Blog Archive

Sunday, August 15, 2021

யாராக இருக்க விரும்புகிறோம்?


வல்லிசிம்ஹன்

சுதந்திரம் என்பதை நாம் எப்படித் தீர்மானிக்கிறோம்.?

எல்லாச் சலுகையும் கொடுத்து எங்கும் போகக் கூடாது
என்பது சுதந்திரமா.

என்னுடையை சுதந்திரம் எனக்கு மட்டும்
என்று எந்த இன்னல் வந்தாலும் 
தாங்கித் தனித்து நிற்கத் தைரியமா.

or.....
உறுதியாகக் கட்டப் பட்ட நான்கு  சுவர்களுக்குள்
எல்லா சுகங்களும் கொடுக்கப் பட்டு
பாதுகாப்போடு இருந்து
நம் சுதந்திரத்தை மட்டும் விட்டுக் கொடுக்கலாமா?

இவை சுதந்திர நாள் சிந்தனை ஓட்டங்கள்.
உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.


11 comments:

கோமதி அரசு said...

மகா கவி பாடல் பகிர்வு அருமை. பள்ளியில் தாயின் மணிகொடி பாடல் பாடி கொடியேற்றிய நினைவுகள் , ஆரஞ்சு வில்லை மிட்டாய்கள் கைநிறைய வாங்கி வந்த நினைவுகள் வருகிறது.

தனித்து இயங்க முடியாமல் சார்ந்து இருப்பது கஷ்டம் தான், தனித்து இயங்க இருக்கும் இடம் சூழல் பொருத்து இருக்கிறது.
அடுத்தவன் மூக்கு மேல் இடிக்காமல் இடைவெளிக்குள் நாம் கையை நீட்டி செயல் படுதல் சுதந்திரம் என்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
மிக மிக உண்மை. நாங்கள் பள்ளிக்கூடத்தில்
பாடியதே நீங்களும் பாடி இருக்கிறீர்கள்
என்றால் இந்தப் பாட்டின் பரம்பரையைப்
பாராட்டாமல் இருக முடியுமா.
இன்றும் தமிழில் இனிமையாக நம் நெஞ்சில்
ஒலிக்கிறது.இந்தத் தேசிய உணர்வு என்றும்
நிலைக்க வேண்டும்.
நிறைய குழந்தைகள் சுதந்திர தினம்
கொண்டாடப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருப்பதையும்
பார்த்திருக்கிறேன்.
முறையான நல் உணர்வுகள் போற்றப் பட வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அடுத்தவன் மூக்கு மேல் இடிக்காமல் இடைவெளிக்குள் நாம் கையை நீட்டி செயல் படுதல் சுதந்திரம் என்பார்கள்.......................
நாம் நிறைய மூக்கில் காயங்கள் பட்டிருக்கிறோம்
என்ற நினைவு வந்தது:)

ஸ்ரீராம். said...

எங்கள் அலுவலகத்திலும் நேற்று 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடினார்கள்! நிறைய பேர்களுக்கு தேசிய கீதமே முழுதாகத் தெரியாது என்பது பலமுறை நான் கண்டிருக்கிறேன். அடுத்தவரை பாதிக்காதவாறு நம் சுதந்திரம்! சுதந்திரம் என்பதால் வேண்டுமானாலும் செய்துவிடவும், பேசிவிடவும் முடியாது இல்லையா?!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் ,இனிய காலை வணக்கம் மா.
உங்கள் அலுவலகத்திலும் தாயின் மணிக்கொடி பாடினார்கள் என்பதே
அருமை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
பழைய வழக்கங்களை விடுவதில்லை
என்பதும் நிம்மதி.

நமக்குதான் சுதந்திரம் வேண்டும். மற்றவர்
சுதந்திரத்தில் தலையிட வேண்டாம்.
நான் அப்படிச் சொல்லவில்லை.:)
பேச வேண்டும் என்பதற்காகவே வலைப்பக்கம் ஆரம்பித்தேன்.

KILLERGEE Devakottai said...

பாரதியின் பாடல்கள் கேட்டேன்...

பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரத்தை அப்பா கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளவர் என்ற சிந்தனையோடு பிள்ளைகள் உணர்ந்திருந்தால் பிரச்சனைகள் இல்லை.

Geetha Sambasivam said...

சுதந்திர தினம் என்றாலே ஆரஞ்சு மிட்டாய்கள் தான் நினைவில் வருகின்றன. கை நிறைய ஆரஞ்சு மிட்டாய்களோடு கொண்டாடிய சுதந்திர தினக் கோலாகலம் இப்போது இல்லையோ?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
சின்னப் பிள்ளைகளுக்கு அப்பாவின் கட்டுப்பாடு பிடிக்கும்.
வளர்ந்தவர்களுக்கு
அத்தனை ஏற்பதில்லை. நான் சொல்வது
45 வயதைத் தாண்டியவர்களுக்கு!!

அப்போது அவர்கள் நம் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தாமல் இருந்தாலே
பாக்கியம்.
நலமுடன் இருங்கள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வெல்கம் Back.

ஆமாம் கையில் கசகசக்கும் ஆரஞ்சு மிட்டாய்.
இரண்டுக்கு மேல் கிடைக்காது:)
அதுவே இனிமையாய் இருந்த சுதந்திரதினக்
கொண்டாட்டங்கள்.
பெற்றோர் நமக்குச் சொல்லிக் மொடுத்த அருமை.
நம் குழந்தைகளிடம் கொஞ்சம் இருக்கிறது.
அவர்கள் குழந்தைகள் வரை அது வருமோ
என்னவோ தெரியவில்லை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பாரதியாரின் அழகான பாடல்கள். பள்ளி நினைவுகளை தூண்டி விட்ட பதிவு. கொடியேற்றி கொடி வாழ்த்து முடிந்ததும், வரிசையில் நின்று பெற்ற மிட்டாய்களை, அங்கேயே சாப்பிடாமல் வீட்டுக்கு கொண்டு வந்து அண்ணாவுக்கும் பகிர்ந்து தந்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

கடந்த வாழ்க்கைப் பாடங்களில் சுதந்திரத்தை நம்மை கேட்காமலே எடுத்துக் கொள்ளும் நம் சில உறவுகள் நமக்கும் சுதந்திர தாகம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் போது,மன்னிக்கத்தான் தோன்றுகிறது. வேறுவழி? அதனால்தான் நீங்கள் சொல்வது போல் நம் மூக்கிலும் ஆயிரம் ரணம் மாறாத தழும்புகள்.அதுவே நமக்கு அழகை தருகிறது என சில சமயங்களில் மனக்கண்ணாடியில் பார்த்து ஆனந்தபட்டும் கொள்கிறோம். இதுதான் நமக்கு கிடைத்த சுதந்திரத்தின் பலன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

வரிசையில் நின்று பெற்ற மிட்டாய்களை, அங்கேயே சாப்பிடாமல் வீட்டுக்கு கொண்டு வந்து அண்ணாவுக்கும் பகிர்ந்து தந்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// நல்ல நினைவுகள் போற்றப்பட வேண்டியவை.
அன்பின் கமலாமா.

நம் சுதந்திரம் ---- யோசிக்கிறேன். விட்டுக் கொடுப்பதே வாழ்க்கை ஆன பிறகு
தனி சுதந்திரம் என்று ஒன்றும் இருப்பதில்லை.

நீங்கள் சொல்வது போல மற்றவர்கள்
நம் முகத்தைத் தாண்டி பெரிய உரிமை எடுத்துக் கொண்டார்கள்.
அதுவே எனக்குப் பழகிவிட்டதோ என்று
தோன்றுகிறது,
இனிப் புதிதாக யாரையும் மீறி எதுவும் செய்யப்
போவதும் இல்லை. நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். அதற்கு இறைவன் துணை இருக்க வேண்டும்.
நலமாக இருங்கள் அம்மா.
அழகான எண்ணங்கள் பதிவின் பின்னூட்டமாக
இங்கே நீங்கள் இடும்போது
மனம் பூரிக்கிறது. மிக நன்றி மா.