எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
தை பிறந்ததிலிருந்து திருமண அனிவெர்சரிகளும் வர ஆரம்பித்தன.
மனம் நிறை வாழ்த்துகளை
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
சிலரைக் குறிப்பிட மறந்தும் விட்டேன்.
மன்னிக்கணும்.
திருமணம் என்ற பந்தத்தில்
இணைந்த அனைவரும் ,முதல் நாள் அடைந்த
மகிழ்ச்சி மாறாமல்.,அன்பு கலையாமல்
இனிய வாழ்க்கை பலப் பல சோதனைகளுக்கு
நடுவிலேயும்
ஒற்றுமையாக இருந்து நல் வாழ்வு பெற
இறைவன் அருள வேண்டும்.
எங்கள் மூன்று செல்வங்களுக்கும்
எங்களுக்கும் தை மங்கை வழி காட்டினாள்.
அவர்களுக்கு ஆசிகள்.
இனிவரப் போகும் திருமண ஆண்டு நிறைவுகள்
சுபமாக அவரவர் குழந்தைகளின் நல்வாழ்வு
ஓங்க நிம்மதியோடு இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் வாழ்த்துகள்.
18 comments:
ஓ அம்மா இது பொதுவாக எல்லோரையும் வாழ்த்துகிறீர்களோ? யாரையும் குறிப்பிடவில்லையே. எல்லா நாட்களும் ஒன்றுதான்
எனக்கு தேதிகள் இது நினைவே இருப்பதில்லை அம்மா நீங்கள் நினைவு வைத்து வாழ்த்துவது பெரிய விஷயம்!
கீதா
கல்யாண நாள் பார்த்து பாடல் மட்டும் தெரிந்தது. மற்றவை பரிச்சயம் இல்லாததால் இப்போதுதான் கேட்கிறேன். ஹாவாயியன் வெட்டிங்க் சாங்க் அட! இப்படி ஒவ்வொரு ஊருக்கும் இருக்குமோ நம்மூர் கல்யாணப்பாடல்கள் என்று இருப்பது போல. பரிச்சயம் உள்ளவர்கள் வேறுபடுத்திச் சொல்ல முடியும் போல!
கீதா
திருமண நாள் நிறைவைக் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
அக்கா மூன்று செல்வங்களுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
உங்கள் ஆசிகளும், இறைவனின் ஆசியும் அவர்களை நலமாக வளமாக மன நிறைவுடன் வாழ்வார்கள்.
எங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும்.
பாடல் பகிர்வு அருமை. கேட்டேன்.
அன்புக்கு விளக்கம் சொல்லும் பாடல் அருமை.
உங்கள் பிள்ளைகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
பொதுவான வாழ்த்துகளோ... ஓகே ஓகே... எங்கள் திருமணம் ஆவணியில்! மகன் திருமணம் சீக்கிரம் அமைய உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்குகிறேன்.
உங்கள் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்.
திருமணநாள் வாழ்த்துகள்- கொண்டாடும் அனைவருக்கும்.... சிறப்பு பாடல்களை இனிமேல் தான் கேட்க வேண்டும்.
அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
இது தை மாதத் திருமணங்களுக்கான
வாழ்த்துகள் அம்மா.
அடுத்த பதிவில் சொல்லி இருக்கிறேன்:)
அன்பின் கீதாமா,
''அட! இப்படி ஒவ்வொரு ஊருக்கும் இருக்குமோ நம்மூர் கல்யாணப்பாடல்கள் என்று இருப்பது போல. பரிச்சயம் உள்ளவர்கள் வேறுபடுத்திச் சொல்ல முடியும் போல!''
உண்மைதான்
எல்லா தேசங்களுக்கும் ஒரு திருமணப் பாடல் உள்ளது.
இது ஆங்கிலத்தில இருப்பதால்
பதிந்தேன்.
இத்தாலி, க்ரீஸ், ப்ரிட்டன், ஸ்பெயின்
என்று பல விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
இனிமையாகவும் இருக்கும்.
அன்பின் பெரிய கீதாமா:)
நலமுடன் இருக்க வாழ்த்துகள்.
உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் அவர்களிடம் சேர்க்கிறேன்.
நன்றி மா.
அன்பின் கோமதி மா,
என்றும் வாழ்க வளமுடன்.
நம் பிள்ளைகளுக்கு நம் வாழ்த்துகளும் ஆசிகளும்
மிகவும் அவசியம்.
உங்கள் மற்றும் ஸாரின் ஆசிகளும்
மிகவும் அவசியம்..
மிகவும் நன்றி மா.
அன்பு கோமதிமா,
இந்தப் பாடல்கள் 1965 லிருந்து
கேட்டுக் கொண்டிருக்கிறோம்!!!
இன்னும் நிறைய இருக்கின்றன.
நன்றி மா.
அன்பின் மாதேவி என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா. உங்கள் வீட்டின்
பசங்களுக்கும் உங்களுக்கும் எகள் ஆசிகள்.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
தை மாத வாழ்த்துகள் மா.
எங்கள் சின்னவனுக்கு நாளை
திருமண நாள்.
சேலம் தோழிக்கு அடுத்த நாள்.
பிறகு எங்களுக்கு,
அன்புன் கோமதி அரசுக்கு,
எங்கள் மாமனார் மாமியாருக்கு என்று
15 தேதி வரை செல்கிறது.
அதுதான் பதிவும்மா.
அன்பின் பானுமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் திருமண நாள் தெரிந்தால் அதையும் பதிந்து இருப்பேன்.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் திருமண நாள் எனக்கு
தெரியவில்லை.
உங்களுக்கும் ஆதிக்கும் என் இனிய வாழ்த்துகளும் ஆசிகளும்.
நன்றி மா.
Post a Comment