Blog Archive

Thursday, August 19, 2021

மான் என்று.......





வல்லிசிம்ஹன்
 வேட்டையாடும் சீசன் என்று செப்டம்பர் மாதம் 
சில தேதிகள் குறிக்கப் பட்டிருந்தன.

ஏன் இப்படி என்று மனம் கலங்கியது.
இந்த ஊரில் குளிர்காலம் கொடுமையானது. எலும்பும் ரத்தமும் உறையும் குளிர்.
எங்கெங்கோ மலைகளில் வாழும் மக்கள்
குளி வரும் முன்னாலயே வேட்டையாடி 
மிருகங்களின் உடலைப் பதம் படுத்தி வைப்பார்களாம்.
 பனியில், குளிரில் சென்று உணவு தேட முடியாத 
போது இந்த இறைச்சியை மூன்று நான்கு
மாதங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வார்களாம்.
பழைய கதைகளில் படித்திருக்கிறேன்.
அப்போது எனக்கும் இப்போது இங்கே நடமாடும்
மான் களுக்கும் சம்பந்தம் இல்லாமல் 
இருந்தது. 
இப்போது வழிதவறி வந்துவிடும் சில மான்களின்
மருட்சி மனதை மிரட்டுகிறது.
இவைகள் காக்கப் பட்ட காடுகளில் வாழும் மான்கள்.

கொஞ்சம் தொலைவில் ஹண்டிங்க் க்ரௌண்ட் 
இருக்கும் இடங்களில் நம் காதுகளில்
சத்தம் விழாத தூரங்களில் வேட்டை நடக்கலாம்.

நாங்கள் இருக்கும் இடத்தில் இது கிடையாது.
ஆனால் 30 மைல் தொலைவில் ,நகரத்தில் 
மனிதர்களே வேட்டையாடப் படுகிறார்கள்.
தினம் இரவு ,உறங்கப் போகும் முன்னால்
சில நாட்கள் நகர செய்திகளைப் பார்க்க நேருகிறது.

ஏண்டா சாமி:( என்றே தோன்றும். அதை எழுதி 
இந்தப் பக்கங்களைக் கெடுக்க மனம் இல்லை.
பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை 
யாருமே பாதுகாப்புடன் இருக்க முடியாத 
ஒரு neighbour hood அங்கே இருக்கிறது.
மனிதர்களை நோக வைத்து மனிதர்கள் வாழ முடியுமா
என்று யோசிக்க வைக்கிறது.

மீண்டும் ஒரு வள்ளலார் இங்கே தோன்ற மாட்டாரா
என்று நினைக்க, ஆசைப்படும் நேரம்.
அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.




12 comments:

கோமதி அரசு said...

//பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை
யாருமே பாதுகாப்புடன் இருக்க முடியாத
ஒரு neighbour hood அங்கே இருக்கிறது.
மனிதர்களை நோக வைத்து மனிதர்கள் வாழ முடியுமா
என்று யோசிக்க வைக்கிறது.//

படிக்கவே கஷ்டமாய் தான் இருக்கிறது.
இரவு நேரச் செய்தியில் என்றால் இன்னும் மோசமே தூக்கம் வராதே! இதை எல்லாம் கேட்டால், பார்த்தால்.


//மீண்டும் ஒரு வள்ளலார் இங்கே தோன்ற மாட்டாரா
என்று நினைக்க, ஆசைப்படும் நேரம்.//
'கடை விரித்தேன் கொள்வாரில்லை " வள்ளலார் அப்போதே சொல்லி
இறைவனுடன் கலந்து விட்டார்.

இப்போது மீண்டும் வந்தால் அதை விட மோசமாக இருக்கே ! என்று வருத்தப்படுவார். அவர் மீண்டும் சக மனிதரை நேசிக்க கற்றுக் கொடுக்க வந்தால் நல்லதுதான்.

எல்லோரும் நலமாக இருக்க பிரார்த்திப்போம்.



கோமதி அரசு said...

முதல் பாடல் கேட்டேன், இராண்டாவது ஆலயமணி பாடல்

youtube போய் கேட்டேன்.
மான் பாடல்கள் கேட்டேன் அருமை .
காணொளி மிக அருமை. உங்கள் மனநிலைக்கு பொருத்தமாக இருக்கிறது. தன் வருத்தம் மறந்து மானின் அழகில் சிறிது மயங்கி அதன் அழகை ரசித்து பின் துப்பாக்கி சுடும் சத்தம் நாய் குரைப்பு சத்தம் கேட்டு மானை துரத்துவதும் அருமை, மான் ஓடி போனதும் மகிழ்வது மிக அருமை.

ஸ்ரீராம். said...

மனிதர்களே மனிதர்களை வேட்டையாடும் இடம் எது, ஏன் என்று புரியவில்லை.  மிருகங்களை வேட்டையாடுவது சர்வைவலுக்கு என்றால் ஒன்றும் சொல்ல முடியாது.  பொழுதுபோக்குக்கு என்றால் கண்டனத்துக்குரியது.

மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே, மானல்லவோ கண்கள் தந்தது, ஓ மானே மானே மானே, மான் கண்ட சொர்க்கங்கள்...    என் பங்குக்கு சில மான் பாடல்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

மான் வேட்டை. மனித வேட்டை இரண்டுமே வேண்டாம்
என்று தோன்றுகிறது இல்லையாமா.?

பதிவில் இருக்கும் படம் Queen movie.. இந்தப் படம் வந்து
சில வருடங்கள் ஆகின்றன.
மிகவும் பிடித்த ராணி எலிசபெத் பற்றிய படம்.
அவர் மருமகளை நினைத்து வருத்தப்
பட்டுக் கொண்டிருப்பார்.
அப்போது இங்கிலாந்தின் ஹண்ட்டிங்க் சீசன்.

அவருடைய வண்டி ரிப்பேர் ஆகிவிடும். காத்திருக்கும் நேரம்
இந்த மான் வரும். மனதைத் தொட்ட நடிப்பு.
முடிந்தால் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி,
பழைய கதைகளில் இந்த ஊரின்

கொடூரங்களைப் படித்ததுண்டு.இங்கே அதை
செய்திகளில் காண்பேன் என்று நினைத்ததில்லை மா.
நம்பவே முடியாத வயலென்ஸ்:(

நீங்கள் பாடல்களையும் காணொளிகளையும் ரசித்தது
மகிழ்ச்சிமா.
வீடியோ வரவில்லை என்றதும் இரண்டாவது
பாடலை எடுத்து விட்டேன்.
அதற்குள் நீங்கள் கேட்டு விட்டீர்கள்:)

அந்த நாட்களிலேயே அருட் பிரகாச வள்ளலார் சொல்லிச் சென்றார்
என்றால்,
இப்பொழுதும் மனம் மிக நொந்து போவார்.
அந்தத் தண்டனை வேண்டாம்.
நாம் நம் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து செய்வோம்.
வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
இனிய காலை வணக்கம்.

நான் இருக்கும் ஊர் தெரியுமல்லவா.
அந்த ஊரின் மெயின் டவுன் இருக்கிறது. நம் ஊர் ப்ராட்வே மாதிரி.

அங்கு சில தெருக்கள் மிக மோசமானவை.
க்ராஸ் ஃபைரில் மாட்டிக் கொண்டு
இறைவனை அடைகிறார்கள் ஒன்றும் அறியாதவர்கள்.:(


''கஸ்தூரி மான் குட்டியாம் , அது கண்ணீரை ஏன் சிந்துதாம்' விட்டுப்
போச்சே மா:))
ஓ மானே மானே மானே மிகப் பிடித்த பாடல். ஏவி ரமணன்
கச்சேரி ஒன்றில் 1985 என்று நினைக்கிறேன்... நான் விரும்பிக் கேட்டு
கணவனும் மனைவியும் பாடினார்கள்.
மறக்க முடியாத பாடல்.
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி மா.
வளமுடன் இருங்கள்.

Geetha Sambasivam said...

க்வீன் படம் பார்த்திருக்கேன். நெட்ஃப்ளிக்ஸில் "க்ரவுன்" தொடர்களும் அங்கே இருக்கையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அருமையாக எடுத்திருப்பார்கள். இங்கெல்லாம் இத்தனை வெளிப்படைத்தன்மை/தைரியம்/உள்ளதை உள்ளபடி சொல்வது என்பது இருக்காது.

நீங்க சொல்லி இருக்கும் இடம் பயமாக இருக்கே! அப்படி எல்லாம் இடங்கள் உள்ளனவா? என்ன நடக்கிறது அங்கே? வருத்தமும் பயமுமாக இருக்கு. மனிதர்கள் நல்லபடி காப்பாற்றப்பட வேண்டும்.

மாதேவி said...

மானைக் கண்டாலே அதன் மருட்சியும் அழகும்தான் எம்மை மயக்கவைக்கும் .வேட்டையாடுவது என்பது மனதுக்கு துயர்தான்.

எங்கும் அமைதி கிடைக்க வேண்டுவோம்.
'லோகா சமஸ்தா சுகினோ பவந்து'

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இந்த ஊரைப் பற்றித் தான் தெரியுமே.
எப்போ பார்த்தாலும் காவலர்களுக்கும்
குழப்பக்காரர்களுக்கும் ஜகடா தான்.
அதுவும் சிலர் இருக்கும் இடத்தில்

ஏன் இப்படி எல்லோரையும் அழிப்பார்களோ தெரியாது.

அப்படியும் அங்கேயே இருந்து வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

நம்ம ஊரில் தண்டையார் பேட்டை ,ராயபுரம்
என்று தனித்து சொல்வார்கள் பார்த்திருக்கிறீர்களா.
அது போலத்தான்.

இன்று கூட ஒரு பெண் குழந்தை அங்கே கல்லூரியில் சேர்ந்தது.
அந்த இடம் எல்லாம் பாதுகாப்பான இடம்.
என்ன செய்யலாம் இந்தத் தொற்று
பலவிதங்களில் நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி.

உண்மைதான் மா. கலைமான்கள் இருக்கின்றன. சாதாரண மான்களும் இருக்கின்றன். எல்லாமே
ஒரு துளி சப்தம் கேட்டாலே அதிர்ந்து துள்ளி ஓடும்.

எனக்கும் இந்த வேட்டைகளின் அர்த்தம் புரியவில்லை. காடுகள் அழிந்து வீடுகள் வந்தால்
அவை எங்கே செல்லும் பாவம்
மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

மான் வேட்டையே கொடுமை இதில் மனித வேட்டை வேறு! மனிதனை மனிதனே கொல்லும் கொடுமை தாங்க முடியாத விஷயம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இந்த ஊர்க் கொள்கைகள் எனக்குப் புரிபடவே இல்லை.:(

நிலப் பரப்பும், காடுகளும் அதிகம்.
எல்லா உணவுகளும் எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள்.

மனித நிறங்களில் வேறுபாடுகள்.
வெறுப்புகள் இப்படி நீள்கிறது. சரித்திரத்தையே மாற்றினால்
ஒழிய இதெல்லாம் மாறுமா என்று தெரியவில்லை.