Blog Archive

Tuesday, March 23, 2021

கடிதங்கள்.1

குடும்பம் ஆரம்பித்த பொழுது

எங்கள் வீட்டின் வீட்டுக்காரம்மா லக்ஷ்மி.என் அன்புத் தோழி.
நலன் விசாரித்து எழுதிய கடிதம். 1066
என் பள்ளித்தோழி ஆறுமுகத்தாய்,
திண்டுக்கலிலிருந்து இருந்து எழுதிய
உயிர்க் கடிதம். வருடம் 1965

பாட்டி எழுதின கடிதம்.1967
 பாட்டியின் பக்கத்து வீட்டு பகவதி மாமியும், ராமகிருஷ்ண மாமாவும்
நான் மதுரை வந்த பிறகு எனக்கு எழுதிய 
கடிதம்.1965
அப்பாவுக்கு உடல் நலம் இல்லாத போது
தாமதமாக அம்மா எழுதிய கடிதம். 
''நீ கவலைப் படுவாயே என்று சொல்ல வில்லை'':(       1969 year.
கொண்டு போய் விட அம்மா, மீண்டும் கொண்டு வந்துவிட பாட்டி.
அந்தக் காலம்1966
  அம்மாவின் அழகான கையெழுத்து.



வல்லிசிம்ஹன்

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பொக்கிசங்கள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. ஆஹா.. இன்னும் கடிதங்கள் சுற்றி வருகிறதா? "உன்னை உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளது.நீ எப்போது இங்கு வருகிறாய்? உன் ஊருக்கு வரும் சமயம் இங்கும் வந்து விட்டு போ..உன்னைப்பார்த்து வெகு நாட்கள் ஆன மாதிரி உள்ளது...தவிரவும் குடும்பத்தில் உள்ளவர்களின் எல்லோரையும் குறிப்பிட்டு நலம் விசாரிப்பது.." இப்படித்தான் அந்தக்கால பேச்சுகள் எல்லாவிடங்களிலும் இருந்திருக்குமென அறிந்து கொண்டேன். இதைத்தான் மறக்கவியலாத அன்பு என்று நாம் கூறுகிறோம்.

இப்போதும் உறவுகளுடன் இந்த மாதிரிதான் பேசிக் கொள்கிறோம்.(ஃபோன் மூலமாக ஸ்கைப் மூலமாக) ஆனாலும் அந்த எழுத்து வழி, நம் அன்பு உறவுகளை கட்டிப் போட்டது மாதிரி உணர்கிறோம்.(பழக்கத்தினாலோ என்னவோ..) உங்கள் அம்மாவின் கையெழுத்து நல்ல முத்துமுத்தாக உள்ளது. பழைய கால நினைவுகளை கடிதங்கள் மூலமாய் கண்ணெதிரே கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

கடிதங்களை நிழற்படமாக எடுத்து வைத்துக் கொண்டது நல்லது. இனிய நினைவுகள் - இந்தக் கடிதங்கள். அப்பா தனக்கு வந்த கடிதங்களை ஒரு கம்பியில் கோர்த்து வைத்திருப்பார். பெரும்பாலும் ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எடுத்து, தேவையில்லை என்று தோன்றுவதை கிழித்துப் போட்டு விடுவார்.

Geetha Sambasivam said...

அன்பானவர்கள் எழுதிய கடிதங்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம். இங்கேயும் அனைவருமே அன்பைப் பொழிந்து கடிதம் எழுதி இருக்கின்றனர். படிக்கப் படிக்க சுவாரசியம். இத்தனை வருடங்கள் கடிதங்கள் வீணாகாமல் எழுத்தும் பாதிப்படையாமல் இருப்பது ஆச்சரியம். அதிலும் நீங்க இருப்பதோ அம்பேரிக்கா! அங்கேயும் இந்தக் கடிதங்கள் தொடர்ந்து வந்திருக்கின்றனவே! ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அதான்! நல்ல நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

பொக்கிஷம்...   பொக்கிஷம்...    ஆஹா...   அருமையாக இவ்வளவு பழைய கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களே அம்மா....   அருமை.  ஒவ்வொரு கடிதத்திலும் அன்பு இழையோடுகிறது.  கையெழுத்து எல்லாமே சூப்பர்,

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உண்மையான பொக்கிஷங்கள் இவைதான். மாறாமல் அன்பைப்
பொழிந்தவர்கள்.தோழியின் அப்பா ,நாட்டு மருந்துக்கடை வைத்து இருந்தார். விருதுநகர்
அவர்களுக்குப் பூர்வீகம்.
அவர்கள் வீட்டு இட்டிலியும் ,சட்டினியும்
எனக்கு மதிய சாப்பாடாக வரும்.
மிக மிக இனிய குடும்பம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
இவை எல்லாம் தான் என் உண்மையான சொத்து.
இங்கே எனக்குப் பச்சை அட்டை கிடைத்ததும்,
சென்னையிலிருந்து கிளம்பும் போது,
எனக்குக் கண்ணில் இருந்த கடிதங்களை முதலில்
எடுத்து வைத்துக் கொண்டேன்.

நம் பள்ளியில் கடிதம் எழுதுவது ஒரு கலையாகவே
கற்பிக்கப் பட்டது நினைவில் இருந்தாலும்
நம் பெற்றோர் எப்படி அவர்கள் உறவுகளுடன்
ஆத்மார்த்த மாக எழுதிக் கொண்டார்களோ
அந்த திடம் தான் என்னையும் எழுத வைத்தது.
பதில் அன்பும் கிடைத்தது.
இப்போதும் நல்ல நட்புகள் நீடிப்பதுதான் என் பாக்கியம்.

இப்பொழுது பின்னூட்டங்களைச் சேகரிக்கிறேன்.!!!
அவைகள் நட்புகளின் எண்ணங்கள் அல்லவா.
அன்புக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
அம்மாவுக்கு,அப்பாவுக்கு வந்த கடிதங்களை
விட்டு விட்டோமே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.
அங்கு இப்படித்தான் ஒரு நீளக் கொக்கியில் சொருகி வைப்பார்கள்.
அதுவும் கல்யாண அழைப்புகளைப்
பெட்டியில் வைத்துக் காலண்டர்களில் நாள் குறித்துக்
கண்ணில் படுமாறு வைத்திருப்பார்கள்.

.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா, அந்தக் காலத்தில்
அதுதானே நடைமுறை. எல்லோரும் எல்லோரையும் விசாரிப்பது நம் வழக்கம்.

அந்த ஒரு அன்பு நம்மைப் பந்தத்திலிருந்து விடுபடாமல்
காத்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அது என்னவோ கடிதங்கள் உயிருடன்
இருப்பதாகத் தோன்றும். இன்றும் சென்னையில் என் கட்டிலுக்கு அடியில் பச்சை டிரங்க் பெட்டியில் அம்மாவின் அன்றாடக் குறிப்புகள்
இருக்கின்றன. என் அப்பா சுமி கல்யாணத்துக்குப்
போட்ட ஜாபிதா, செலவுகள் வகையறா, சத்திர அட்வான்ஸ்
எல்லாம் இருக்கின்றன.
இந்தக் கடிதங்களுக்கு 56 வயதுகள் ஆகின்றன.
காகித மகிமையா இல்லை பெற்றோர் நம்மை விட்டுப்
போகவில்லை என்ற நினைப்பா
தெரியவில்லை.
பத்திரமாகத் துணிப்பையில் சுற்றி
ப்ளாஸ்டிக் பையில் வைத்திருக்கிறேன்.
மிக மிக நன்றிமா.
அம்மாவின் எழுத்து கடைசி வரை மாறவில்லை.
மனத்திடம் அப்படி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நமக்கு வேண்டிய அன்பை எல்லோரும் பொழிந்து கொண்டே இருந்தார்கள்.
அனத விஷயத்தில் என் குடும்பத்தார்
குறை வைத்ததே இல்லை.
எனக்குக் கடிதங்களை வெளியே போட மனதானதே இல்லை.

இப்போது படிக்கும் போது சில சமயம் மனம் கனத்துவிடும்.
அப்போது மீண்டும் பைக்குள் வைத்துவிடுவேன்.
இந்த அன்பைப் பாராட்டியதற்கு மிக நன்றிமா.

கோமதி அரசு said...

பொக்கிஷ பகிர்வு.
கடிதங்களை படிக்கும் போது அன்பான உறவுகளை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
நானும் நிறைய கடிதங்கள் வைத்து இருந்தேன்.
எங்கள் வீட்டிலும் நீண்ட கொக்கியில் குத்தி வைத்த கடிதங்கள் ஜன்னலில் தொங்கும் .
அப்புறம் கொஞ்ச கடிதங்களை மட்டும் வைத்து கொண்டு கிழித்து போட்டு விட்டார்கள். அதை நினைத்து மிகவும் வருந்தி இருக்கிறேன்.
வீட்டை அடைத்துக் கொண்டு எத்தனை பொருட்கள் இருக்கிறது. அத்தனை கடிதங்களையும் சேமிக்காமல் போய் விட்டோம் என்று நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன்.

அம்மா கடிதம், அப்பா கடிதம் தோழிகள், உடன்பிறப்புகள் உறவுகள் என்று நிறைய கடிதம் இன்னும் இருக்கிறது வீட்டில்.

அருமையான அன்பான உறவுகளை நினைக்க வைத்த பதிவு.

கரந்தை ஜெயக்குமார் said...

கடிதம் ஒவ்வொன்றும் பொக்கிசம்

நெல்லைத் தமிழன் said...

நெகிழ்ச்சி

இத்தனை கடிதங்களையும் பொத்திப் பொத்திப் பாதுகாத்திருக்கிறீர்களே

ஆச்சர்யம்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
இறைவன் வைத்த கருணையே நம் குடும்பங்கள்.

அதனால் தான் அவர்களை எப்போதும் நினைக்க வைக்கிறது.
பாட்டி கடிதங்களை ஆணியில் வைப்பார்.
எனக்கு மனசாகாது.
திருமணத்துக்கு முன்பு வந்த கடிதங்கள் எல்லாம்
சென்னையில் இருக்கின்றன.
எல்லாம் பத்திரமாக இருக்க வேண்டுமே
என்ற நினைவு என்னை அரிக்கிறது.:(

என் தோழிகள் யார் யாருக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை.
அவர்களுக்கும் ஏதோ ஒரு மூலையில் நான் இருப்பேன் என்றே நினைக்கிறேன்.
எல்லோரும் நலமாக இருக்கட்டும். உங்கள் கடிதங்களை மீண்டும் அங்கே
போகும்போது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நலம் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

அன்பின் உருவங்களாக அவர்களுக்குப் பதிலாக
இந்தக் கடிதங்கள் என்னுடன்.
அதுவும் தம்பிகள் என்னிடம் மிகவும்
அருமையாக அவர்களது
நலன், ஆர்வம், சங்கடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்போது பெற்றோராக, உறவாக இந்தக் கடிதங்கள்.
நீங்கள் எல்லோரும் என் உறவுகளே.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
மிக மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

Angel said...

வல்லிம்மா!!! எத்தனை பொக்கிஷங்கள் !! வாவ் எனக்கு மிகவும் கவர்ந்தது உங்க அம்மாவின்  முத்து எழுத்து .நானும் நிறைய பொக்கிஷங்கள் வைத்திருக்கிறேன் அப்பா அம்மா எழுதிய கடிதங்கள் ,வாழ்த்து மடல்கள் ,சமையல் குறிப்பு இப்படி நிறைய இருக்கு .

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஏஞ்சல்.

நான் அனுப்பும் கடிதங்களுக்குத் தோழிகளும் அலுக்காமல்
பதில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
விஷயமே இல்லாமல் ஐந்து பக்கங்களை நிரப்பி வந்து கொண்டிருந்த
கவர்கள் எத்தனையோ. அவை எல்லாம்
சென்னையில்.இறைவன் காக்க வேண்டும்.

நீங்களும் பொக்கிஷங்களைக் காத்து வருவதில் மகிழ்ச்சி.பத்திரமாக
வைத்திருங்கள்.
நம் வலைப்பூக்களைப்
போல அதைவிட உன்னதமான இள வயது எண்ணங்கள்.
பெற்றோரின் அமுதமான அன்பு
எல்லாம் இவற்றில் ஒளிந்திருக்கின்றன.
நிரம்பி வழிகின்றன. இந்த இன்னொசென்ஸ்
நம் வசந்த நாட்களுக்கு உரியது.
நலமுடன் இருங்கள் அம்மா.