Blog Archive
Friday, October 02, 2009
அக்டோபர் படப் போட்டிக்கு .....
அக்டோபர் மாதப் போட்டிக்குச் சில படங்களைத் தேர்ந்தெடுக்க, பொம்மைகளைத் தேடியபோது எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன என்று தோன்றியது. கலைஞனின் கைவண்ணம் முத்திரை பதித்த கொலு பொம்மைகள் தன் என்ன வசீகரம்.
இன்றுதான் அவர்களுக்கு விடைகொடுத்து ,துணி மணிகளிலும் பேப்பரிலும் சுற்றி வைக்க ஆரம்பித்தேன்.
அதற்கு முன் எடுத்த படங்கள் இவை.
ஏதாவது போட்டிக்கு அனுப்பலாமா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
ஏனெனில் என் படம் வரை முறைக்கு அப்பாற்பட்டது என்றே பெயர் வந்துவிட்டது போன போட்டியில்.
நான் எப்போதும் அடக்கி வாசிப்பது என்ற வகையைச் சேர்ந்தவள் என்றே நினைத்திருந்தேன்.
இப்ப என்னை கட்டத்துக்கு வெளில நிக்கிற அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட் என்று தெரிந்து கொள்வதில் சிரிப்புதான் வருகிறது:))
பார்க்கலாமா.
எந்தப் பொம்மைக்கு முதலிடம் என்று வோட் போடுங்கள்.
அப்படியும் படத்துக்குத்தான் ஓட்டு. பொம்மைக்கில்லை.!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
எனக்கு அம்மாவும்-அப்பாவும் பொம்மைதான் பிடிச்சிருக்கு!! :)
//நான் எப்போதும் அடக்கி வாசிப்பது என்ற வகையைச் சேர்ந்தவள் என்றே நினைத்திருந்தேன்.
இப்ப என்னை கட்டத்துக்கு வெளில நிக்கிற அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட் என்று தெரிந்து கொள்வதில் சிரிப்புதான் வருகிறது:))//
;)
எனக்கு மாடும் கன்னுகுட்டியும் புடிச்சிருக்கு.
பொம்மைகள் மேலிருந்து எடுத்த மாதிரி இருக்கு. குட்டி பொம்மைகள் எடுக்கும்போது, அதன் லெவலுக்கு கீழிறங்கி குனிஞ்சு எடுக்கோணும். :)
பசுவும் கன்றும் பாந்தம்.
@ சர்வேசன்,
//குட்டி பொம்மைகள் எடுக்கும்போது, அதன் லெவலுக்கு கீழிறங்கி குனிஞ்சு எடுக்கோணும். :)//
குட்டிப் பொம்மைகள் நம்ம சொன்ன பேச்சைக் கேட்குமே. அவற்றை நம்ம லெவலுக்கு மேலே ஏற்றி வைத்தும் எடுக்கலாம்தானே:)?
நல்லா இருக்குதுங்க!
என் ஓட்டு நவநீதக் கண்ணனுக்கு.
அதுலே மேலே கீழே எல்லாம் கொஞ்சம் ட்ரிம் செஞ்சுட்டால் ஜோரா இருக்கும்.
பசுவும் கன்றும் நெஞ்சை கொள்ளை
கொள்ளுகிறது.
எல்லாப் படமும் அழகு தான்.
சந்தனமுல்லை,
நன்றி.. மத்த வோட் எதுக்குனு பார்க்கலாமா:)
வாங்க சர்வேஸ்.
பொம்மைகளைப் படிகளிலிருந்து இறக்கியாச்சு.
ராமலக்ஷ்மி சொன்னது போல சம லெவல்ல எடுத்து இருக்கலாம்.
பரவாயில்லை.
தர் இஸ் ஆல்வேஸ் நெக்ஸ்ட் டைம்.:)
பசுவும் கன்றும் வெகுமையான அன்பு வெள்ளம் பெருகும் காட்சியைக் கொடுக்கிறது இல்லையா ராமலக்ஷ்மி!!
நன்றிம்மா.
நன்றி ஊர்சுற்றி.
Thanks pa, Gomathi. if I can send two photos I shall be so happy.:)))
எல்லாமே மேல இருந்து எடுத்த மாதிரி இருக்கு. எனக்கு பிடித்த படம் கிருஷ்ணன் படத்துக்கு அடுத்த படம் ;)
வரணும் வரணும் கோபிநாத்.
கிருஷ்ணனுக்கு அடுத்தது, வீடு இல்லையா.
சாவி கொடுத்தால் அருமையாகப் பாடும்.
லக்ஷ்மி ஒண்ணுதான் மேலிருந்து காமிரா. மத்ததெல்லாம் அவங்க அவங்க லெவல்ல எடுத்ததுதான்:))
நிஜமாவே நீங்க அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்தான்!
அக்கா, உங்க படத்தை உங்க பேர் போட்டு அனுப்பலை. யாருது இதுன்னு கேட்டுகிட்டு இருக்காங்க. உடனே மெய்லுங்க!
அன்புத் தம்பி திவாவுக்கு,
பார்த்துச் சொன்னதற்கு நன்றி. சரியான படத்தைப் பெயரோட அனுப்பிட்டேன்.
சரியாகிடும்னு நினைக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி.
சரியாயிடுத்து பாத்தேன்.
:-))
Post a Comment