Thursday, March 26, 2026

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன்

திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன்னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு

எப்பொழுதும்
 எங்களோடு நீ இரு.
 ராமன் மீண்டும் வருகிறான். மார்ச் 27 ஆம் நாள், பங்குனி 13 ஆம் நாள்...
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)
-


No comments:

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...