மலையோரப் பாதை
பார் ஹார்பரிலிருந்து அடுத்த நாள் கிளம்பியபோது விடிந்துவிட்டது. காலை க்கதிரவன் உதயம் பார்க்க வைத்திருந்த திட்டம் கைவிடப்பட்டது.
அக்கேடியா தேசிய பூங்காவுக்கு வழி தேடி ,
காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.
கிளம்பும்போதே சில்லென்ற மழைச் சாரல். கூட வந்த தம்பதியர் இருவருக்கும் ஒரே உத்ஸாகம்.
நாம் பார் ஹார்பர். சுற்றி விட்டு மலை ஏறலாம். அதற்குள் மழை நின்றுவிடும்.
இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ள ப்பட்டது.
பார் ஹார்பரில் ஒரு வியூ
நாங்கள் பார்க்காத சூரிய உதயம்.
மெயின் ஸ்ட்ரீட்.
மரநிழலோடு உணவருந்த ஏற்ற இடம்.
எல்லா இடங்களையும் சுற்றி வர இரண்டு மணி நேரம்
ஆயிற்று. வழியில் சாப்பிட subway sandwhich
வாங்கி கொண்டு சாப்பிட இடம் தேடினோம். மேற்கொண்டு பயணம் தொடருவதற்கு முன் கைகால் சுத்தம் செய்து கொள்ள இடம் தேடினால் 72 படிகள் ஏறிப்போனால் இருக்கு என்று ஒரு பலகை சொன்னது.
நான் அசந்து உட்கார்ந்துவிட்டேன்.
என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி வந்த அந்த ஊர்க்காரப் பெண், கவலைப்படாதே நமக்குத் தனி இடம் இருக்கு இந்தப் பக்கமாகப் போ என்றார்.
அம்மாடி வாழ்க நீ அம்மா என்று வாழ்த்தியபடி வண்டியை அந்த மேட்டில் ஏற்றினார் மாப்பிள்ளை.
சுலபமாக வேலையை முடித்துக் கொண்டு சாப்பிட உ ஒரு இடத்தை
தேடிக் கண்டு பிடித்தோம்.
அழகான பெஞ்ச் பிகினிக்
மேஜைகளும் .மர நிழல்களும் கொண்ட இடம் கிடைத்தது.
வயிறார உண்டு வீட்டுக் கிளம்பினோம்.
பார்க்கைக் கண்டு பிடித்தது இன்னொரு கதை.
|
No comments:
Post a Comment