Blog Archive

Sunday, October 04, 2009

அருள்,பொருள்,இன்பம் , தொடர் ,கவிநயாவின் அழைப்பு









அன்னை










திருமணம்





கடவுள்







பொருள்,பணம்...



















அழகு முகங்கள்












அன்புக் கவிநயா ஒரு வலைத் தொடரில் மாட்டிக் கொண்டு, நம்மையும் அதில் இழுத்துவிட்டார்.
தந்த தலைப்போ தாண்டிக் கடந்து வந்த வருடங்களையே விழுங்கிவிடும்:)
 
இந்த வயதில் கடவுள் பக்கம் போய்க் கொண்டு இருக்கிறோம். அதனால் உணர்ந்து எழுதுவது சுலபமே.
அடுத்தது பணம். பொருளில்லாத உலகம் ஏது அதையும் எழுதிடலாம்.
அழகு??காண்பவர் கண்ணில் இருக்கிறது இல்லையா. சரி ஓகேதான் அதுவும்.
காதல்,
ஆஹா......... தொலைக் காட்சி படங்களில் தவிர காதலை வேறேங்கும் பார்க்கறது இல்லையே. இதை பற்றி என்ன எழுதுகிறது???
சரி விதி வலியது.
நான் எழுத நீங்களும் படிக்கணும்னு சனிப் பெயர்ச்சி போதே முடிவாகிவிட்டது.
எழுதுவதோடு நில்லாமல் இன்னும் நால்வரை அழைக்கணுமாம்.
அதனால் நான் அழைக்கப் போகும் நால்வரை முதலில் சொல்லிவிடுகிறேன்.
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
******************************************************
1 கோமதி அரசு
2, ஷைலஜா, திருவரங்கப் பாவை,
3,சஹாரா தென்றல்,
4, கயல்விழி முத்துலட்சுமி.
 
எழுதிடுவாங்க. எல்லாம் அந்த அந்தக் கட்டத்தில இருக்கறவங்க தான்.
*********************************************************************************************************
இப்போ நாம், முதலாக
காதல்.
கண்டும் கேட்டும் பிறகு பார்த்தும் ,புரிந்தும் வரும் காதல் நிலைக்கும்.
சந்தேகம் வந்தால் முறியும்.
சந்தோஷம் தரும்.
புது உலகிற்கு இருவரையும் அழைத்துச் சென்றுவிடும்.
இந்த நிலை மாறாமல் காதலைக் கொண்டாடினால் வாழ்வு நுனிக் கரும்பு போல இனிக்கும். நுனிக் கரும்பு நிலையில், வயதில் இருப்பதால் சொல்கிறேன். காதலாகிக் கண்ணீரும் விட்டு, கஷ்டங்களைத் தாண்டி., இப்போது ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்:)

அடுத்தது,
கடவுள்..
இல்லாமல் ஏது வாழ்க்கை. இவர் ரொம்ப அவசியம்.
அப்பப்போ திட்டு வாங்க இவரை விட்டால் ஆள் கிடையாது. அப்புறம் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளணும்னாலும் இவரிடம் தான் பேசணும்.
எத்தனையோ வடிவங்களில்,நிகழ்ச்சிகளின் மூலமாக,மனிதர்கள் உதவிக்கரங்களாக அவர் எங்களிடம் வந்திருக்கிறார்.
இன்னும் இந்த நொடியில் இந்த 11.12 நிமிடம் இரவு வேளையில் எழுதும் ஊக்கமும் அவர்தான் கொடுத்திருக்கிறார். நான் நம்புகிறேன்.

மூன்றாவது பணம், பொருள்.
வேண்டும். அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பக்குவமும் நம் அறிவு நமக்குக் கொடுக்கவேண்டும்.
வந்த போது அள்ளி வீட்டுப்,பரப்பி விட்டு இல்லாத போது மற்றவரிடம் கையேந்தா அளவில் நம் புத்தியையும் மனதையும் கூர்மையாக வைத்துக் கொள்ளணும்..
 
நாலாவது அழகு.
புன்னகை,அன்பு,மகிழ்ச்சி,ஆரோக்கியம் இருந்து விட்டால் அழகு தானே நம்மிடம் இருக்கும், வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
சரியா.
கவிநயா எழுதிட்டேன்பா.!!!
 
 
 










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

25 comments:

Kavinaya said...

அட, அதுக்குள்ள அசத்திடீங்களே :)நடைமுறைக்கு தேவையானதை வழக்கம் போல இயல்பா சொல்லிட்டீங்க! நன்றி அம்மா.

ராமலக்ஷ்மி said...

தேடியெடுத்து போட்டிருக்கும் எல்லாப் படங்களும், குறிப்பாக வலைப்பூவுக்காகப் போட்டிருக்கும் ‘லயன்கிங் மடியில் சிம்பா’ [நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்கும் வடிவில்:)] அருமை. காதல் கடவுள் அழகு பணம் பற்றிய த்ங்கள் கருத்துக்கள் யாவும் வாழ்வின் இனிமைக்குத் தேவையான நல்லுரைகள். நன்றி வல்லிம்மா.

துளசி கோபால் said...

சொன்னது எல்லாமே ரொம்பச் சரி.

இப்போ ஒருவாரத்துக்கு முன்னேதான் 'பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா?' ன்னு படம் பார்த்தேன்.

அப்பெல்லாம் அழகு முகம் தேவையா இருந்துச்சுப்பா சினிமா உலகத்துக்கு!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.

எப்பவுமே இதமான வார்த்தைகளில் கைவழி வந்து, பதிவினில் பதிய
சரஸ்வதி கடாக்ஷம் வேணும். நாலு வரிகளுக்கு தாலாட்டுப்போல வாழ்த்துச் சொல்லி விட்டீர்கள். நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கவிநயா. .
எல்லாமே தேவையான சப்ஜெக்ட் தானே

நிறைய எழுதலாம்.
சுருங்கச் சொன்னால் போதும்னு தோன்றியது.:)
மற்றவர்களுக்கும் தனி மயில் அனுப்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அழகு முகத்திலளவில் இல்லாமல் இதயம் வரை இருந்த நாட்களும் இருந்தன. துளசி.

இப்போது கொஞ்சம் மாறிவிட்டது.
பெண்கள் எவ்வளவோ மாறியாச்சு.

அழகை மட்டும் நம்பி இப்போது உலகம் இல்லை.
அறிவுப் பெண்கள் சாதனை செய்யும்போது அவர்களைத்தான் கவனிக்கிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கேன்னு பாடிட்டுப் போகவேண்டியதுதான் துளசி

மெளலி (மதுரையம்பதி) said...

படங்களுடன், அருமை வல்லியம்மா.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா!, நீங்களும் ராத்ரி பதினோரு மணிக்குப் பதிவு போடறீங்களா? :)

சந்தனமுல்லை said...

படங்களும் குறிப்புகளும் அழகு...ரொம்ப ஆப்டா இருக்கு!! அதுவும் உங்க அனுபவத்திலே குறிப்புகள் மிளிருது! ஹாட்ஸ் ஆஃப் வல்லியம்மா! எனக்கு அந்த ஹெட்டர்தான் பிடிச்சது...பூக்கள் பூத்திருக்கும் வாசல்!! :-)

கோமதி அரசு said...

//அருள்,பொருள், இன்பம்//

அருமையான தலைப்பு.

வல்லி, உங்கள் விளக்கம் மிகவும் அருமை.
//புன்னகை,அன்பு,மகிழ்ச்சி,ஆரோக்கியம்
இருந்து விட்டால் அழகு தானே வந்து
விடும்//

ஆம், உண்மை. அதை நான் ஆமோதிக்கிறேன்.

படங்கள் வழக்கம் போல் அருமை.

என்னையும் இந்த தலைப்பில் எழுத
அழைத்திருக்கிறீர்கள் ,உங்களுக்கு என்
மேல் உள்ள நம்பிக்கையை நான்
காப்பாற்ற வேண்டும் நன்றி வல்லி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி. நானும் பார்த்தேன். ரங்கராவ்,வைஜயந்தி ,சுப்பையா,ராகினி டாப் க்ளாஸ்.:)
இப்போ முகம் மட்டும் போதாது:)

நானானி said...

கொடுத்த தலைப்புக்கு படங்களால் விளையாடிவிட்டீர்கள். அருமை.

அப்பாட! நல்லவேளை என்னை இழுத்துவிடவில்லை. டாங்க்ஸ்!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,
இரண்டு மூன்று நாட்கள் மருத்துவர்களோடு கழிந்தது. உடனெ பதில் போடமுடியவில்லை.
அதனால்தான் இரவோடு இரவாகப் பதிவைப் பதிந்துவிட்டேன்:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் முல்லை. பப்புவைப் பற்றிப் படிக்கப் படிக்க ஆவலாக இருக்கிறது.
தோட்டத்துக்குப் போகும் படத்தைத் தேடிப் பார்த்து ஓய்ந்துவிட்டேன்:(
கிடைத்ததும் போடுகிறேன்.

இணையத்தில கிடைக்காதது எது:)))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி. நல்லா எழுதிவீங்க. எல்லாருக்கும் பொதுவான வாழ்க்கைதானப்பா.
தினம் தினம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

உங்களுக்குச் சுலபமாக வந்துவிடும்.ஏற்றுக் கொண்டதற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா நானானி.
முதலில் தோன்றியது உங்க பெயர்தான்.
அப்புறம் உங்களைச் சிரமப் படுத்தவேண்டாம் என்று நினைவு வந்தது.
இன்னும் ஓய்வு கிடைக்கும் போது நீங்கள் எழுதினால் எங்களுக்கு விஷயம் கிடைக்குமே!!!

Geetha Sambasivam said...

//குறிப்பாக வலைப்பூவுக்காகப் போட்டிருக்கும் ‘லயன்கிங் மடியில் சிம்பா’ [நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்கும் வடிவில்:)]//

இது என்ன படம்?? வலைப்பூவில் தேடியும் காணக்கிடைக்கலை.:(((((

சுருக்கமாய் எழுதி அசத்திட்டீங்க, கவிநயா என்னையும் கூப்பிட்டிருக்காங்க. பார்ப்போம், சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியுமானு! இதுவே ஒரு சவால் தான் எனக்கு! :))))))))))))

ராமலக்ஷ்மி said...

விதம் விதமாய் தேடித் தந்து
அடிக்கடி மாற்றியும் வருவார்
வலைப்பூ படங்களை வல்லிம்மா! வழக்கம் அதைக் கவனித்ததில்லையா, கீதா மேடம்:)?
/:(((((/
இத்தனை வருத்தப் பட்டிருப்பதால்
விளக்கம் தர வந்தேன்:)!

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
கீழ ராமலக்ஷ்மி சொல்கிறதைப் பாருங்கோ. அதான் நிஜம்.:)
வேற வேற கோணத்தில நீங்க அசத்தப் போகிறதை நானும் பார்க்கத்தானே போகிறேன்!!

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி வாங்கப்பா.
என்னைப் புரிந்து கொண்ட இன்னோரு ஆத்மா.
நன்றிப்பா

ராமலக்ஷ்மி said...

சொன்னபடியே ஞாயிறன்று தலைப்புப் படத்தை மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறதே. அப்படியே படத்துக்குள் இறங்கி பச்சைப் பசும் கானகத்தில் காலார நடந்து வரலாம் போலிருக்கிறது:)!

இந்தப் பதிவின் சுட்டியை எடுக்க வந்தேன். நம்ம திருவரங்கப் பாவை இந்தியாவில் லேண்டட். அவர்களுக்குக் கொடுக்கத்தான்:)!

ஷைலஜா said...

வல்லிமா

இப்பதான் பாக்றேன்...வரேன் இருங்க உங்க படங்கள்ல மயங்கி நிக்கறேன் இப்போ

ஷைலஜா said...

அழகழகான படங்களைபாராட்டுவதா அன்புததும்ப வல்லிமா எளிமையாய் எழுதி இருப்பதைப்பாராட்டுவதா? நன்றி வல்லிமா என்னையும் அழைச்சதுக்கு.... நேரம் கிடைக்கும்போது எழுதிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஷைலஜா,
வஎரணும் வரணும். நன்றிம்மா. படங்கள் எல்லாம் கூகிள்தான். எல்லாப் பெருமையும் அந்த ஆண்டவனுக்கே:)
மெள்ளவெ எழுதுங்க..

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, சாரிப்பா அந்தப் படத்தை மாத்திட்டேன்.
ரொமப் பெரிசா இருந்தது. அத்தோட பாண்ட்வித் ஒத்துக்கலை. அதனால குட்டி லேக் படம் போட்டுட்டேன்:)
ரசனை ராமலக்ஷ்மினு கூப்பிடப்போறேன் உங்களை.