Thursday, March 26, 2026

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன்

திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன்னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு

எப்பொழுதும்
 எங்களோடு நீ இரு.
 ராமன் மீண்டும் வருகிறான். மார்ச் 27 ஆம் நாள், பங்குனி 13 ஆம் நாள்...
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)
-


6 comments:

ஸ்ரீராம். said...

"ஓ ராமா நீ நாம மேமி ருசிரா..." நான் மதுரை சோமு பாடியும்,  எஸ் பி பி பாடியும் கேட்டிருக்கிறேன்.  அருமையான பாடல்.  ஸ்ரீ ராமநவமி பதிவு  அருமை. 
 
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்...   ஸ்ரீராம ஜெயம்.

வல்லிசிம்ஹன் said...


அன்பின் ஸ்ரீராம், ராம கதையிலும் நாம சங்கீர்த்தனத்திலும்
நேற்று இனிமையாகக் கடந்தோம். என்றும் இந்த பக்தி நிலைக்க வேண்டும்.
நன்றி மா. ஜெய் ஸ்ரீராம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. தங்களுக்கு ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள். பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். நேற்று உடனே வர இயலவில்லை.

ஸ்ரீ ராமரை அவர் நாமம் சொல்லி வணங்குவதுதான் எத்தனை பேரின்பம். ராமா, ராமா என்றால் கல்லும் கசிந்துருகுமே..!

/பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே
இருக்கும் ராமனையே
துதிக்கிறேன்/

அழகாக சொல்லியுள்ளீர்கள். ராமா என்றால் வரும் மனதின் ஆனந்தத்திற்கு ஈடு இணையவில்லை. உள்ளத்தில் அவனை வைத்து நாள்தோறும் வணங்குவோம். ஸ்ரீ ராமா, ஜெயராமா ஜெயஜெய ராமா🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாஹரிஹரன்,
உங்கள் அன்பு பின்னூட்டம் மிக இதம்.
இங்கும் ஸ்ரீராம நவமிக் கொண்டாட்டங்கள்
அருமையாக நடந்தேறின.
ராம நாமத்தின் பெருமைதான் நம்மை நடத்திக் காப்பாற்றுகின்றது.

''தாமதமாக வந்துள்ளேன்"// என்னம்மா இப்படி சொல்கிறீர்கள்.
உங்கள் அன்பின் அருமையை நான் மிகவே உணர்ந்திருக்கேன்.
அதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு எழுத ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் வந்ததே எனக்குப் பெருமை.

அண்மையில் உடல் நலம் இல்லாமால் பல நாட்கள்
வருந்தினேன்.
அப்போதெல்லாம் துணை இருந்தது ராம நாமம் தான்.

ராம நாமம் சொல்லி உய்வோம்.வாழ்க வளமுடன்.

Bhanumathy Venkateswaran said...

மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் பாடலையும் பகிர்ந்திருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு பானு. செய்திருக்கலாம்:)

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...