Blog Archive

Thursday, August 26, 2021

குறும்படம்


வல்லிசிம்ஹன்
இப்படிக் கூட ஒரு தோழமை தொடங்குமா,
ஒரு சினேகம் மலருமா என்று ஆச்சரியப்
பட வைத்த படம்
ஆனால் இயல்பாக இருந்தது.

இருவரும் இள வயதுக்காரர்கள். இருவரும் ஏதோ ஒரு துறையில்
உயர்ந்து இருப்பவர்கள்.
பேசத்தெரிந்தவர்கள். 
படத்தின் நாயக, நாயகி இருவரும் பார்க்கவும் அழகாக,
கம்பீரமாக இருப்பதும்(அதனால் தானே அவர்கள் ஹீரோ ,ஹீரோயின்!!)
ஒருவர் பால் ஒருவர் கவர்ந்திழுக்கப் படுவதின் 
காரணம். இதுவே அவனோ அவளோ
அந்தச் சூழலில் இருந்து மாறுபட்டிருந்தால்
என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்:)

பூனே  மும்பை சாலையில் நடக்கும் சந்திப்பு.
தன் வண்டி திடீரெனப் பழுது படுவதால்
நாயகன், பொதுப் பேருந்தில் ஏற, அங்கு ஏற்கனவே
பயணித்துக் கொண்டிருக்கும், பன்முக ஆய்வாளினி
ரெயினாவைச் சந்திக்கிறான்.  உதயன்.
விவாதத்தில் ஆரம்பிக்கும் சந்திப்பு
நட்பு+ காதலாக மலர்கிறது.
KHAMAKHA   என்றால் Agree and Disagree or Strange Arguement
என்று பார்த்தேன். ஏதோ ஸ்வரம் பாடுவது போல 
இருந்தது எனக்கு. கமகம்...
நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

8 comments:

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் ரசித்தேன் இந்தக் குறும்படத்தை! மிகவும் இயல்பாக, தோழமையாக, ஆனால் ரசனையுடன் நகர்கிறது படம்! ஆனால் கடைசி வரை ரசிக்க வைக்கிறது! பூனே மும்பை நெடுஞ்சாலை எனக்கும் மகிழ்வான தருணங்களைக்கொடுத்திருக்கிறது! அதனால் தான் இந்த அளவு ரசித்தேனோ ! ஒரு அழகிய குறும்படத்தை ரசிக்கக்கொடுத்ததற்கு அன்பு நன்றி!

மாதேவி said...

இயல்பாகவே போகிறது. பாடலும் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
நன்றி மா. உங்களை நினைத்துக் கொண்டேன். உங்கள் மஹராஷ்டிரா நாட்களைப்
படித்த நினைவு.
எனக்கும் பூனா மிகவும் பிடிக்கும்.
மகன் அங்கே இருக்கும் போது அடிக்கடி
சென்று வருவோம்.
அதுவும் மலை உச்சியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம்.
பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு நீர்வீழ்ச்சி.
மிக ரம்யமாக இருந்தது.

இந்தப் படமும் அப்படியே தோழமையோடு
யதார்த்தமாகப் பயணிக்கிறது.
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
எனக்கும் இந்த இயல்பு தான் பிடித்தது. நன்றாக
எடுத்திருக்கிறார்கள்.
மிக நன்றி மா.

கோமதி அரசு said...

மிக நன்றாக இருக்கிறது. குறும்படம்.
நடித்தவர்கள் எல்லோரும் நன்றாக நடித்து இருந்தார்கள்.
பஸ்ஸில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோரும் இயல்பாக இருந்தார்கள்.

//ஒரு சினேகம் மலருமா என்று ஆச்சரியப்
பட வைத்த படம்//


சினேகம் அழகாய் மலர்ந்து இருந்தது உண்மை.

பரீடசைக்கு படிக்கிறாயா? என்று கேட்டு ஆரம்பிக்கும் விவாதம் அருமைதான்.

வெங்கட் நாகராஜ் said...

இந்தக் குறும்ப்டத்தினை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன். நல்லதொரு குறும்படம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான குறும்படம்...

Ranjith Ramadasan said...

மிகவும் அருமை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் https://www.techhelpertamil.xyz