Blog Archive

Sunday, August 29, 2021

காலிஃப்ளவர் பொரியல் கிராமத்து சமையல்

9 comments:

ஸ்ரீராம். said...

அருமை.  கண்கவர் காலிஃப்ளவர் கறி.  எங்கள் பெரியவனுக்கு மட்டும் காலிப்ளவர் பிடிக்காது.  நானும் சின்னவனும் சாப்பிடுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் நன்றி மா.

காலிஃப்ளவர் இங்கே எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால் பஜ்ஜி மாதிரி செய்யணும்.
இவர் செய்வது பார்க்க அருமையாக
இருக்கிறது.

இவர்கள் எல்லாம் நம்மை மாதிரி குழம்பு தனி, பொரியல் தனி
என்று செய்ய மாட்டார்கள் போலிருக்கிறது.
எல்லாமே ஒரே சமையலில்
அடங்கி சப்ஜி மாதிரி செய்கிறார்கள்.
இதுவும் ஒரு முறைதான்,

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

மாதேவி said...

அருமை.
காலிஃப்ளவர் கறி பெரும்பாலும் இப்படித்தான் செய்வோம். பன்னீர் கறி போல வெங்காயம் தக்காளி மசாலாக்கள் வதக்கி அரைத்துகொட்டியும் செய்வதுண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

இலங்கையிலோ, கேரளத்திலோ செய்கிறார்கள்
என்று நினைத்தேன்.
நீங்கள் சொல்வது அதை உறுதிப்
படுத்துகிறது.
தேங்காய்ப் பாலும் விட்டு அருமையாகச் செய்கிறார்கள்.

நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

காலிஃப்ளவர் - இந்தச் சமயத்தில் வாங்குவது சரியல்ல! - அதுவும் தில்லியில். குளிர்காலத்தில் மட்டுமே இங்கே நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் காலத்துக் கேற்ற உணவுதான் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
அன்பு@வெங்கட், வட இந்திய முறையில் காலிஃப்ளவர் இன்னும் நன்றாக
இருக்கும்.
ஆனால் மசாலா தான் பிடிப்பதில்லை.:)
நன்றி மா.

கோமதி அரசு said...

நன்றாக செய்கிறார். இலங்கை சமையல்தான்.
முழுவதும் அப்படியே வேக வைத்து செய்கிறார்.

தேங்காய் போடுவோம், இவர் தேங்காய் பால் விடுகிறார்.

தென்னை மரச் சோலையிலே சமையல் அருமை.