Blog Archive

Saturday, January 29, 2022

மொழி அறியா நிலா!!!!


வல்லிசிம்ஹன்நிலா எங்கே வந்தாலும் பாட்டுகளும்
தொடரும். 
பலப்பல  இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளை முழு நிலவு
கொடுத்திருக்கிறது.

பழைய பழைய இந்திப் பாடல்கள்
எங்கள் சிங்கத்துக்கு மனப்பாடம்.


நல்ல நிலவை அனுபவிக்கும் போது 
இதமான அவர் குரலையும், அமைதியையும்
  உணர்ந்து நிலைக்கிறேன்.
மோன நிலைக்குக் கொண்டு செல்லும்
மன  சலனத்தை நிறுத்தும் பாடல்கள் 
நேர்( பாசிடிவ்)எண்ணங்களை விதைக்கின்றன.

நூதனோடு தேவ் ஆனந்தைப் பார்க்கும்போது

நல்ல மைசூர்பாகு பக்கத்தில்
ஸ்திரமில்லாத வேறெதையோ பார்க்கும் 
நினைவு.:))))))) நம் அப்பாதுரை கைதட்டும் சத்தம் கேட்கிறதோ:)

   பிஸ்வஜித் வஹீதா ரஹ்மானின் பீஸ் சால் பாத்
படம் சக்கைப் போடு போட்டது.
வஹீதாவின் கரிஸ்மா படம் முழுவதும்.
நமது பழைய முதல்வர் செல்வி இந்தப் பாடலை
அருமையாகப் பாடி இருப்பார். ஒரு பேட்டியில் தன் இளமைக் கால நினைவாகப்
பகிர்ந்து கொண்ட பாடல்
ஆஜா  ஸனம் ! மதுர சாந்தினி  மேன் ஹை ஹம்........
மீண்டும் தேவ் ஆனந்த் ,,கீதா தத்.

பிரபலமான 1952 பாடல்.
இந்த மாதத்துக்கான நிலவுப் பாடல்கள் இத்துடன் அமர்கின்றன. 
அடுத்த நிலவில் சந்திக்கலாம்:)


19 comments:

வல்லிசிம்ஹன் said...

இங்கே இந்த இணைப்பு வேலை செய்யாவிட்டால்
யூடியூப் சென்றுதான் பார்க்கவேண்டும்.

ஸ்ரீராம். said...

என்னென்ன பாடல்கள் என்று அறிய யு டியூப் சென்று பார்த்துக் கொண்டேன்.  இதில் எனக்கு ரொம்பப் இடித்த பாடல் என்றால் பேக்கரார் தர்த்தி ஹமே பாடல்.  ஒரு புத்தாண்டு கொண்டாடட்டத்தின்போது தொலைக்காட்சியில் ஏ வி ரமணன்  இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.  11 56 க்கு  ஏதோ  பாட தொடங்கியவர் சரியாய் 12 க்கு அப்படியே நியூ இயர் கூச்சலுடன் இந்தப் பாடலைத் தொடர்ந்தபோது மனதில் நின்று விட்டது.

Geetha Sambasivam said...

எந்த இணைப்பும் வேலை செய்யவில்லை எனக்கு! :) ஆனால் பாடல்கள் அனைத்துமே எவை எனப் புரிந்து கொண்டேன். வஹீதா ரஹ்மான் இப்போதும் அழகு! "பெண்"களூரில் தான் இருப்பதாய்க் கேள்விப் பட்டேன். எல்லாப் பாடல்களும் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானவை. நல்ல நிலாக்காலப் பாடல்கள்

ஸ்ரீராம். said...

உங்கள் பாடல் லிஸ்ட் முதல் வரிகளை படித்தபின் என் மனதில் வேறொரு பாடல் நிழலாடிக் கொண்டே இருந்தது.  கொஞ்ச நேரத்தில் அது என்ன பாடல் என்று தெளிவாய் நினைவுக்கு வர அதையும் யு டியூப் சென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஜூலி படத்தில் வரும் யே ராத்தேன் எனும் லதா மங்கேஷ்கர் பாடல்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் சிரத்தை எடுத்து யூடியூபில் கேட்டது மிக மகிழ்ச்சி மா.
நீங்கள் சொல்லி இருக்கு ஜூலி பாட்டும் மிக மிக இனிமை.

வஹீதாவும் பிஸ்வஜித்தும் இந்தப்
பாடலில்( பேகராரு கர்க்கே ஹமே யூன ஜாயியே)

மனம் கவரும் வண்ணம் எடுக்கப் பட்டிருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

ஏவி ரமணன் எனக்கு மிகப் பிடித்த பாடகர்.
அவரது மியூசியானோ
ரொம்ப லைவ்லியாக இருக்கும்.
அவருக்கும் உமாரமணனுக்கும் வளமான குரல்.

பெரிய தம்பியின் திருமணத்துக்கு
அவரது கச்சேரி இருந்தது.

45 வருடங்களுக்கு முன்!!
நியூ இயர் என்றால் எத்தனை உற்சாகம் அப்பா.
துடிப்பான நேரம் ஆக இருந்திருக்கும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

யூடியுபில் என்னால் காண முடிந்தது மா.

இவை அனைத்துமே சென்னை விவித் பாரதியில் அடிக்கடி ஒலி
பரப்பாகும்.
வஹீதா எப்பவுமே அழகு. ரசித்துப் பார்க்கலாம்.

கோமதி அரசு said...

இனிமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன். அண்ணனும் நானும் விவித் பாரதியில் இந்தி பாடல்கள் கேட்டு மகிழ்வோம். இந்தி படங்களும் தியேட்டர் போய் பார்ப்போம்.

கடைசி இரண்டு பாடல்களை யூடியுபில் போய் கேட்டேன் அக்கா.

அருமையான பகிர்வு.

KILLERGEE Devakottai said...

எல்லா இணைப்புகளுக்கும் சென்று வந்தேன் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்கள் எல்லாருக்கும் நிறைய பாடல்கள் தெரிந்திருக்கிறது!!! எனக்கு இப்பாடல்கள் எதுவும் தெரியாது!! ஹிஹிஹி.. யுட்யூப் போய் கேட்கிறேன். இங்கு எதுவும் திறக்கவில்லை.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

ஹிந்தி மொழியில் நிலா பாடல்கள் நிறையவே உண்டு. குறிப்பாக பழைய பாடல்கள் மிகவும் ரசிக்க முடியும் பாடல்கள். நீங்கள் இணைத்திருக்கும் பாடல்களை ஒவ்வொன்றாக மீண்டும் பார்க்க வேண்டும். தொடரட்டும் நிலா ரசனை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நிலா பாடல்கள் மொழி மாறினாலும் அழகாகத்தான் உள்ளது. முன்பெல்லாம் தொலைக்காட்சியில் பொதிகையில் சனிக்கிழமை மாலை ஹந்திப்படங்கள் தவறாது ஒளிப்பரப்புவார்கள். எப்படியோ புரிந்து கொண்டு எப்போதும் பார்ப்பேன். அதன் பின் கேபிள் கனெக்ஷன் வந்ததும், டி.வியே என் வசமில்லாது போய் விட்டது. இரண்டு பழைய பாடல்கள் நீங்கள் பகிர்ந்ததில் கேட்டேன். தமிழிலும் இந்ந இசையில் இந்தப் பாடல்கள் வந்திருக்கிறதோ ? நிலா பாடல்கள் தொகுப்பு அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

நிலாவின்மேல் உள்ள உங்கள் ஆசை இனிய பாடல்களாக நாங்களும் கேட்டு மகிழ்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

உடனே பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தாமதமாகி விட்டது.

நம் இளமைக் காலங்கள் வானொலியுடனும் விவித பாரதி, ரேடியோ
சிலோனுடனும் தான் சென்றது,.
உங்களையும் அண்ணனையும் பற்றி அறிய
மிக மிக மகிழ்ச்சி.

நன்றி மா. என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

பாவம் மா. சரியான இணைப்பு
கொடுக்காமல் அலைய வைத்துவிட்டேன்!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,
எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.

ஒவ்வொருவர் வாழ்க்கை முறையும்
வெவ்வேறு விதம்.
இந்தப் பாடல்கள் எல்லாமே திருமணம் ஆகும் வரை
24 மணி மேடம். அதற்குப் பின்
4 மணி நேரம் என்று தொடர்ந்தது.

இப்பொழுது எனக்கு பாடல்கள் நிறைய கேட்க முடிகிறது.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்
என்றும் நலமுடன் இருங்கள்.

சிலசமயம் பாடல்களின் இணைப்பு
வேலை ஸ்ய்வதில்லை,
நீங்கள் வந்து கேட்பதே மகிழ்ச்சி.
நிலாவும் காதலர்களும் இந்தி உலகில்
அதிகம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
அன்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி.
என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் சொல்வது போல புதன்கிழமை கூட சித்ரஹார்
வரும்.

சனி நல்ல படம் வரும் என்று நினைக்கிறேன்.
எனக்கும் அர்த்தம் தெரிய ஆரம்பித்தது பின்னாட்களில் தான்.

மேலும் நமக்கு வேண்டியது இசை மட்டுமே
இல்லையா.

நேலும் உணர்ச்சிகளுக்கு ஏது மொழி!!
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆவலுடன் நீங்களும் கேட்டு ரசிப்பதற்கு மிக நன்றி மா.