செல்லும் வழியெல்லாம் கூடவே வந்த கடல்.
நடுவில் ஒரு நாள் ஒட்டியவர்களுக்கு வேறு வேலை இருந்தது. வீட்டில் சமையல் வேலைகளையும் முடித்து, அடுத்த நாட்களுக்கான உடைகள், வழியில் உண்ணுவதற்கான கொரிக்க முறுக்கு,தட்டை, உ.கி வறுவல் வகைகள், புளிக்காய்ச்சல், ஊறுகாய், தவிர்க்க முடியாத ரொட்டி வகைகள் எல்லாம் வண்டியின் பின்புறம் நிரப்பியாச்சு. இருக்குமிடத்திலிருந்து நான்கு மணி நேர பயணம். நமக்குத்தான், காப்பிக்கடை, ரெஸ்ட் ரூம் எல்லாம் நிறுத்தணும்.
4 மணி அளவில் புறப்பட்டோம். அழகான நீல விண்ணப் பாலத்தைக் கடந்து ஹைவேயில் நுழைந்தோம் . வழி நெடுக பசுமை சூழ்ந்ததிருந்தது. நடு நடுவே நீல மாகக் கடல் கண்ணாமூச்சி விளையாடிய படி வந்தது.
கடலில் இருந்து பிரிந்து வந்த சிறு தேக்கங்கள். சேரப்போகும் நதிகள் என்று பல வகை களில் மனத்தைத் தூண்டியது.
நின்று நின்று நாங்கள் பார்ஹார்பர் வந்து சேர்ந்த பொது இரவு உணவுக்கான நேரம் வந்து விட்டது. கம்ஃ பார்ட் விடுதியில் நுழைந்ததும் கைகால் கழுவி சாப்பாட்டைப் பிரித்தோம்.
நான் தூங்கப் போவதாகச் சொல்லி அன்று எடுத்த படங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறியவர்களுக்கு ஈடாக என்னால் நடக்க முடியாததோடு அவர்கள் நேரத்தையும் வீணாக்குவது பிடிக்கவில்லை. அவர்கள் பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கும் ஒரு ஷாப்பிங் மாலு க்கும் போய் வந்தார்கள்.
சுகமான நித்திரை ஆட்கொண்டது. அவர்கள் அடுத்த நாளுக்கு வேண்டிய திட்டங்களை போட்டு விட்டு,12 மணி க்குத் தான் அவர்கள் அறைக்குத் தூங்கப் போனார்கள்.
In Maine
பார் ஹார்பர்
|
No comments:
Post a Comment