Blog Archive

Tuesday, December 13, 2011

கிளியே கிளியே மார்கழிக்கிளியே!

ரங்கா  ரங்கா  மார்கழி வந்துவிட்டது
காத்திருக்கும்  கிளி. இந்தக் கிளிக்குத்தான் எத்தனை ஏற்றம்.
பாவையர் தலைவியின் தோளேறி அவள்
வாய் மொழியும் கண்ணன்  திரு நாமங்களையும்,
பாவையைப் பாடும் அரையர்  கூத்தினைப் பார்க்கவும்,
அவள்  சூடும்மாலைவாசம் அனுபவிக்கவும்,
ரங்கனுக்கும் அவளுக்கும் ரகசியத் தூது செல்லவும்
கொடுத்துவைத்திருக்கிறதே.
பச்சைக்கிளியே, தினம் தினம் பிறக்கும் புதுக்கிளியே
நீ என்றென்றும் வாழ்க.

உன்னைத் தோளில் ஏந்திய  நோன்புப்பாவை வாழி.
அவள் கைத்தலம் பற்றிய மன்னன் கோவிந்தனும் வாழி.
திருப்பாவை முப்பதையும் நாங்கள் பாட எங்களுக்கு நல் எண்ணமும்,நல் மொழியும்,தரிசனம் கிடைக்க நல்ல கண்களும்,
நல்மொழிகள் கேட்க   செவிகளும் வேண்டி நமஸ்கரிக்கிறோம்.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

துளசி கோபால் said...

ஆஹா.... கிளி, நம்ம கிளி!!!!

இந்த முறை கிளி பிறப்பது சனியிலா!!!!!கிழமையைச் சொல்றேன்ப்பா:-)))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா. சனிக்கிழமைதான் மாதம் பிறக்கிறது:)
கிளியும் துளசியும் கொண்டாடும் மாசம் மார்கழி:)

தனிமரம் said...

கிளியும் பாவையின் சிறப்பைப்பாடும் கவிதையும் சிறப்பே!

பால கணேஷ் said...

அடாடா... மார்கழி பிறந்துடுச்சா... கவனிக்காம இருந்துட்டனே... ஆண்டாள் பாட்டு ஒண்ணுரெண்டை நல்ல எளிய தமிழ் விளக்கத்தோட பதிவு போடணும் நினைச்சிட்டிருந்தேன். நினைவூட்டின வல்லிம்மாவுக்கு ரொம்ப ரொம்ப... வேறென்ன... நன்றிகள் தான்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனிமரம். தனிமரம் எல்லாம் தோப்பக மாறும் மாதம் மார்கழி. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கணேஷ், இன்னும் மார்கழி பிறக்கவில்லை. சனிக்கிழமைதான் மார்கழித் திங்கள் நன்னாள்.

கௌதமன் said...

மார்கழி வந்தாலே நல்லியின் இசை கையேடுகளும், கோவில்கள் தோறும் எம் எல் வி பாடும் திருப்பாவையும், வானொலி, தொலைக்காட்சி (பொதிகை) திருப்பாவை, திருவெம்பாவை விளக்க உரைகளும், மியூசிக் அகடெமியும், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்சும், இன்னும் இசை விழா கச்சேரிகள் நடக்கும் ஒவ்வொரு சபாவும், சபா காண்டீன்களும் நினைவுக்கு வருகின்றன. இந்த சீசனுக்கும் சென்னையில் இரண்டு வாரங்கள் இசையில் மயங்க தயார் செய்து வருகின்றேன்.

அப்பாதுரை said...

துளசி கோபாலின் கமேந்ட் குபீர்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவுகளையும் படிக்கவும் நல்ல நல்ல படங்களையும் பார்க்கவும் காத்திருக்கிறோம். பகிர்விற்கு நன்றி அம்மா!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

சிவகுமாரன் said...

அழகுக் கிளி.
அருமைக் கவிதை .
அரங்கன் அருளால்
அகிலம் செழிக்க .

வல்லிசிம்ஹன் said...

வரணும் கௌதமன்.ஆமாம் டிசம்பர் மாசம் சென்னை ரொம்ப அழகாயிடும். அதுவும் மார்கழி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்:)
நல்லா சந்தோஷமாகக் கொண்டாடவும். நன் வீட்டிலிருந்தபடி விஜய் ,ஜயா,பொதிகை எல்லாம் பார்த்துக் கேட்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை. சனி ரொம்பப் பிடிக்குமோ:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. மார்கழிக்கு கட்டியம் கூற கிளி வந்தாச்சு வல்லிம்மா இடுகையில் :-)

கோமதி அரசு said...

உன்னைத் தோளில் ஏந்திய நோன்புப்பாவை வாழி.
அவள் கைத்தலம் பற்றிய மன்னன் கோவிந்தனும் வாழி.
திருப்பாவை முப்பதையும் நாங்கள் பாட எங்களுக்கு நல் எண்ணமும்,நல் மொழியும்,தரிசனம் கிடைக்க நல்ல கண்களும்,
நல்மொழிகள் கேட்க செவிகளும் வேண்டி நமஸ்கரிக்கிறோம்.//

நிச்சியம் நீங்கள் சொன்ன மாதிரி எல்லோரும் நமஸ்கரிக்க வேண்டும் .

கிளி நம் பிராத்தனையை அந்த ரங்கனிடம் சொல்லும்.

அந்த ரங்கன் நமக்கு அருளுவார்.

படங்கள் அருமை.

மாதேவி said...

மார்கழியும் நன்நாட்களும் மனதுக்கு இனிமை தருவன.

மார்கழி கிளியைப்போட்டு பாவைஅவளை வணங்க வைத்தது அருமை.