Blog Archive

Monday, February 14, 2022

Village Style தவலை அடை

14 comments:

ஸ்ரீராம். said...

வாணலி தோசை என்பது போல வாணலி அடை..    அந்த மாதிரி அரவை இயந்திரம் என் பாட்டி வீட்டில் இருந்தது.  நானும் அரைத்திருக்கிறேன் அதில்.  ஆட்டுக்கல் எல்லார் வீட்டிலும் உண்டு.  ஸஃஜிலும் அம்மாவுக்கு உதவியாய்த் தொடங்கி அம்மா மேற்பார்வையில் தனியாகவே அரைத்திருக்கிறேன்!


என்னவோ நேற்று சாப்பிட்ட சப்பாத்திக் குருமாவே ஒத்துக்கொள்ளவில்லை!!!  எனவே அடை ஒரு வாரம் போகட்டும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

நலமுடன் இருங்கள்.

பதிவை யூடியூபில் பார்த்ததும்
ப்ளாகில் சேமிக்கலாம் என்று தோன்றியது.
சென்னை வீட்டில் யந்திரம் இன்னும் இருக்கிறது,
ஆட்டு உரலில் சிங்கம் செடிவைத்து விட்டார்:)

30 வருடங்கள் முன்பு வரை
எல்லாம் உபயோகத்தில் இருந்தன.

எனக்கும் பருப்புப் பண்டம் ஒத்துக் கொள்வதில்லை.
ஒத்துக் கொள்பவர்கள் சாப்பிடட்டும் அப்பா.

Geetha Sambasivam said...

தவலை அடை இதே மாதிரி நானும் வாணலியில் செய்து படங்களும் எடுத்து வைச்சிருக்கேன். பகிர முடியாமல் போகிறது. இதையும் பார்த்துக்கறேன்.

Geetha Sambasivam said...

இதே மாதிரித் தான் நானும் பண்ணினேன். ஆனால் இயந்திரம் எல்லாம் இல்லை. மிக்சி ஜாரில் ரவையாக உடைத்துக்கொண்டு தாளிப்பில் இதே போலத் தாளித்துக் கொண்டு தேங்காய் எல்லாம் கீறியோ/துருவியோ சேர்த்துப் பண்ணினேன். விரைவில் போடறேன். :)))))

Thulasidharan V Thillaiakathu said...

வாணலியில் செய்திருக்கிறார்கள் இல்லையா? நம் வீட்டில் தவலையில் இப்படித்தான் முன்பு செய்வதுண்டு. இப்போதும் குழிவான தவாவில்

வீடியோ முழுவதும் பார்க்கலை அம்மா பார்த்துவிட்டு வருகிறென்

கீதா

மாதேவி said...

சூப்பர். நாங்கள் மிக்ஸியில்தான் செய்கிறோம்.

வெங்கட் நாகராஜ் said...

செய்வதை பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது.... வீட்டில் அம்மா இன்னமும் இந்த கல் இயந்திரம் வைத்திருக்கிறார் ஆனால் பயன்படுத்துவதுதான் இல்லை.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இவங்க வெந்தயம் எல்லாம் சேர்த்துருக்காங்க இல்லையா...நான் கற்றதில் வெந்தயம் இல்லை. ஆனால் சூப்பரா இருக்கு. இரண்டு வாரம் முன்ன இங்கு தவலை அடைதான் டிபன்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நீங்கள் முன்பேயே சாப்பிடலாம் வாங்க பதிவில்
பதிந்திருப்பீர்கள் இல்லையா.

ரொம்ப மெனக்கிடணும் பா.
முன்னாடி எல்லாம் தெம்பு இருந்தது.
உங்கள் அம்பத்தூர் வீட்டில் உரல் எல்லாம்
பார்த்த நினைவு இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

இதே மாதிரித் தான் நானும் பண்ணினேன். ஆனால் இயந்திரம் எல்லாம் இல்லை. மிக்சி ஜாரில் ரவையாக உடைத்துக்கொண்டு தாளிப்பில் இதே போலத் தாளித்துக் கொண்டு தேங்காய் எல்லாம் கீறியோ/துருவியோ சேர்த்துப் பண்ணினேன். விரைவில் போடறேன்''

கட்டாயம் போடுங்கள்.
நாமே செய்தால் அதற்குத் தனி மரியாதை தான்.காத்திருக்கிறோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
யாராவது இப்படி எல்லாம் இப்போது செய்கிறார்கள்
என்றாலே அதிசயமாக இருக்கிறது:)

முன்னாடி நம் வீட்டில் இதற்காகவே தவலை
இருக்கும்.
நல்ல கரியடுப்பில் அது மாட்டுக்கு
பொன் முறுவலாக வரும்.
ஒருத்தருக்கு ஒன்றே போதும்.

நல்ல புளி மிளகாய்ச் சட்டினியுடன்
அது உள்ளே போய்விடும்:)
நீங்கள் செய்வதுதான் மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நீங்கள் செய்வதும் மகிழ்ச்சிமா.

குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.

நன்றாகத்தான் இருக்கும் அப்பா செய்தால்.
யந்திரமா.
அம்மாவை அது பக்கத்திலேயே போக விடக் கூடாது.
கையெல்லாம் வலிக்கும் பா.
அது மட்டும் காட்சிப் பொருளாக இருக்க வேண்டியதுதான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,

இவர்கள் ஆந்த்ரா காரம் போட்டு ,மெந்தியம் நிறைய
சேர்க்கிறார்கள்.
அது கசப்பாகும் என்று எனக்குத் தோன்றுகிறது மா.
எப்போதும் போல செய்யுங்கள் மா.