Blog Archive

Friday, August 20, 2021

| தக்காளி ஊறுகாய்/கிராமத்து சமையல்

    இந்தப் பெரியம்மாவின் வெள்ளை சிரிப்பும், அவரைப்
படம் எடுத்து இணையத்தில் வெளியிடும் 
பெண்ணின் மரியாதையும் , திரு நெல்வேலிக்காற்றும், பசுமையும் என்னைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.
அசைவ சமையலை விட்டு விட்டு மற்ற 
 சமையல்களை வெகு நேர்த்தியாகச் செய்யும்
விதம் மிக இனிமை. இதற்காக வயல் வெளியில் ஒரு 
செட் போட்டு, சிமெண்ட் தளம் அமைத்து
அவர்கள் செய்யும் நேர்த்தியும்
அதற்குப் பயன்படுத்தும் அம்மி, கல்லுரல், மாவு அரைக்கும் 
உரல் எல்லாமே பழக்கப் பட்டவைகளாகத் தோன்றுகின்றன.

வீடியோ எடுப்பவரும் சுற்றுப்புறத்தை
அழகாகக் காமிராவில் பதிகிறார்.
பறவைகள் வித விதமாக மரக்கிளைகளில்
உட்கார்ந்து சமையலைப் பார்க்கும் அழகும்

தேங்காயைக் கொறிக்கும் அருமையும் சிறப்பு.

14 comments:

கோமதி அரசு said...

இவர்களின் சமையல் நிகழச்சி பார்த்து இருக்கிறேன், நன்றாக இருக்கும்.
உடன் பேசுபவர்களும் மிக அருமையாக பேசுவார்கள்.
இயற்கை அழகு மிகுந்த இடம்.
இன்றைய தக்காளி ஊறுகாய் அருமை.
நானும் செய்வேன்.
தண்ணீரீல் வேக வைக்காமல் இடலி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து தக்காளி தோலை நீங்கி விட்டு செய்வேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.

உண்மைதான். இவர்கள் செய்யும் விதம் வேறு மாதிரி இருக்கிறது.
உடனே செலவழித்து விடுவார்களோ
என்னவோ.
இவர்கள் இருவரும் செயல்படும் முறை அழகாக இருக்கிறது.

அதுவும் அந்தப் பெரியம்மாவின் பற்கள் எவ்வளவு வெள்ளை!!!!

சிரிப்பும் உள்ளத்திலிருந்து வருகிறது.
நன்றிமா.
நான் தக்காளியை முழுவதும் வதக்கிவிடுவேன்.
கோவையில் அவினாசிலிங்கம் கல்லூரியில்
ஒரு கோர்ஸ் கற்றேன்.:)

ஸ்ரீராம். said...

இது மாதிரி அடுப்புகளை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.  அம்மி, கல்லுரல்..  இவற்றை நகர நாகரீகம் மறந்தே போனது.

KILLERGEE Devakottai said...

அழகிய காணொளி வெள்ளந்தி பேச்சுகள் அருமை அம்மா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா ஶ்ரீராம். எல்லாம் யந்திர மயமான உலகில் அம்மிக்கும் உரலுக்கும்
என்ன வேலை.
அரைப்பது என்பது தெரபிடிக். மனமெல்லாம் கொஞ்சம் தெளியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Geetha Sambasivam said...

இவங்களையே இன்னிக்குத் தான் பார்க்கிறேன். சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்தது இல்லை. நேரம் இருக்கையில் பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள் அப்பா.

எனக்கு அந்த அம்மாவை மிகவும் பிடிக்கும்.
எங்கள் ஊர்ப்பக்கம் இது போலக் களங்கம் இல்லாத மனிதர்களைக் காணமுடியும்.
நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.
நீங்களும் ரசித்துக் கண்டது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இவர்களின் சமையல்களில் விறகடுப்பும், அம்மி, உரல் என்று
பழங்காலப் பொருட்களை உபயோகித்தே செய்வார்கள்.
அதனால் பிடிக்கும். முடிந்த போது பாருங்கள்.

மாதேவி said...

பழையகாலம் மீண்டது அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமே வாழ்க.
இந்தக் கிராமங்களில் சென்று பார்க்க மிக ஆசையாக இருக்கிறது மா.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

கிராமத்து சமையல் - சில காணொளிகளை கண்டதுண்டு. இந்த காணொளியை பிறகு தான் பார்க்க வேண்டும் மா. யூவில் இப்படியான நல்ல பல காணொளிகள் இருப்பது நல்லது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட்,
அதிசயமாக இத்தனை வகைகளில்
உணவு, பயணம், திரைப்படம் என்று
விரியும் உலகம் யூடியூப்.
நிறைய ரசித்துப் பார்க்கிறேன். நன்றி மா.