Saturday, October 13, 2012

கைவிடப்பட்டவை----1(பிட் போட்டி)

மணல் அடைக்கலம் தந்த  வேண்டாத  குப்பை.
ஆளில்லாத வீட்டுக்குக் குப்பைகள் அடையாளம்
சுனாமிக்குப் பிறகு
அதே வீட்டின் துருப்பிடித்த வாயில் கதவு.
முன்னாள் வக்கீல் ஒருவரின் வீட்டுக் காம்பவுண்டு சுவர்
இன்னுமொரு கடற்கரை வீடு


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில படங்கள் மனதை பாதித்தது...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துகள் வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.இன்னும் சிலபடங்கள் இருக்கின்றன:)

ராமலக்ஷ்மி said...

அருமை. மேலும் தொடரக் காத்திருக்கிறோம்.

துளசி கோபால் said...

ஆஹா..........

திவாண்ணா said...

:-)

ஸ்ரீராம். said...

இவ்வளவு படங்கள் வரிசை கட்டினால் எதை செலெக்ட் செய்து அனுப்புவீர்கள்? அல்லது இதில் எதை அனுப்பியிருக்கிறீர்கள்? :))

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் வெறுமையை கைவிடபட்டதை நிதர்சனமாய் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் அக்கா.

மதுமிதா said...

மனதை பாதித்தன சில படங்கள் வல்லிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

தொடருங்கள்.. மேலும் படங்களை ரசிக்கக் காத்திருக்கோம்.

மாதேவி said...

கைவிடப் பட்டவை அரிய படங்களாக இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். காற்றுக்காகக் கடற்ஜ்கரைக்குப் போனோம். கண்ணில் பட்டதைக் க்ளிக்கினேன் மா.
அவலம் தான் நிறையக் கண்ணில் பட்டது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். படத்தை அனுப்ப வேண்டுமான்னு யோசனை வந்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,மீதி இருக்கும் படங்கள் சந்தோஷம் தரக்கூடியவை அல்ல.
இரண்டு மனம். போடலாமா வேண்டாமா என்று.:(

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா துளசி. கடற்கரையிலிருந்து வெளிவரும் வழியைப் பட்டினப் பாக்கம் வழியாக,மீனவர் குடியிருப்பத் தாண்டி வந்தோம். படகோட்டி படமே குப்பைமேட்டில் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிக் காட்சிகள்.
மீனு மீனுன்னு ராதாவின் குரல் காதில் ஒலித்தது!

வல்லிசிம்ஹன் said...

இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம். தம்ப் வாசுதேவன்.? பயமா இருக்கே.

வல்லிசிம்ஹன் said...

அனுப்பாமல் கூட இருக்கலாம் ஸ்ரீராம்.கடலையே வெறித்தபடி ஒரு வயதான அம்மா உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களையும் எடுத்தேன். குச்சி குச்சியா கையும் காலும்.கொஞ்ச நேரத்தில் வேர்க்கக்கடலை விற்கும் பெண் ''ஆயா இந்தா ,இப்ப சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போ. சமைச்சு வச்சிருக்கேன் என்றதும் முழித்துக் கொண்டேன். இது கைவிடப்பட்ட பாட்டியில்லை என்று.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. வெறிச்சோடியும் இருக்கு. பரப்பான வாழ்க்கை இந்தக் கட்டிடங்களைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது.வாழ்வின் இரண்டு பக்கம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா மது.ஆனால் பக்கத்திலேயே நல்ல கட்டிடங்களும் வந்திருக்கின்றன.
அதை வாடகைக்கு விட்டு விட்டார்களாம். ரேஷன் கார்டில் இந்த அட்ரஸ் இருப்பதால் எதிராப்பில குடிசை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
நம்பறதா இல்லையான்னு தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.
நீங்களே சொன்னால் நன்றாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், மாதேவி.உண்மையாகவே
கைவிடப்பட்டவை.

ADHI VENKAT said...

எல்லாமே நல்லாயிருக்கும்மா. கைவிடப்பட்டவை என்ற தலைப்புக்கு ஏற்றது.