Blog Archive

Monday, September 23, 2019

எதிர்பாராமல் நடந்தது 7

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   வளமாக  வாழ வேண்டும் .

எதிர்பாராமல் நடந்தது  7






மாலாவும்  கோகிலாவும் உள்ளே அறைக்குள்  
ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சின்னவள் மாமி,அம்மாக்களுக்கு  உதவி செய்து கொண்டிருந்தாள் தொந்தரவு இல்லை.
மாலா உனக்கு மாதவனைப் பிடித்து இருக்கு தானே. ஒரே கண்ஜாடையும் ,புன்னகையும் அந்த வராந்தாவே ஜகஜ்ஜோதியாக 
இருந்ததே."

" ம்ம்ம்ம். இருக்கும் இருக்கும்.  இந்த  மாதிரி கலகலப்பில்லாத பசங்களோட நமக்கு 

ஒத்துவராதுமா என்றவளைப் பார்த்து கோகிலா அவர் உடன் வந்த பிரசாத்  நல்ல ஜோக் சொல்கிறார்.

இல்ல?
ஓஹோ அப்படிப் போகிறதா கதை.
 அத்தை ஏ!!!!!!! இவளுக்கு   ராஜேந்திரகுமாரின் எப்படியடி காதலிப்பது வேணுமாம்."

என்னடி சொல்ற. இங்க வந்து பேசு  என்று வந்தது அம்மாவின் குரல்.
மாலாவின் குரல் வெராந்தாவுக்குப் போய் விட்டது.
அந்த இளைஞர்கள் சிரித்து விட்டார்கள்.

கோகிலா பதிலுக்கு  " காதலித்தால் போதுமா.... படிச்சியான்னு கேட்டாள் 
அதுக்குப் பதில் சொன்னேன்  மா.'"

பொன்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
உள்ளே வந்து இலைகள் போட்டுத் தண்ணீர் எடுத்து வையுங்கள். கெக்கே பிக்கேன்னு என்ன சிரிப்பு 
என்றதும்  இருவரும்  உள்ளே சென்றனர்.

பலாப்பழம், சிறுமலைப் பழம், மாம்பழம் என்று கலவையாக ஒரு பெரிய பாத்திரத்தில் [பிட்டு மில்க்மெய்ட்  டின்னிலிருந்து அவற்றில் கலக்க சொன்னால்.
அமைதியாக இருவரும் சொன்ன வேலையைச் செய்தார்கள்.

மோர்க்குழம்பும் , உருளைக்கிழங்கு பொடிமாஸும், வாழைக்காய் வறுவலும் 

தக்காளி ரசமும் பிரமாதமாக அமைய,

உள்ளே பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய மாதவன் கண்களில் மாலா பட்டு மறைந்தாள்.

சென்னையில் அம்மா அப்பாவுடன் மழை, சாலைகளின் ரிப்பர் என்றதும், அவர்கள்  தாமதமாக வந்தால் பரவாயில்லை. பத்திரமாக இரு என்று  சொல்லிவிட்டு 
பொன்னாவுடன் பேச ஆசைப் பட்டார்கள்.

பொன்னாவும் வந்தால். என்ன அண்ணா ,மாது பத்திரமா இருக்கான். நான்தான் அவனை இங்கே சாப்பிடச் சொன்னேன்.
அவன் விடுதிக்குப் போகும் வழி எல்லாம் வழுக்குகிறதாம். பால்காரர் சொன்னார்.
 எப்படியாவது இரண்டு நாட்களில்  வந்து விடுவான்.
கவலைப் படாதே என்றாள் .

சரிம்மா நீங்க எல்லோருமே வெளியில் செல்லாமல் பத்திரமாக இருங்கள். நான் ,அம்மா நாளை பேசுகிறோம் என்று வைத்து விட்டார்.


பசங்களா  சாப்பிட வாருங்கோ என்றதும் உள்ளே வந்தவர்கள் கைகால்களைக் கழுவிக்கொண்டு , ,அத்தை,மாமி நீங்கள் உட்காருங்கள் நாங்கள் பரிமாறுகிறோம் என்றார்கள்.

அதெல்லாம் வேண்டாம்டா. உனக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா என்றாள் 
 பொன்னா . ம்ம். பாட்டியும் நானும் செய்வோம் என்றதும் சரி அப்படியே செய்யுங்கள், மாலா கோகிலா 
அந்தப் பசங்களுக்கு எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னபடி வரதனின் 
தங்கைகளும் ,  பொன்னாவும் , மாதுவின் இரண்டு தோழர்களும் தரையில் அமர்ந்தனர்.

பிரசாத் எதோ   பாடலை முணுமுணுத்தபடி   பழக்கலவையை ஒவ்வொருவர் இலையிலும் அளவாகப் பரிமாற 

பொன்னா   'சத்தமா  தான் பாடேன் .நாங்களும் கேட்கிறோம்."


கொஞ்சம் தயங்கினான் வீரன் 😄😄😄 பிரசாத்.
நாங்க ஒன்னும் நினைக்க மாட்டோம் ,நீங்க பாடலாம்..என்று உத்தரவு போட்டாள்  கோகிலா 




அசந்து போய் விட்டார்கள் பெண்கள்.
ம்ம் . நல்ல சாய்ஸ் கோகி  என்று காதில் சொன்னாள்  மாலா.

மோர்க்குழம்பு, பொடேடோ  யாருக்கு வேணும். என்ற படி வந்த மாதுவை நீயும்   பா டலாமே என்றாள்  மாலா.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று  சிரித்தபடி  தயிர் கொண்டு வைத்துவிட்டு,
என்ன நாம் உட்காரலாமா என்று கேட்டான்.

அனைவரும்  சாப்பிட்டு முடித்து வானொலி  கேட்க உட்கார்ந்தார்கள்.

மாது விடுதிக்கு   ஃ போன் 
செய்து  ஆசிரியரிடம் பேசினான்.  மழை நின்றவுடன்  ஜாக்கிரதையாக வரச்  சொன்னார்.
அடுத்த நாள்    பகலில் சாலைகள் சரியாகிவிடும். நாம் கிளம்பலாம். இரவு ரயிலில் 
மதராஸ் கிளம்பலாம் என்றார்.

ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு   ஓய்வாக அமர்ந்தார்கள்.
பெரியவர்கள் ஓய்வெடுக்க  ,பெண்களும்  இளைஞர்களும் சினிமா புத்தகங்கள் என்று பேசிக்கொண்டிருக்க மாலையும் வந்தது.



22 comments:

துரை செல்வராஜூ said...

தெளிவாகச்செல்கின்றது கதை..

கூடுதல் இணைப்பாக அருமையான பாடல்கள்..

வாழ்க நலம்...

ஸ்ரீராம். said...

காதலிக்க நேரமில்லை பாட்டு...   அதிலேயே காதலித்தால் போதுமா கதை பற்றிய நினைவுகளைக் கிளப்பி விட்ட வரிகள்...  மணியனும் மாயாவும்!  

ஸ்ரீராம். said...

சத்தமில்லாமல் நடுவில் ஒரு சமையல்குறிப்பு..    பழங்களை அரிந்து போட்டு மில்க் மெயிட் போட்டு என்று...    இப்படிச் செய்து பார்த்ததில்லை இதுவரை!  மில்க் மெயிடை இப்படிக்கு கூட உபயோகப்படுத்தலாமா?

ஸ்ரீராம். said...

ஆசிரியர்களின் தொலைபேசி எண்களை அறிந்து வைத்திருந்தது(ம்) ஆச்சர்யம்..    அந்த நாள் இனிமையாகவே கழிந்திருக்கிறது...
 
இளமைக்காலங்கள்.

மாதேவி said...

கதையும் நல்ல பாடல்களும் இணை சேர்கின்றன.

கோமதி அரசு said...

கதை அருமையாக போகிறது.
பாடல்கள் இனிமை.
பெண் படத்தில் அஞ்சலிதேவி, வைஜெயந்தி மாலா தோழிகள் நினைவுக்கு வருகிறார்கள், ஜெமினி, வீணை பாலசந்தர் நினைவுக்கு வருகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
கதையை ரசித்ததற்கு மிகவும் நன்றி. அடுத்த பாகமும் இதே வேகத்தில் செல்ல
முயற்சிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம். மணியன்
கதைகளின் போக்கையே மாற்றி புரட்சி செய்ய ஆரம்பித்தார். சூடு பிடித்தது
காதல் கதைகளின் களம்.
ராஜேந்திர குமாரும் அவர் பங்குக்கு வெண்ணிலா,எப்படியடி காதலிப்பது
ஞே ...........எல்லாம் ஆரம்பித்தார்.ஜெயராஜின் ஓவியங்கள் அவருக்கு.
நன்றி மா. நுணுக்கமாகக் கவனித்துச் சொன்னதற்கு.

KILLERGEE Devakottai said...

பொருத்தமான ஸூப்பர் பாடல்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அப்பொழுது தொலைபேசிகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த காலம்.
விடுதிகளுக்கும் வீடுகளுக்கும் விரைவாக இணைப்புகள் கிடைத்தன.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இயக்குபவர்கள் கண்ணியத்துடன் வேலை செய்தார்கள்.
புக்ககத்தில் இரண்டு மணி நேரம் டெலிபோனில் பேசி சாதனை புரிந்தவர்கள் எல்லாம் உண்டு:)
மாணவப் பருவத்தில் இது எல்லாம் புதுமை.மாதவனுக்குப் பழகிப் போன சமாசாரம்.

வல்லிசிம்ஹன் said...

Sriram,நான் முதலில் கற்றுக் கொண்டதே இந்த மில்க் மெயிட் உபயோகிப்பதைத்தான்.

பழங்களுடன் மில்க்மெயிட் சேர்த்தால் தனி சுவைதான்.
கஸ்டர்ட் போல் வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, தொடந்து ரசித்துக் கருத்து சொல்வதற்கு மிக நன்றி.

Thenammai Lakshmanan said...

பாடல்களோடு ஒரு தொடர்கதை அருமை வல்லிம்மா :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மா,

நலமா ராஜா. உங்களுக்குத் தான் தெரியுமே.

எனக்கும் இசைக்கும் உண்டான கனெக்ஷன்.
அதுதான் பாடல்களோட கதை.நன்றி ராஜா.

Geetha Sambasivam said...

அருமையான தொடர். நன்றாகப் போகிறது. பெண்கள் இருவரும் அவரவர்க்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார்கள். இனி எப்படினு பார்க்கணும். காதலிக்க நேரமில்லை படமும், பாடல்களும் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.

Geetha Sambasivam said...

காதலித்தால் போதுமா ஆனந்த விகடனில் வெளிவந்த காலம் பள்ளி மாணவி. ஏழாம் வகுப்புனு நினைக்கிறேன். காலையிலேயே விகடனில் படிச்சுட்டு சிநேகிதிகள் மத்தியான வேளையில் அதைப் பற்றிச் சொல்லுவார்கள். எப்போடா வீட்டுக்குப் போய்ப் படிப்போம்னு இருக்கும்.விகடனில் அப்போது மணியன் தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். ஆனால் சாவியும் பிரபலம் ஆனது அந்தக் கால கட்டத்தில் தான்.

Geetha Sambasivam said...

பாலைக்குறுக்கிக் கொண்டு அதில் கஸ்டர்ட் கலந்து வெண்ணெய் சேர்த்துக் கிளறிப் பழங்களோடு சேர்த்துப் பண்ணுவேன். முன்னெல்லாம் அடிக்கடி பண்ணிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பழங்கள் எடுத்துக்கொள்வதே அரிதாகி விட்டது. ஆப்பிள் ஒரு துண்டை வாயில் போட்டதுமே இருமல் வந்து ஒரு வழி பண்ணி விடும்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.
இனிய காலை வணக்கம்.

வல்லிசிம்ஹன் said...

கீதா மா, நானும் பள்ளியில் எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன்.
அப்பா ,அம்மா மறுப்பு சொன்னதில்லை. காஸ்டாற்ட் ,ப்ரௌன் அண்ட் பால்சன்
பாக்கெட் வாங்கி செய்தது நினைவுக்கு வருகிறது.

பிறகு ஒழுங்கு முறையாகக் கற்றுக் கொன்டேன்.

நாளை ஸ்விஸ் விசாவுக்குப் போக இன்றைய ஏற்பாடுகள் இப்போதுதான் முடிந்தன.

நேரமாகிவிட்டது.
பாடல்கள் இல்லாமல் கதை எழுதுவதில்லை என்று
தீர்மானமாக இருக்கிறேன்:)))))
உங்களுக்கும் பிடித்தது சிறப்பு.
ஆமாம் பெண்கள் முடிவு செய்து விட்டார்கள்.
பெரியவர்களும் அவர்கள் பக்கம் வந்தால் நன்றாக
இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

நன்றாகச் செல்கிறது இத்தொடர்....

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி வெங்கட்.இனிய காலை வணக்கம்.