Blog Archive

Wednesday, April 11, 2012

ஆநந்தம் நம்மிடம் வர ஒரு மிஸ்ஸ்ட் அழைப்பு போதுமாம் -1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எங்கள் ப்ளாக்  பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவை இல்லை:)
ஆரம்பித்த சில நாட்களில்   வாசகர்களைத் தன் பக்கம்  இழுத்துக் கொண்ட

பாசக் குடும்பம்.
யாரையும் கவருவதற்காகத் தனி முயற்சி எடுக்காமல் இயல்பாகவே
நன்மை நிறைந்த பதிவுகள்.

புத்தகமாக  ஒரு மாத இதழாக  வெளிவர என்ன தகுதி வேண்டுமோ
அத்தனையும் கொண்ட   ஒரு வலைப்பூ.

அதில்  சில வாரங்களுக்கு முன் நடத்தின ''தங்கத்தவளைப் பெண்ணே    ''நகைச்சுவை  போட்டி   எல்லாரையும் ஈர்த்தது. என்னையும் கவர்ந்தது.

புருடா விடுவது,லாஜிக் இல்லாமல் கதை எழுதுவது எல்லாமே எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.

இதில் என்ன சங்கடம் என்றால் என்னை மாதிரியே எங்கள் ப்ளாக் வாசகர்களும்   இருந்ததுதான்.
என்னை மாதிரி என்றா சொன்னேன். என்னைவிடப் புத்திசாலிகள் என்று எழுதி இருக்கவேண்டும்.
கீதா சாம்பசிவம், மீனாக்ஷி, அப்பாதுரை, கணேஷ்,குரோம்பேட்டைக் குறும்பன்  இப்படி எல்லாரும் போட்டியில் இறங்கிவிட்டார்கள்.

அட அசடே  ஒரு நல்ல கதை எழுதக் கூட லாயக்கில்லையே   என்று என்னையே தலையில் குட்டிக் கொண்டேன்.

ஆச்சர்யம் என்னவென்றால் எனக்கும் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் ஒரு  ஞாயிறு பிற்பகல்  எங்கள் ப்ளாக்  குழுவின் ஒரு(!!!)
ஆசிரியர்  கௌதமன்  படபடக்கும் வெய்யிலில் நம் வீட்டுக்கு பரிசுப் புத்தகத்தோடு வருகை தந்தார்.
காப்பி கீப்பி சாப்பிடுவாரோன்னு பார்த்தால் தண்ணீர் போதும் என்று விட்டார்,. நம் வீட்டுக் காப்பி மகிமை அவ்வளவு தூரமா பரவி இருக்கிறது   என்று வியந்தபடி அவர் அன்போடு அளித்த புத்தகத்தைப் பார்த்தேம்.
''ஆநந்ததுக்கு ஒரு மிஸ்டு கால்''

புத்தகத்தின் தலைப்பே வியப்பைத் தந்தது,. அப்படியெல்லாம் சந்தோஷம் நம்மைத் தேடி வருமா என்ன?
என்  சந்தேகத்தை அவர் போக்க முனையவில்லை. படித்துப் பாருங்கள்.

அவசியம் ஃபீட் பாக்''   கொடுக்க வேண்டும் என்ற அன்புக்கட்டளை வேறு.

இப்போது புத்தகம்

இதை ஆங்கிலத்தில் எழுதியவர்   ஸ்ரீ சுரேஷ் பத்மநாபன்.
ஆன் க்ளௌட் 9'' என்கிற புத்தகத்தின் தமிழாக்கம்
ஆநந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்''
இதைத்   தமிழாக்கம் செய்தவர்
  தமிழ்ப் பெயர் சூட்டியவர்  நம்
இதயம் பேத்துகிறது   வலைப்பூவின் கே ஜி ஜவர்லால்.
************************************************************

வெளியிட்டவர்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.


சமீபகாலமாக இவர் பதிவுகளைப் படிக்க முடிகிறது பின்னூட்டம் இட முடியவில்லை.

இப்போது இந்தப் பின்னூட்டம் வழியாக் முறையிட்டுக் கொள்ளுகிறேன்.:)

முன்னுரை மட்டும் முடித்திருக்கிறேன்.
புத்தகங்களைப் படிக்கும் அளவு அவைகளை விமர்சிக்கும்

புத்தி எனக்குக் குறைவுதான்.
ஆனால் நன்றாக  இருந்தது என்று சொல்லி முடிக்கவும் விருப்பமில்லை. அது தவறு கூட. ஏன் என்றால் அருமையான சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திரூக்கிறது   இந்த நாவல்,கட்டுரை,புதினம்  எப்படி வேண்டுமானாலும்  சொல்லலாம்.
அதனால்  கொஞ்சம் மூளையைக் கசக்கிவிட்டு
அடுத்த பதிவில் என் கருத்தைத் தொடருகிறேன்.
சரியா.




28 comments:

Geetha Sambasivam said...

sarithan. waiting!!!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

உங்களை எக்ஸ்ப்ரஸ் கீதான்னு அழைக்கப் போகிறேன்:)
பப்ளிஷ்னு போட்டு ஒரு செகண்ட் கூட ஆகலை!!!!
நன்றிப்பா. தொடர்ந்து எழுதினால் கண்ணுக்குச் சிரமமாக இருக்கிறது. இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளணௌம். நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் வல்லிம்மா. வாசிப்பனுபவம் குறித்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

வாசகருடன் எப்போதும் நட்பு பாராட்டும் 'எங்கள் ப்ளாக்’ வாழ்க வளர்க!!

Geetha Sambasivam said...

hihihiரீடரில் உடனே தெரியுது. அதனால் உடனே பின்னூட்டம் போட்டேன். மெதுவா எழுதுங்க. ஒண்ணும் அவசரம் இல்லை. கண்ணிற்குக் கவனம் கண்போன்ற கவனம் தேவை.

பால கணேஷ் said...

நான் இன்னும படிக்கவில்லை. முடித்து விட்டு எழுதுவதற்குள் நீங்கள் எழுதியதைப் படித்து விடுகிறேன். அநேகமாக நான்தான் கடைசியாக இதைப் பற்றி எழுதுவேனோ என்று தோன்றுகிறது. பார்க்கலாம்...

கௌதமன் said...

நன்றி, மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். (எப்பொழுது முடியுமோ அப்பொழுது)

கோமதி அரசு said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

படிச்சு முடிச்சுட்டு எழுதுங்க....மிஸ் பண்ணாமப் படிக்கிறோம்...!

ADHI VENKAT said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் அம்மா. பொறுமையாக விமர்சனம் எழுதுங்கள். படிக்க ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்பாதுரை said...

தவளைக்கதை நல்லாவே இருந்துது.. உங்க கதையைப் படிச்சதும் தான் எனக்கும் ஒரு ஐடியா தோணிச்சு. டபுல் நன்றி :)

kgg காபி வேணாம்னு என்னங்க.. எனக்கு ரெண்டு கப்பா குடுத்துடுங்க.

ரீடர் பாலோயர்னு பின்னிப் பெடலெடுக்குறாங்கப்பா எக்ஸ்ப்ரஸ் கீதா!

வெங்கட் நாகராஜ் said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

பரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள் அம்மா ! தொடருங்கள் !

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.
நல்லா யோசித்து எழுதணும்:00
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. நேத்திக்கு வந்த அமர்க்களத்தில் கணினி கிட்ட
வரவில்லை:)இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் யோசிக்கணும்

வல்லிசிம்ஹன் said...

வாங்க கணேஷ். நல்ல ஐடியா. நான் கூட பின்னூட்டங்கள் படித்துவிட்டுத்தான் என் கமெண்டை எழுதவேன்;)

வல்லிசிம்ஹன் said...

சரி கௌதமன்.அப்படியே செய்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி. எனக்கும் பரிசு கிடைத்ததே!!!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

படிச்சு முடிச்சாச்சு ஸ்ரீராம். கவனமாக அதைப்ப்பற்றி எழுதணும். அதான் கஷ்டம்;)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி.
கவனமா எழுதணும். நல்லாவும் எழுதணும்:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நீங்க எப்போ சென்னை வரீங்களொ அப்பக் கட்டாயம் காப்பி உண்டு துரை.
கதை நன்றாக இருந்ததுன்னு ஆதரவளித்தற்கு நன்றி:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.பின்னுரையும் எப்படி வருகிறதுன்னு பார்க்கலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

பரிசு கிடைச்சதுக்கு வாழ்த்துகள் வல்லிம்மா..

மாதேவி said...

மகிழ்கின்றேன்.
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

Jawahar said...

அந்த நூலுக்கு தமிழ்ப் பெயர் சூட்டியவன் என்று என்னை அடையாளம் கண்டதற்கு நன்றி.

http://kgjawarlal.wordpress.com

Jawahar said...

பத்ரி சாரும், சுரேஷ் பதமனாபனும் அந்த புத்தகத்துக்கு தமிழில் தலைப்பு எழுதித் தர ஒரு ஆளைத் தேடி, அதற்கு நான் கிடைத்து, தலைப்பு வைத்தவர் பெயரை அட்டையில் போட்ட அவர்களின் பெருந்தன்மையையும் நீங்கள் பாராட்டலாமே?

http://kgjawarlal.wordpress.com

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜவஹர்லால் ஜி.தமிழாக்கம் செய்தவர் என்று சேர்க்க மறந்துவிட்டேன் மன்னிக்கவேண்டும்.
உங்கள் வலைப்பூவுக்கு வந்து படிக்க முடிகீறது பின்னூட்டம் இட முடியவில்லை. என் மெயில் ஐடியே தப்பு என்கிறது;(

வல்லிசிம்ஹன் said...

ஜவஹர் ஜி இந்தப் பதிவைதிருத்தி எழுதி இருக்கிறேன். சரியாகச் சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி.