Friday, August 21, 2009

கன சங்கடங்கள் விலக என்ன வழி?காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி பாடியதைப் பற்றி, மரத்தடி ஹரிஅண்ணா
என்று அன்போடு அழைக்கப் படும் ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் அவர்களின் ''நினைவில் நின்ற சுவைகள்'' புத்தகப் பக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது,
படிக்கும் போது தான் அனு ,
அதான் என் உடல் நிலை கண்டு கவலைப் பட்டு ,
கல்யாண சாப்பாட்டில் ஒரு நல்லதை ஒரு பாசந்தி கூட சாப்பிட விடாமல் செய்துவிட்டு
நான் உனக்குப் போன் செய்யறேன்னு பயமுறுத்திவிட்டு வேறு போயிருந்தாளே, அந்த அனு,
இப்ப இந்தப் புத்தகத்தை அனுபவிக்க முடியாமல் போன் செய்தாள்.:)
ஹேய் நான் சொல்றதைக் கேட்டியானால் நாலே மாசம், உன் எடை குறைந்துவிடும் , கேக்கிறியா என்று நிறுத்தினாள்.
நல்ல நாளிலியே எனக்குக் கேட்கும் சக்தி குறைவு:)
இப்ப வேற ஏகப்பட்ட மருந்து மாத்திரை, கொஞ்சம் சாப்பாட்டுக் குறைப்பு,
அப்போது 12 மணி மதிய சாப்பாட்டுக்குப் போகத்துடிக்கும் கால் களையும் கைகளையும் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனுஷி கிட்ட,
இப்படி ஒருத்தி அட்வைஸ் ஆரம்பித்தால் கோபம் வருமா வராதா!!!
எனக்கு வரவில்லை. 'ம்ம் சொல்லும்மா. என்றபடி கேட்க ஆரம்பித்தேன்.
புத்திமதி சொல்கிறவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருப்பதில்லை.
தனக்கு இருக்கும் அறிவில் பாதியாவது தன் வயதே ஆன தோழிக்கும் இருக்க வாய்ப்பு உண்டு என்ற உணர்வுதான் அது.
பள்ளிக்காலத்தில் கணக்குப் பாடத்தில் எப்போதும் எனக்கு அவளுக்கும் போட்டி. இறுதிப் பரிட்சையில் அவளுக்கே முதல் இடம். ஒரு பத்துமார்க் குறைவுதான் எனக்கு.
கவனமே போதாதுடி உனக்குனு அவள் சொல்லும்போது நானும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.
பரீட்சை ஹாலில் அளவுக்கு மேல பயத்தால் இருமுவது நானாகத்தான் இருக்கும்.
அவள் பேப்பருக்கு மேல் பேப்பர் கேட்க நான் தண்ணீர் கேட்பதற்குத்தான் அதிகம் எழுந்து நிற்பேன்.
ட்ரிக்னாமெட்ரி என்ற அரக்கன் என்னைக் கைவிட மதிப்பெண்களையும் கோட்டைவிட்டேன்.
அதை இன்னும் அவள் மறக்கவில்லை என்பது அவள் பேச்சிலிருந்து தெரிந்தது.:))
எப்பவுமே கடைசி நிமிடத்தில் நீ பின்வாங்கிவிடுவாய்.அந்த அக்ரெஸிவ் நோக்கம் உனக்கு வரவே இல்லையே இவளே.
நான் பாரு, இப்ப இந்த வேலையில் ஓய்வெடுத்த பின்னாலும் கன்சல்டண்டாக இருக்கிறேன்.
நீ கூடக் கவிதை எல்லாம் அப்போ எழுதின மாதிரி எனக்கு லேசா நினைவிருக்கிறது என்றாள்.
ஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று மிகச் சோகக் குரலில் பதில் சொன்னேன்.:)
சே, ரொம்ப வீணாகப் போச்சுப்பா உன் நேரமெல்லாம். எப்படியோ வந்திருக்கலாம் என்று அவள் ஆரம்பித்ததும் அவளை ட்ராக் மாத்த வெயிட் லாஸ் பத்திச் சொல்கிறேன் என்றாயே என்று நினைவு படுத்தினேன்.
ஏதாவது காய்கறி ரெசிப்பி, சர்க்கரை இல்லாத உணவுக் குறிப்புகள் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.
ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து
அழகைக் கட்டாயம் வரவழைக்கும், (சிறிது நாளில் தொலைந்து போய் விடும் )
ஒரு நிலையத்தைத் தனக்கு மிகத் தெரிந்த நண்பி நடத்துவதாகச் சொல்லி தள்ளுபடி விலையில் எனக்கு ஒரு டீல் வாங்கித்தருவதாகவும் சொன்னாள்.
நானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.
ஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.
பாதிப் பேச்சைக் கோட்டைவிட்ட நிலையில்,
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் சொன்ன எல்லாக் குறிப்புகளையும் பின்பற்றுவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.
இதனால் ஒரு நல்லது நடந்தது. என் தைராய்டு அளவு பரிசோதனைக்குப் போனபோது, வைத்தியரிடம் கேட்ட போது, அவர் எனது இந்தத் திடீர் எடை கூடுதலுக்கு விளக்கம் சொன்னார்.
தைராய்ட் அளவு க்கு அதிகமாக இருப்பதாகவும், இன்னும் வேறு உணவு முறை பின் பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.
ஒரு வகையில் ஆறுதல்.
ஏதோ பகாசுரி லெவலுக்கு நாம் போக வில்லை.
இதுவும் கடக்கும்னு சமாதானப் படுத்திக்கொண்டு என் கீரையையும் சப்பாத்தியையும் சாப்பிடப் போனேன்:)வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

19 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... இது வெறும் 'அனு' இல்லைப்பா.

அணுகுண்டா இருக்கு!

கவனமாக இருங்க.

சூஷிக்கணும் கேட்டோ....

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் கவனமா இருப்பேன். அதுக்கப்புறம் போன் இல்லை. நோ டைம் டு வேஸ்ட் வித் மி:))
வெரி பிஸி லேடி.

Vetrimagal said...

//நானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.
ஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.//

மாதம் 20000 மாத்திரமே ( 2 கிலோ கறைவதற்கு) . எதற்காக இந்த அலைச்சல்கள். அவ்வளவு பணம் எத்தனை குழந்தைகளை படிக்க வைக்கும!

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம் சில நேரங்களில் சிலமனிதர்கள். உங்க நண்பியைச் சொன்னேன், நல்லாப் பிடிச்சீங்க போங்க! :)))))))))


வெள்ளை ஃபாண்டில் வர எழுத்து இந்த லைட் ஆலிவ் க்ரீன் பாக் கிரவுண்டில் படிக்கவே முடியலை! கண்ணாடி போட்டும்! கொஞ்சம் மாத்தக் கூடாதா? :(((((( ஒரு நிமிஷத்தில் படிக்கவேண்டியது இரண்டு நிமிஷத்துக்கு மேல் ஆகிறதே???

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.. படிக்கவே முடியல ரொம்ப கஷ்டமாகிப் போச்சு..

உடம்பையும் கவனிங்க.. இந்த ஃபாண்ட்டையும் கவனிங்க.. :)

வல்லிசிம்ஹன் said...

சாரிமா கீதா. எனக்கு இந்த ஃபாண்ட் மாற்றத் தெரியவில்லை.:(

கொஞ்சம் யோசித்துச் செய்யறேன்.
ஏனெனிலென்னோடது பழைய ப்லாகர் அக்கண்ட். டெம்ப்ளேட் மாற்றீனா ,மீண்டும் தமிழ்மணப்பட்டையை இணைக்கறத்துக்குள்ள தாவு தீர்ந்து போய் விடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அக்கௌண்ட்!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா வெற்றிமகள்,
நீங்க சொல்வது சரிதான்.

ரொம்ப விலை கொடுத்து, செயற்கையாக இளைத்துவிட்டுப் பிறகு மீண்டும் இரண்டு கிலோ சம்பாதிப்பதற்குப் பதிலாக வேறு எத்தனையோ நல்ல வேலைகள் செய்யலாம்.
நன்றிமா.

கீதா சாம்பசிவம் said...

அதோட நீங்க குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உடல் இளைக்கச் சென்ற ஒரு பெண்மணி பக்கவிளைவுகளால் ரொம்பவே பாதிக்கப் பட்டு எழுதி இருந்தார். உங்க உடல் நலம் இருக்கிற இருப்பில் இதெல்லாம் உங்க மருத்துவரைக் கேட்காமல் செய்யாதீங்க.ஏதானும் பக்க விளைவுகள் ஏற்படப் போகிறது. கவனமா இருங்க. கவலையைத் தருது உங்க நண்பி துரத்தறதைப் பார்த்தால்!

மிஸஸ்.தேவ் said...

படித்தேன்...ரசித்தேன் ...உடம்பைக் கவனிங்க வல்லிம்மா,

உங்க friend ஜிம்ல செலவழிக்கச் சொல்ற அமௌன்ட் ஒரு சராசரி மிடில் கிளாஸ் தனி நபர் மாத வருமானம் ,கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ஒரு பக்கம் வறுமை ,ஒரு பக்கம் பணத்தை எங்க கொட்டறதுன்னு அலைபாயுற ஆத்மாக்கள்,எல்லாரும் இந்த ஒரே உலகத்துல தான் வாழறோம்!!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மிஸஸ்.தேவ்.

உண்மைதான்.

விரதங்களும், உடல் பயிற்சிகளும், யோகாவும் செய்ய முடியாத வேலையை,இந்த மாதிரி நிலையங்கள் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

பணம் படுத்தும் பாடு:)

கோமதி அரசு said...

அன்பு வல்லி,
தைராய்டுக்கு உடற்பயிசி
உள்ளது, செலவு இல்லாமல் வீட்டிலிருந்தே செய்யலாம், கற்றுக்கொள்ளவும் கட்டணம் இல்லை,
கற்றுக் கொடுக்கும் இடம்-உலகசமுதாய சேவா சங்கம்,26,II கடல்நோக்குச்ச்லை,
வால்மீகிநகர், திருவான்மியூர், சென்னை-600041. போன்:24411692

உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி அரசு. போன் செய்து பார்க்கிறேன்.
என்னைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.

கவிநயா said...

கவலைப் படாதீங்கம்மா. கீதாம்மா சொன்னது போல் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுடுங்க. உடல் நலத்தை பார்த்துக்கோங்க.

வல்லிசிம்ஹன் said...

விட்டுட்டேன்.விட்டுட்டேன். கவிநயா.

திருவிளையாடல் படத்தில தருமி சொல்வது போல குற்றம் சொல்லியே பிழைப்பவர்களை நொந்து பயனில்லை.
அன்று வேறு எத்தனையோ நல்ல
பழைய நினைவுகளைப் புதுப்பித்திருக்கலாம்:((

Anonymous said...

வல்லிம்மா, எவ்வளவு நாள் கழிச்சு வந்து பாத்தாலும் ஒரு தூள் கிளப்பும் பதிவு போட்டு கலக்கிட்டு தான் இருக்கீங்க. எத்தனை விஷயத்தை, அப்படி அப்படியே மனசு விட்டு சொல்லி, கொஞ்சம் லேசா காமடியும் கலந்து, அருமையா இருக்கு இந்த பதிவு! :)

இரட்டப் புள்ளை பெத்த உடம்போட "விபரீத கரிணி" போய் "ஹலாசனா" வரைக்கும் முன்னேறிட்டேன். அடுத்த வாரம் அர்த்த சிரசாசனத்திலருந்து முழு சிரசாசனத்துக்கு தூக்கி நிறுத்திருவோம்னு டீச்சர் நம்பிக்கையா சொல்லிட்டாங்க - முப்பத்திஞ்சு வயசுல அறுபத்திஞ்சு கிலோவை எப்படி அப்படி எழுப்புறதுன்னு இன்னும் பயம்மாருக்கு!!! :))) ... வெயிட்டு பிரச்சனை ரொம்ப வெயிட்டான பிரச்சனையாப் போச்சு! :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுரா, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். நீங்க இந்தப் பக்கம் வருவதே பெரிய விஷயம்.

ஹேவ் ஃபன்.!!
சிரசாசனம் ரொம்ப ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டிய விஷயம். செய்யணுமான்னு யோசித்துவிட்டுப் பண்ணவும்.
டேக் கேர்

கீதா சாம்பசிவம் said...

@மதுரா,

பேரே இதானா? ஊரா? என்னதான் ஹலாசனம், விபரீதகரணி, சிரசாசனம் எல்லாம் செஞ்சாலும் உடனே எல்லாம் எடை குறையாது. குறையவும் கூடாது. கிட்டத் தட்ட எட்டுவருடங்களாய் விடாமல் (தவிர்க்கமுடியாதுனா மூச்சுத் தொந்திரவு அதிகம் இருக்கும்போது பிராணாயாமம் மட்டும்) யோகா செய்தும், எனக்கு எடை 4 கிலோ குறைஞ்சிருந்தால் பெரிசு. ஆனால் உடல், மனம் லேசாக உணர முடியும்! வாழ்த்துகள். யோகாவை யோகத்துடனேயே அனுபவித்துச் செய்யுங்கள். அவசரம் அவசரமான உடல் பயிற்சியாக வேண்டாம். சின்ன வயசுதானே, சீக்கிரம் பலன் கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா.
மதுரா பெயர்தான்.:)