எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
மே 17 ஆம் நாள் எனக்கு வாழ்வு கொடுத்த தம்பதியருக்கு மணநாள்
முதலில் வருவது என் பெற்றோர்.
14 வயது ஜெயலட்சுமியும் 22 வயது நாராயணனும் மனமுவந்து தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட நாள்.
53 வருடங்கள் ஒரு பரபரப்பிலாத நீரோடை போன்ற தெளிவான வாழ்க்கையை வா ழ்ந்துவிட்டு ,தந்தை மறையத் தாய் எங்களுக்காக இருந்தாள் .2005இல் அதே அமைதியுடன் மறைந்தாள். உலகத்தின் கருணையே உருவம் எடுத்த வந்தது போலத் தெளிவான நினைப்புகளுடன், தீர்க்கமான அறிவுடன் இருவரும் ஆன்மீக பலத்தை எங்களுக்குக் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள்.
அவர்கள் என்றும் இணைந்திருக்க இறைவன் அருள் புரிவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் பெற்றொருக்கு நமஸ்காரங்கள்.
##############################################################

10 comments:
நெகிழ வைக்கும் நினைவு.
இத்த்னை வருஷத்துக்கப்புறமும் இப்படி நினைக்கிற உங்களைத் தான் பாராட்டணும்.
22 வயது, 14 வயது!
எங்கள் நமஸ்காரங்களும்.
வணக்கங்கள்...
Our humble prostrations to your parents.
எங்கள் வணக்கங்களும். நெகிழ்வான பகிர்வு.
Header படம் அருமை.
அன்பு துரை., எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.
அவ்வளவு கடன் பட்டிறேக்கிறேன் அவர்களிடம்.
ஆமாம்.. ஸ்ரீராம்..உங்களுக்கும் தாத்தா பாட்டிதான்.
நன்றி தனபாலன். உங்கள் பதிவுக்கு வரவில்லை மன்னிக்கணும்.
வரணும் கீதாமா. அம்மா அப்பாவின் ஆசிகளும் உங்களுக்கு வந்திருக்கும்.
அன்பு ராமலக்ஷ்மி,
பெற்றோர் விஷயத்தில் நம் உணர்ச்சிகள் மாறுவதே இல்லை.
Post a Comment