Blog Archive

Tuesday, January 07, 2020

திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை  22  அங்கண்மா ஞாலத்து 

மிக உன்னதமான அர்த்தங்கள் பொதிந்த இப்பாசுரத்தை,
திரு துஷ்யந்த் ஸ்ரீதர்  அவர்களின் அற்புத மொழியாக விளக்கமாகக் கேட்கும்படி  பிரார்த்திக்கிறேன்.


அங்கண் மா ஞாலத்து அரசர்* அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே*
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே**
செங்கண் சிறுச் சிறிதே, எம் மேல் விழியாவோ*
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்*
எங்கல் மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

9 comments:

Geetha Sambasivam said...

சமீப காலங்களில் பிரபலமாக ஆகிக் கொண்டிருக்கிறார் இவர். நான் அதிகம் கேட்டதில்லை. என்றாலும் இதை நாளைக்குக் கேட்கிறேன். கேட்காமல் எப்படிக் கருத்துச் சொல்லுவது!

ஸ்ரீராம். said...

சற்றே பெரிய காணொளி போல...    பிறகுதான் பார்க்க /கேட்க வேண்டும்.   நன்றி அம்மா.

துரை செல்வராஜூ said...

பணிவின் பெருமைக் குறிக்கும் திருப்பாசுரம்...

வள்ளுவர் சொல்லியிருக்கின்றாரே -
அடக்கம் அமரருள் உய்க்கும்.. என்று..

ஆண்டாள் திருவடிகள் போற்றி..

கோமதி அரசு said...

முப்பது நாட்களும், 30 பாசுரங்களை எப்படி எழுதினார் ஆண்டாள் என்று அழகாய் சொகிறார்.
ஆண்டாள் ஆயர்பாடியாக நினைத்து பாவை நோன்பு நோற்ற வரலாறு அருமை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதிரி என்று சொல்வது அருமை.

அருமையாக சொல்கிறார். மென்மையான குரல். ஜெயா தொலைக்காட்சியில் இவர் பேச்சை கேட்டு இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
நேர்மையின் குரல். இவர் கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்கிறார் என்று
வேறு யாரோ சொன்னதை நம்பிக் கேட்காமல் இருந்தேன்.
இப்போது தினமும் இருவர் உரையையும் கேட்கிறேன்.
நிறைய பொருளுரைகள். நல்லபடியாகப் பொழுது போகிறது.
நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.
ஸ்ரீராம். நேரம் நேற்று கிடைக்கவில்லை. பாவைப் பதிவு போடாமலும் இருக்க முடியவில்லை.
அதுதான் துஷ்யந்த் அவர்களைத் தூது அனுப்பி விட்டேன்.
நேரம் கிடைக்கும் போது கேட்கவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு துரை.
பணியும் போது கிடைக்கும் அருள் அதிகப் படும். தலையே நீ
வணங்காய்/ என்பதுதான் வேத மந்திரம்.
நீங்கள் உரையை.க் கேட்டதில் மகிழ்ச்சி மா.

துன்பம் நேரும்போதும், இன்பம் நேரும்போதும் இறைவனே துணை.உங்கள் மன அமைதிக்கு
என் பிரார்த்தனைகள்.
உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. இது 2015 இல்
நிகழ்த்திய உரை.

விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கும் போது எல்லோர் உரைகளையும் கேட்பேன். சிறு வயதுதான் இவருக்கு.
யாரையும் நோகாமல் கதை சொல்வது,
பெரிய கலை. மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மணி நேர காணொளியாக இருப்பதால், விடுமுறை நாளில் தான் பார்க்க வேண்டும்.

தொடரட்டும் பதிவுகள்.