கூட தனபாலன் தான். உங்கள் பெயர் அதை நினைவு படுத்தியது.

மாதேவி said...

கிளிக்கதை நல்லாக இருக்கிறதே.