மீண்டும்மீண்டும்
பார்த்து வியக்கும் நடிப்பு.
இத்தனை ஆளுமை ஒரு பெண்ணிற்கு
அமைந்திருந்தது
என்னை மிகவும் கவர்ந்தது.
அதுவும் அவரது குரலினிமை அவர் நடித்த படங்கள்
அத்தனையிலும் வரும் பாடல்களில்
சிறப்பாக இருக்கும். தாய்க்குப் பின் தாரம்,
மக்களைப் பெற்ற மகராசி,
சாரங்கதாரா,அன்னை,பத்து மாத பந்தம்,
மணமகன் தேவை, அறிவாளி இவை எல்லாம்
சட்டென்று மனதுக்கு வந்தவை.
நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்த இவர் போன்ற
நடிக நடிகையருக்கு நன்றி.
புரட்சித் தலைவர், சிவாஜி போன்ற
மகா நடிகர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்தியதுதான்
என்னைக் கவர்ந்தது.
எதற்காகவும் யாரிடமும் தன் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத
மனுஷி.
22 comments:
ஆம், பானுமதி அம்மா பற்றி நானும் படித்திருக்கிறேன். மகா திறமைசாலி. சில பாடல்களுக்கு இசை அமைப்பாளர் போட்டிருக்கும் மெட்டு சரி இல்லை என்று சொல்லி தானே மாற்றி இசை அமைத்துப் பாடி இருக்கிறாராம்.
அன்பு ஸ்ரீராம். இனிய காலை வணக்கம்.
நிறைய செய்திகள் கிடைத்தன
பானுமதி அம்மாவைப் பற்றி.
எழுத தான் தெம்பில்லை. படிக்கவும் பார்க்கவும்
பிடித்திருந்தது.
இந்த நாள் இனிய நாளாகட்டும் அம்மா.
Bhanumathi was an exceptional talent. இனி இப்படியெல்லாம் பாடி, நடிக்கும் கலைஞர்களைத் தமிழ்த் திரை காணுமா? அப்படியே யாராவது வாயைத் திறந்தாலும் அது கேட்க சகிக்குமா!
மாசிலா உண்மைக் காதலே.. பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் -
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா..
எனப் பாடுகையில் அவரது முகபாவங்கள், நடிப்புக்காக அந்த வீடியோவை பாட்டைக் கேட்டுக்கொண்டே ‘பார்ப்பதும்’ என் வழக்கம்!
எனக்கு பிடித்த நடிகை. நிறைய திறமைகள் உள்ளவர்.
அவர் பாடிய எல்லா பாடல்களும் பிடிக்கும்.
பகிர்ந்த அன்னை காணொளிகள் அருமை.அந்த படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த படம்.
பகிர்வுக்கு நன்றி அக்கா.
பானுமதி அம்மா குரலில், பாடல்கள் அனைத்துமே இனிமையாக இருக்கும்...
மிகவும் தைரியசாலி...
நடிகை பானுமதி அவர்கள் பல திறமை வாய்ந்தவர்கள் என்று கேட்டுள்ளேன். பாடியும் நடித்திருக்கிறார்களே.
துளசிதரன்
வல்லிம்மா நடிகை பானுமதி அவங்க செம டேலெண்டட். பன்முகத் திறமையாளர். என்ன ஒரு முகபாவம் இல்லையா. வீடியோ ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்
கீதா
பானுமதி மிகவும் அனாயாசமாக நடிப்பார். அறிவாளி படத்தை என் குழந்தைகள் பார்த்து விட்டு,"யாருமா? இந்த ஆக்ட்ரெஸ்? இவ்வளவு நன்றாக நடிக்கிறா?" என்று வியந்தது நினைவுக்கு வருகிறது. ஆணாதிக்கம் நிறைந்த திரை உலகில் துணிச்சலாக இருந்த ஒரு பெண். எம்.ஜி.ஆர். படங்களில் கூட அவருக்கு நேரும் பிரச்சனைகளை அவரே சால்வ் செய்து கொண்டு விடுவார்.
நடிகை பானுமதி - அந்த மாதிரி ஆளுமைகளை திரையுலகம் எங்கே இனி காணும்?
சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரை பெயர் சொல்லி அழைக்கும் தைரியம், பலவித திறமைகள்...போலி கெளரவமில்லாமை..
அவங்க திரையிலும் தைரியம் உள்ளவர்களாக நடிக்கும்போது அது மிளிரும்.
வணக்கம் சகோதரி
நடிகை பானுமதி அவர்களின் தைரியத்தைப்பற்றி ஒரளவு பத்திரிக்கைகளின் வாயிலாக கேள்விப் பட்டுள்ளேன். அவர்கள் நடிப்பிலும் அந்த தைரியந்தான் மிளிரும். பன்முக வித்தகி. சகல கலா வல்லி போன்ற பட்டங்கள் அவருக்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருப்பவை. சிறந்த எழுத்தாளியும் கூட... அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப் பற்றி நீங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு ஏகாந்தன் சார்,
உண்மைதான் அந்த அற்புத அபிநயம், கண்ணில் தெரியும் நாணம், அந்தப் புன்முறுவல் எல்லாமே
மனதை நிறைக்கும்.
எனக்ககா சவால் விடுகிறாய் என்ற முகபாவம்! அறிவாளி படத்தில் நாம் பார்த்த பெண்தான் பானுமதி அம்மாவோ என்று தோன்றும்.
ஒரு பஞ்சகல்யாணிக் குதிரையைப் பார்க்கும் உற்சாகம் அவரைப் பார்ததால் ,கேட்டால் நினைவுக்கு வரும்.
அநேகமாக எல்லோருக்குமே அவரைப் பிடித்திருக்கிறது.
நீங்கள் வந்து படித்ததே மகிழ்ச்சி.
அன்பு கோமதிமா.
அருமையான பன்முகத்திறமை கொண்ட நடிகை! அவரின் குரல் இனிமை தனி அழகு. நல்ல இசை ஞானம்.
தன் பாத்திரத்தை உணரந்து. திறமையோடு நடிக்க அவரை மிஞ்சி. யாரும் இல்லை.
அவரின் தன் வாழ்விலோ, திரை வாழ்விலோ ஒரு களங்கம் கூட சொல்ல முடியாத அளவு வாழ்ந்தார்.
மிகப் பெருமையாக இருக்கிறது. மயங்காத மனம் யாவும் மயங்கும் “ பாடல்
எனக்கு மிகப் பிடிக்கும். மிக நன்றி மா.
அன்பு தனபாலன்,
உண்மை தான் மா. பெரிய நடிகர்களிடமே மறுத்துப் பேச அவருக்கு தைரியம் இருந்தது.
நாடோடு மன்னன் படத்தில் அது போல நடந்ததாக்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.:)
அன்பு துளசிமா,
ஆமாம் பா.
மிக நல்ல சாமர்ததியசாலி. நல்ல பாடகி. தன் ஸ்டூடியோ வைத்தே நடத்தினார். நன்றி மா.
Vaentine de Kraven. வாலண்டைன் ஒரு ஸ்விஸ் பெண்மணி. மெய்ஞானி, சிந்தனையாளர் எனக் கருதப்பட்ட யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் சகா. இருந்தும் ஆன்மீக சிந்தனை அற்றவர். அதற்காக ‘நாஸ்திகர்’ என்கிற முத்திரை அவர்மீது விழுந்துவிடவில்லை. (தமிழ்நாட்டுப்பக்கம் வரவில்லை போலிருக்கிறது!) (யூ.ஜி. யாரென்று கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். மேலும் விபரங்களுக்கு சொல்வனத்தில் (solvanam.com) என் நீண்ட கட்டுரையை சௌகரியப்பட்டால் படிக்கவும்.)
இப்படி எங்கோ போய்விடுகிறேன்; திரும்பி வருகிறேன்: நான் சொல்லவந்தது யூ.ஜி.யைப்பற்றி அல்ல. நடிகை பானுமதியைப்பற்றித்தான்! வயதான காலத்தில், வாலண்டைன் பெங்களூரில், ஹைதராபாதில் யூ.ஜி.யோடு சில மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார் (70, 80-களில்). நம்மவர்களின் எளிமையான வாழ்க்கை, குழந்தைகளின் அப்பாவித்தனம் என மனது ஊஞ்சலாடியிருக்கிறது. அடிக்கடி தமிழ், தெலுங்கு படங்களை டிவி-யில் பார்த்திருக்கிறார். எப்போதாவது, அதுவும் மிகக் குறைவாக வார்த்தைகளில் தன்னை வெளிப்படுத்தியவர் வாலண்டைன். ஃப்ரான்ஸில் நாடகங்களில் நடித்திருக்கிறார். வசனகர்த்தா, ஓவியர் எனப் பன்முகம் உண்டு. கிட்டத்தட்டப் பேசாதவர். கவனிப்பவர் மட்டுமே (இப்படி ஒரு பெண்!). அப்படிப்பட்டவர் நடிகை பானுமதியைப்பற்றி அவர் படமொன்றில் ஆழ்ந்து அனுபவித்தபின் சொல்கிறார் இந்திய நண்பரிடம்: "She is brilliant ! Extremely talented.. இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததில்லை"
யூ.ஜி.-யைப் பற்றி நிறையப் புரட்டிக்கொண்டிருந்தபோது, அபூர்வமாக இந்தப்பெண்ணைப்பற்றி ஒருவர் சொன்னதும் கிடைத்தது. சும்மா பகிர நினைத்தேன். நீண்டுவிட்டது!
பானுமதி பிடித்த நடிகை. அதைவிடப் பிடித்த எழுத்தாளரும் கூட. அவரின் அத்தையம்மாவை மறக்க முடியுமா? சில காலங்கள் குமுதத்தில் தொடராகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்தது.
உண்மைதான் பானுமா.
உங்க பெயர்கொண்டவர் இல்லையா.
அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
அவருடைய ஒவ்வொரு நிலைப்பாடும் ஸ்திரமாக இருக்கும்.
நாடோடி மன்னனில் அவர் இறப்பது போல ஒரு சீன்
வருவதற்குக் காரணமே
மேற்கொண்டு அவர் நடிக்க மறுத்ததால் தான்.
ஹாட்ஸ் ஆஃப் டு தட் லேடி.
நன்றி பானுமா.
அன்பு முரளிமா,
ஆமாம் அவர் கொடுத்த பேட்டி ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.
மிஸ்டர் எம் ஜி ஆர், மிஸ்டர் சிவாஜி
என்றே அழைக்கிறார்.
துணிவுக்கு மறு பெயர்.
அத்தகாருன்னு தெலுங்கிலயும்,
அத்தையம்மான்னு தமிழ்லயும் எழுதி வந்தார்.
பல்கலை தெரிந்தவர்.
அன்பு கமலாமா,
நம் நாட்களில் பானுமதியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது.
எல்லாவிதங்களிலும் பரிமளித்த பண்புள்ள மனுஷி.
பாட்டும் ,எழுத்தும், நடிப்பும் ஆளுமைத்தன்மையும்
ஒருங்கே அமைவது அதிசயம் இல்லையா.
மிக மிக நன்றி அன்பு கமலாமா.
அன்பு ஏகாந்தன் சார்,
மீள் வருகைக்கு நன்றி.
யு ஜி கிருஷ்ணமூர்த்தி ஏதோ கொஞ்சம் தெரியும்:)
வாலண்டைன் தெரியாது.
அவரும் நம் பானுமதியை ரசித்திருக்கிறார் என்பது
அருமை பெருமை.நன்றி ஜி. சொல்வனம் சென்று
பார்க்கிறேன்.
குறைவாக வார்த்தைகளில் தன்னை வெளிப்படுத்தியவர் வாலண்டைன். ஃப்ரான்ஸில் நாடகங்களில் நடித்திருக்கிறார். வசனகர்த்தா, ஓவியர் எனப் பன்முகம் உண்டு. கிட்டத்தட்டப் பேசாதவர். கவனிப்பவர் மட்டுமே (இப்படி ஒரு பெண்!)நீங்கள் சொல்லாவிட்டால் தெரிந்திருக்காது ஜி. மிக நன்றி.
அன்பு கீதாமா,
நல்ல நடிகை, எழுத்தாளர் ,பாடகி
குடும்பத்தலைவி.
ஒரு அபூர்வப் பிறவி.
ஆமாம் அத்தையம்மா படித்திருக்கிறேன்.
ரொம்ப சுவையாக இருக்கும்.
ஜெயராஜ் ஓவியத்தோடு வந்த தொடர்.
Post a Comment